உலகப் புற்றுநோய் தினம், புற்றுநோய் பற்றியும் அதை எதிர்த்து போராடுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கியநோக்கமாக கொண்டு ஆண்டுதோறும்பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து செயல்படுவது வழக்கம். அதுபோல் ‘ நானும் என் மனஉறுதியும்’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாக உள்ளது.

2000- ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த உலகமாநாட்டிலிருந்து புற்றுநோய்க்கு எதிராக உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு போன்றவற்றிக்கு புற்றுநோய் முதன்மை காரணமாக உள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் 70% மக்கள் புற்று நோயால் இறக்கின்றனர்.

புற்றுநோய் என்பது கலங்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபுகளில் ஏற்படும் மாற்றத்தால் உருவாகிறது. புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுஎன்பது மக்களிடையே இல்லாமல் இருப்பதால் தான் மார்பக புற்றுநோய் என்பது மற்ற புற்றுநோய்களை விடவும் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. 2018 ல் புற்றுநோயால் உலகமெங்கும் 9.5 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரித்தற்கு சுற்றுச் சூழல் மாறுபாடு, காற்று மாசு, வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்களே காரணமாகும்

மூன்றில் ஒரு பங்கு இறப்பு 1. உயர் உடல்நிலை குறியீட்டெண் 2. குறைந்த அளவு பழங்கள்,காய்கறிகள் உட்கொள்ளுதல் 3. உடற்பயிற்சி மேற்கொள்ளாமல்இருத்தல் 4.புகையிலை மாற்றும் மது உட்கொள்ளுதல் போன்ற நடத்தை மற்றும் உணவு அபாயங்களால் நிகழ்கிறது. புகையிலையால் 22% மரணம் நிகழ்கிறது.குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கல்லீரல் வீக்கம் ( Hepatitis ) மற்றும் மனித சடைப்புத்துத் தீ நுண்மம் ( Human Papilloma virus ) போன்றவைகள் 25%புற்றுநோய் பாதிப்பிற்கு காரணமாக உள்ளன. இந்நாடுகளில் ஐந்தில் ஒரு நாடு தான் புற்றுநோய் கொள்கைகான ( policy) தரவு வைத்துள்ளன.

புற்றுநோய்க்கான அறிகுறிகள் 1.குடல் அல்லது சிறுநீர்ப்பைகளில் மாற்றம் 2.அசாதாரண ரத்த போக்கு 3. மார்பகம் அல்லது உடலில் வேறுபகுதிகளில் கட்டி உண்டாவது 4.அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம் 5.இருமல் அல்லது மூச்சு திணறல். இவ்வறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனே மருத்துவரை அணுகுவதே சிறந்த தீர்வாகும். சிலப்பல அறிகுறிகள் தோன்றியவுடனேயே மருத்துவப் பரிசோதனைகள் மூலம், ஆரம்பநிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்தால் உரிய சிகிச்சைப் பெற்று உயிரிழப்பை தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள்:1.அதிக உப்பு கலந்த உணவுகள்,2.பதப்படுத்தப்பட்ட ,3.புகையூட்டப்பட்ட இறைச்சிகள்,4.கரி அடுப்பில் க்ரீல்செய்யப்பட்ட உணவுகள்,5.மைக்ரோவேவபிள் பாப்கார்ன்,6.ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள்,7.குளிர்பானங்கள்,8.பேக் செய்யப்பட்ட உணவுகள்,9.செயற்கையானஇனிப்புகள் போன்றவை

போதிய விழிப்புணர்வு இல்லாதது, உரிய பரிசோதனைகள், மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாமை, மருத்துவர், நோயாளி விகிதாச்சாரம் குறைவு போன்றவை அதிகளவில் புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாவதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. புற்றுநோயை தாமதமாக கண்டறியவதால் ஒவ்வொரு ஆண்டும் 7லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் உயிரிழக்கிறார்கள்.

2020 ம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.3 லட்சத்திற்கும் அதிகமாகவும், புற்றுநோயால்உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 8.8 லட்சத்திற்கும் அதிகமானதாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் சுகாதார செலவினங்களில் ஏற்படும் வறுமை இரட்டிப்பாகியுள்ளது . புற்றுநோய் போன்ற நோய்கள் ஒரு குடும்பத்தை வறுமைநிலைக்கு தள்ளுகின்றன. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மையம் பற்றி விழிப்புணர்வு இல்லாத நடுத்தர குடும்பங்கள் , புற்றுநோயை குணப்படுத்தும் சில உயர்மருத்தவ மையங்களுக்கு பணத்தை வழங்குவதால் அந்த குடும்பமானது வறுமை கோட்டிற்கு தள்ளப்படுகிறது .ஆனால், இந்தியா போன்ற நாடுகளில், புற்றுநோய்(சிகிச்சை) என்பது, குறிப்பாக வறுமையின் விளிம்பில் வாழ்கிற குடும்பங்களுக்கு, சமநிலையைப் பிடுங்குவதற்கான முக்கிய ஆபத்து காரணியாக திகழ்கின்றது.வறுமை மட்டும் புற்றுநோயை உண்டாக்குவதில்லை, புற்றுநோயும் வறுமையை உண்டாக்குகிறது. கேன்சர் அகதிகள் “புற்றுநோய் வறுமை” என்ற மிகவும் அவலமானநிலைக்கு தள்ளப்படுகின்றனர்

புற்றுநோய்க்கு மருத்துவத்தின் மூலம் முழுமையான ஒரு தீர்வு கிடைக்காவிட்டாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் இந்த நோயோடு இணைந்துள்ள சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துக் காரணிகளை நம்மால் குறைக்க முடியும். ஒருபுறம் மருத்துவத்திற்கு செலவு செய்வதால் வறுமை நிலைக்கு தள்ளப்படுவதும் ,மறுபுறம் மருத்துவம் மேற்கொள்ளாமல் இருந்தால் இறப்புகளும் நேரும் என்பதும் நிதர்சனம்.