2019 ஆண்டின் வரி சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு ஏற்ற திட்டங்களை பங்கு வர்த்தகர்கள் மற்றும் வணிக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன, ELSS எனப்படும் வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்கள்.

வர்த்தக அடிப்படை மற்றும் தரவரிசைகளின் அடிப்படையில், நீண்ட கால மற்றும் சிறந்த வருவாயைக் கொடுத்துள்ள  பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்து பல்வேறு வணிக நிபுணர்களால் வழங்கப்பட்ட தகவல்கள் தேர்வு செய்து வழங்கியுள்ளோம்.

ஈக்விட்டி சந்தைகள் கணிக்க முடியாத பல அபாயங்களை உள்ளடக்கியிருந்தாலும், பரஸ்பர நிதிகளின் தற்போதைய சந்தை தன்மை மற்றும் சில ஃபண்டுகளின் விலைகளில் சரிவு கண்டு பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது எனினும், முதலீட்டுகளையும் முதலீட்டாளர்களையும் நிறுத்துவதற்கு எந்தவித முகாந்திரம் இல்லைதான் இன்றைய வணிக உலகில்! முதலீட்டாளர்கள் தங்கள் இலக்குகளை மற்றும் பங்குகளில் உள்ள அபாயங்களை உறுதிப்படுத்திக் கொண்டு முதலீடுகளைத் தொடர்ந்தால் நஷ்டத்தை ஈடுசெய்ய வழிவகுக்கும்.

ஈக்விட்டியுடன் இணைந்த பரஸ்பர திட்டங்கள் (ELSS) அல்லது வரி சேமிப்பு திட்டங்கள் என வரையறுக்கப்படுகிறது.
அதாவது முதலீட்டாளர்களின் முதலீடு லாப நோக்கோடும் மற்றும் வருமான வரிகளை சேமிப்பதற்காக ஆனால் நீண்டகால மூலதன வளர்ச்சிக்கு உதவுகின்றன இந்தவகை ஃபண்டுகள்.
இந்தவகை திட்டங்கள் அனைத்தும் அடுத்த  3 வருடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது,  ரூ.1.5 லட்சம்வரை முதலீடு செய்யப்பட்டும் இந்தவகை திட்டங்களுக்கு வருமான வரிச்சட்டம் 80C பிரிவின்கீழ் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

பின்வரும் வருமான வரி சார்ந்த பரஸ்பர நிதித்திட்டங்கள் பங்கு வர்த்தகர்கள் மற்றும் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

1.ஆதித்யா பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 – (Direct Growth) (Aditya Birla Sun Life Tax Relief 96 – Direct – Growth)

1996-இல் இந்த ஃபண்டு தொடங்கப்பட்டது.
பிப்ரவரி 19, 2019வரை, குறிப்பிட்ட இந்த ஃபண்டில்  AUM  எனப்படும் சொத்து மதிப்பு ரூ 7000 கோடியாக உயர்ந்து முதலீட்டாளர்களால் முதலீட்டுகள் செய்யப்பட்டு அதன் ஃபண்டு மேளாலர்களால்  நிர்வகிக்கப்படுகிறது.

Direct Growth ஃபண்டில் கடந்த மூன்று வருட காலத்தை ஒப்பிடும்போது  சராசரியாக 15.6 சதவிகித ஆண்டு வருவாயை கொடுத்துள்ளது.  அதேவேளையில் கடந்த ஐந்து வருட காலத்தில் கிட்டத்தட்ட 20 சதவிகித வருவாயை கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலாக பல ஆண்டுகளாக  மாறுபாடுகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் சமமான அளவில் வருவாயை ஈட்டியுள்ளது இந்த ஃபண்டு.

ஐ.எல்.எல். மற்றும் எஃப்.எஸ். பிரச்சினைகளின் பின்னணியாக தற்போது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உத்தேச நிலமையை அறிந்து. இந்திய ரிசர்வ் வங்கியுடன் பணப்புழக்க விதிகளை எளிதாக்குவதுடன், ஒரு வருட காலத்திற்குள் இந்தத் துறை மீண்டும் எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் பணப் பாய்வுகளை நிர்வகிப்பதன் மூலம் செலவினங்களைக் குறைத்து, முதலீடு மற்றும் வருவாயில் கவனம் செலுத்துகிறார்கள். மியூச்சுவல் ஃபண்டு செக்டரின் முன்னேற்றத்திற்கு இது ஒரு நல்ல அறிகுறியாகும்.

2. ஆக்ஸிஸ் நீண்டகால ஈக்விட்டி ஃபண்ட் (Axis Long Term Equity Fund)

ஆக்ஸிஸ் நீண்டகால ஈக்விட்டி ஃபண்டின் முக்கிய அம்சங்கள் இதன் செலவின விகிதம் (Expense Ratio) 1% க்கும் குறைவாக  மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 9 வருடங்கள் பழமையான வரி சேமிப்பு திட்டமாகும்.
இதன் நிகர சொத்து மதிப்பு பிப்ரவரி 2019வரை 19 ஆயிரம் கோடியாகும்.
கடந்த ஒரு வருடகால சந்தையின் கடினமான சூழ்நிலையிலும் 20 சதவிகிதத்திற்கும்மேல் இந்தத் திட்டம் வருவாயைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஃபண்டின் 40 சதவிகித முதலீடுகள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சார்ந்த துறைகளில் மட்டுமே வர்த்தகமாகிறதும் இந்த‌ ஃபண்டிற்க்கு வலு சேர்க்கிறது.

3.மீரேய் அசட் வரி சேமிப்பு பரஸ்பர நிதி திட்டம். (Mirae Asset Tax Saver Fund – Direct – Growth)

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த ஃபண்டு பல போர்ட்ஃபோலியோ நிர்வாகிகளுக்கு விருப்பமானதாக தேர்ந்தெடுத்து வரத்தகமாவது சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுமார் 1300 கோடி முதலீட்டு சொத்து மதிப்புடன்  வர்த்தகமாகினாளும் மற்ற வரி சேமிப்பு பங்குகளை ஒப்பிடும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் 22 சதவிகித வருவாயைக் கொடுத்து வரி சேமிப்பு முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது இந்தப் பரஸ்பர நிதி திட்டம். மேலும் Expense Ratio எனப்படும் பங்குச் செலவினங்கள் 0.32 என்கிற சதவிகிதத்தில் இருப்பதால். முதலீட்டு  ஆலோசகர்களால் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.

மிகப்பெரிய நிர்வாக நடைமுறைகள் மற்றும் முதலீட்டு சொத்து மதிப்புகளைக் கொண்டுள்ள எச்.டி.எப்.சி. வங்கி ஆக்சிஸ் வங்கியின் சொத்து மதிப்புக்கு அடுத்தார்போல் இந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பங்குகள் இண்டெக்ஸில் முதல் 10 பெரிய நிறுவனங்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கான அபாய அளவு குறைந்தே காணப்படுகிறது.

4.மோதிலால் ஓஸ்வால் நீண்டகால ஈக்விட்டி வரி சேமிப்பு பரஸ்பர திட்டம். (Motilal Oswal Long Term Equity Fund)

2015 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட வரி சேமிப்பு திட்டம் இது.
இந்த வரி சேமிப்பு திட்டத்தில் கடந்த ஒரு வருட கால ஏற்ற இறக்கங்களை கணக்கில் எடுத்தால் மூன்றாண்டு கால வருவாயாக 17 சதவிகிதத்தை கொடுத்துள்ளது. 2019 பிப்ரவரி மாத இறுதியில் கணக்கீட்டின்படி ஆயிரம் கோடிக்கு மேல் நிகரச் சொத்து மதிப்புப் பெற்று 46% மேல்  ஈக்விட்டி மற்றும் நிதி சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது குறிப்பிட்ட இந்த நிதி திட்டம்.

இந்த நிறுவனத்தின் மற்ற திட்டங்களை கருத்தில் கொண்டும் அதன் ஈக்விட்டி வர்த்தகத்தில் உள்ள அனுபவங்களைக் கொண்டும் இந்த வரி சேமிப்பு நிதி திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.

