மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகத்தில் 200 புள்ளிகள் உயர்ந்து 39,565.82 புள்ளிகளாக உயர்ந்தது.

பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், கோல் இந்தியா, ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, எச்.யூ.எல், இண்டஸ்ஐண்ட் பாங்க், சன் பார்மா, வேதாந்தா, ஆக்சிஸ் பாங்க் மற்றும் ஆசிய பீஸ்ட்ஸ் ஆகியவற்றின் பங்கு விலைகள் 2.21 சதவீதம் உயர்ந்துள்ளன.டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ, இன்ஃபோசிஸ், ஓ.என்.ஜி.சி மற்றும் டிசிஎஸ் ஆகியவை 1.50 சதவீதம் முதல், 5 சதவீதம் வரை சரிந்தன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் நேற்றைய வர்த்தகத்தில் அதன் தாக்கம் எதிரொலித்தது எனக் கூறலாம். அதன்படி மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1421 புள்ளிகள் உயர்ந்து 39352.67 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி குறியீடு எண்  421.10 புள்ளிகள் உயர்ந்து 11828.30 புள்ளிகளிலும்  இறுதி வர்த்தகத்தை நிறைவு செய்தது.

நேற்றைய பங்குச் சந்தையில் எஸ்பிஐ, யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், எல் அண்டு டி, ஐசிஐசிஐ வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, ஆர்ஐஎல், ஹீரோ மோடோகார்ப், ஹெச்டிஎப்சி, வேந்தாந்தா, ஆசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவற்றின் பங்கு மதிப்பு சுமார் 7 சதவீதம் அதிகரித்தது.அதேசமயம் பஜாஜ் ஆட்டோ மற்றும் இன்போசிஸ் பங்குகளின் மதிப்பு ஒரு சதவீதம் சரிந்து இருந்தது.

வரும் வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வரும்வரை, பங்குச் சந்தையில் இப்படி ஏற்றம் இருக்கும் என்று சில வல்லுநர்கள் கணிக்கின்றனர்.மேலும் நேற்றைய வர்த்தகத்தில்  இந்தியா புல்ஸ் ஹவுஸிங் , இந்தஸ்இந்த் பாங்க், அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன.

டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஜீ என்டர்டெயின்மன்ட், பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை நஷ்டத்தைச் சந்தித்தன.

பொதுத்துறை வங்கிகள், இன்ஃப்ரா, ஆட்டோ, எரிசக்தி, எஃப்எம்சிஜி, உலோகம் மற்றும் மருந்து ஆகியவற்றின் பங்குகள் ஏற்றத்துடன்  முடிவடைந்தன.மும்பை பங்குச்சந்தையில்  திங்கள்கிழமை வர்த்தக முடிவில், பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிகர லாபம் ₨ 1,51,86,312.05 கோடியாக இருந்ததுஅதேவேளையில் மிட்கேப் எனப்படும் பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிகர லாபம் 7.48 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

வாரத்தின் முதல் நாளான நேற்று 2,286 பங்குகளில் வர்த்தகம், 1,718 முன்னேற்றம் கண்டது, 440 சரிந்தது மற்றும் 129 மாறாமல் இருந்தது.ஆசிய பங்குச் சந்தைகளில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் முதலீடுகள் தொடர்கின்றன.

பாஜக கூட்டணி 302 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல்2019 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து, வாக்குப்பதிவுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள், பாஜக-வுக்கு ஆதரவாக வந்துள்ளன. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளால், பி.எஸ்.இ சென்செக்ஸ், நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.வங்கித் துறை, நிதி சேவைத் துறை, வாகனத் துறை மற்றும் உலோகத் துறைகளின் பங்குகள்  ஏற்றம் கண்டுள்ளன.

லார்சன் & டூப்ரோ, எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ, மாருதி சுசூகி இந்தியா மற்றும் மகிந்திரா & மகிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.49 முதல் 4.60 சதவிகதம் வரை உயர்ந்துள்ளன.

துறைவாரியான நிலவரத்தைப் பார்க்கும் போது ஐ.டி., மற்றும் டெக் துறை பங்குகளைத்தவிர கட்டுமானம், ரியாலிட்டி, மெட்டல், ஆற்றல், எண்ணெய் மற்றும் 0எரிவாயு, மின்சாரம், ஆட்டோமொபைல், அங்கி, நிதி டெலிகாம், எனா அனைத்துத் துறைகளும் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 60 பைசா உயர்ந்து 69.92 ரூபாயாக உள்ளது.இதுவே ஐ.டி. பங்குகள் சரிவுக்கான காரணமாக உள்ளது.

சர்வ்தேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.57 சதவீதம் குறைந்து பேரல் 72.21 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 0.18 சதவீதம் குறைந்து 62.76 டாலராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது