#90sKidsRumours  என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் 90-களில் பிறந்த இளைஞர்களால் கடந்த இரண்டு நாட்களாக  ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்படும் அனைத்தும் நிஜ சமூகத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளதா  என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

90-களில் பிறந்த இளைஞர்கள்  தங்கள் சிறுவயதில் கேள்விப்பட்டு நம்பிய சில புரளிகளை #90sKidsRumours என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அதில் புரளிகளை பதிவிட்டும் பகிர்ந்தும் வருகின்றனர்.  இது முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த 90-களில் பிறந்த இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது இந்த ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கின்றது.

 

நம்மிடம் கூறப்பட்ட பல புரளிகள் அவர்களிடமும் கூறப்பட்டுள்ளன என்பது 90ஸ் கிட்ஸ்களின் பெரும் ஆறுதலாக அமைந்திருக்கிறது என்பதனை இந்த #90sKidsRumours நிரூபிக்கின்றது. 90களில் பிறந்தவராகள் என்றாலே தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள் என்று சமூகவலைத்தளங்களில் அவர்களே பரப்புகின்றனர். இதை பார்க்கின்ற 20ஸ் கிட்ஸ்களும் என்னடா இது இவ்வளவு மக்கு மங்குணிகளாக இருந்துருக்கிறார்கள் என்று கேட்டிருப்பார்கள்.

 

இப்போது பிறக்கின்ற குழந்தைகள் எதைச் சொன்னாலும் கேள்விகள் எழுப்புகின்றனர், ஆனால் நாம் அப்படியா கேள்வி கேட்டோம்? அந்த அளவிற்கு வெகுளியாக யார் என்ன சொன்னாலும் அதை நம்புவோம் என்பது 90ஸ் கிட்ஸ்களின் சிறப்பம்சமாகும்.

சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும் விஷயங்களை பற்றி சமூக மக்களிடம் கேட்டால் அவர்கள் அதைப்பற்றி தெரியாமல் முழிக்கின்றனர்  என்பதும் நிதர்சனம். இவ்வாறு சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகும் அனைத்தும் நிஜ சமூகத்தில்  ட்ரெண்ட் ஆவதில்லை.

அந்த காலத்தில் நம்பப்பட்ட அனைத்தும் புரளிகள் என்பதை தாண்டி அவை 90களில் பிறந்த இளைஞர்கள் மீதி திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகள் என்றே கூற வேண்டும். இப்படி பல்வேறு  காலங்களில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததும் அவை அப்பொழுது குழந்தைகளாக இருந்தவர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்ததும் இன்று அவை மதம் சார்ந்த ஓர் நம்பிக்கையாக அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்  எனலாம்.