உலகமயமாதலின் ஒரு அங்கமாக பிளாஸ்டிக் பொருட்களின் வளர்ச்சி இயற்கையை அழித்து & அறித்து திண்றுகொண்டிருக்கிறது. இன்று நாம் உபயோகிக்கும் பல பொருட்களில் மக்கும் மக்காத வகையில் பிளாஸ்டிக் நுழைந்துவிட்டது. காலப்போக்கில் இயற்கை வாழ்வியலைவிட்டு வெகுதூரம் தள்ளிச் சென்ற மனிதர்கள் இன்று வீட்டுபொருட்களில் சிறு சிறு வழிகளில் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி அதன் தேவையை நிவர்த்தி செய்துவருகின்றனர். மண் பாத்திரங்களில் உணவு சமைப்பது, பானையில் தண்ணீர் குடிப்பபது, மற்றும் மூங்கில் நாற்காலிகள், ஊஞ்சல்கள் என்று முடிந்தவரை இயற்கை எதிராக இல்லாமல் தங்களின் உடல் நலத்தை கருத்தில்கொண்டு பழமைக்கு திரும்புகிறார்கள்.

இந்தவகையில் தண்ணீரை நிரப்பி பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலை ஈடுசெய்வது பெரும் சிக்கல்கள் இருந்துவந்தது. பிளாஸ்டிக்கைத் தவிர எந்த பொருட்களாலும் ஒழுகாத, எளிதில் பழுதாக தண்ணீரை நிரப்புவதற்கான பாட்டிலாக உபயோகிப்பது கடினமாக இருந்துவந்துள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடு பல நாட்களாக கண்டுபிடிக்காமல் இருந்தது.

இந்நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழில் முனைவர் ஒருவர் மூங்கிலாலான, எளிதில் அனைவரும் உபயோகிக்கக்கூடிய, தண்ணீர் பாட்டில் ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இந்த பாட்டில் மூலம் தண்ணீர் தூய்மையானதாகவும் இதுநாள் வரை பிளாஸ்டிக்கில் பயன்படுத்திவந்த முறையை சரி செய்வதுமாக அமைந்துள்ளது. மேலும் இந்த மூங்கில் பாட்டிலில் தண்ணீர் எப்போது குளிர்ச்சியாகவும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிளாஸ்டிக் பாட்டிலைப்போலவே இவற்றையும் கழுவி தேவைப்படும்போது உபயோகிக்கலாம் குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு 450 முதல் 700 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.