 

5.இன்வெஸ்கோ இந்தியா வரி சேமிப்பு பரஸ்பர நிதித் திட்டம் (Invesco India Tax Plan)

இந்தத் திட்டத்தில்  முதலீட்டாளர்களுக்கு சாதகமான வருவாயை கொடுத்துள்ளதாலும் நீண்டகால அடிப்படையில் வர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்களை சமாளிக்கும் நோக்கத்தோடு கட்டமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் நிலையான மற்றும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான வருவாயைக் கொடுக்கிறது.

பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்போலியோ எனப்படும் Diversified portfolioவால் நிர்வகிக்கப்படுகிறது. இதன்மூலம் எதிர்வரும் காலங்களில் பரஸ்பர நிதி திட்டங்கள் சார்ந்த துறையில் அதன் வருங்கால அபாயங்களைச் சந்தை முறைக்கு ஒத்த விசையில் பயணித்து முதலீட்டாளர்களின் அபாயங்களை குறைத்தும், அவர்களுக்கு சராசரி ஆண்டு வருமானத்தைக் கொடுக்கிறது இந்தப் பரஸ்பர நிதித் திட்டம்.

6.ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் நீண்டகால ஈக்விட்டி பரஸ்பர வரி சேமிப்பு திட்டம் (ICICI Pru Long Term Equity Fund)

19 ஆகஸ்ட் 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திறந்தநிலை வரி சேமிப்பு ஈக்விட்டி பரஸ்பர நிதித் திட்டமானது. செப்டம்பர் 30, 2018ஆம் ஆண்டுவரை  இந்தப் பரஸ்பர திட்டத்தில் 5641.36 கோடி நிகரச் சொத்து மதிப்புடன் பரஸ்பர நிதி சந்தையில் பங்கெடுத்து பயணப்படுகிறது.
வங்கி நிதி நிறுவனங்கள் தானியங்கி தொழில் நிறுவனங்கள் மருத்துவ நிறுவனங்கள் மேலும் ஐ.டி.சி., என்.டி.பி.சி., எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சிமெண்ட் நிறுவனங்கள் என பிரதான முதலீட்டு நிறுவனங்களில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

பங்குவர்த்தகத்தில் இறக்கங்களைச் சந்தித்த முதலீட்டாளர்களுக்கு, பரஸ்பர நிதி திட்டங்கள் சற்று ஆறுதலான வருவாயை ஈட்டிக்கொடுத்தது முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
கடந்த மூன்று வருட காலத்தில் 10.56 சதவிகிதம் முதலீட்டாளர்களுக்கு வருவாயாக கொடுத்துள்ளது இந்த வரி சேமிப்பு திட்டம்.

அதேவேளையில் எச்.எஸ்.பி.சி. வங்கியில் மத்திய நடுத்தர மற்றும் உயர்தர வகையான மியூச்சுவல் ஃபண்ட் large  and midcap fund அறிமுகப்படுத்தப்பட்டு மார்ச் 25வரை விற்கப்படுகிறது.

Open ended எனப்படும் திறந்த நிலை சமபங்குத் திட்டத்தில் அதன் முதலீட்டு மதிப்பில் 0-35 சதவிகிதம் பெரிய மற்றும் மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய பரஸ்பர நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பற்றி,
கடந்த ஏழு மக்களவைத் தேர்தல் சமயத்திலும் பரஸ்பர நிதி மற்றும் பங்கு சந்தையின் செயல்திறன்மீதான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளார் HSBC சொத்து மேலாண்மை தலைமை முதலீட்டு அலுவலர் துஷார் பிரதான், பங்கு மற்றும் பரஸ்பர முதலீடு வணிகத்தில் கடந்த ஒரு வருடங்களாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமல் இருந்தாலும் இதே வருட காலத்தில் அதிகப்படியான நஷ்டங்களைப் பங்குவர்த்தகத்துறை சந்தித்திருந்தாலும், கடந்த பிப்ரவரியில் திட்டமிடப்பட்ட மாத முதலீட்டு பரஸ்பர திட்டத்தில் (Systematic investment plan) 8,095 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(குறிப்பு: இந்த பங்குசார்ந்த கட்டுரை வணிகம் சார்ந்த தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே இங்கு பதிப்பிடப்படுகிறது. வாசகர்கள் முதலீடு செய்யும்முன் தங்கள் நிதி ஆலோசகர்களின் ஆலோசனைகளைப் பெற்று முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.)