இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மகளின் நடன வீடியோவை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ பலரின் கவனம் பெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவரது மனைவி ஹசின் ஜஹான். இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்திவரும் முகமது ஷமி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது மகள் அயிரா, போஜ்புரி பட பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் ஷமி. எனது பொம்மை. அவரது அப்பாவை விட எவ்வளவு சிறப்பாக ஆடுகிறார் என்று அதில் குறிப்பிட் டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏராளமானோர் ஷமி மகளைப் பாராட்டி வருகின்றனர்.