மின்னணு வாக்கு இயந்திரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது என்றும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்கு இயந்திரங்கள் பழைய தொழில்நுட்பத்தில் இயங்குகிறது என்று சாம் பிட்ரோடா எனும் தொழில்நுட்ப வல்லுநர் கூறி இருக்கிறார். அவர் தேர்தல் ஆணையத்திடம் மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதைக் காப்பாற்ற 50 சதவீதம் வாக்குப்பதிவு பழைய முறையான வாக்குச் சீட்டு மூலம் நடத்தப்படவேண்டும்.

நீங்கள் வாக்கு இயந்திரங்களில் சின்னங்களுக்கு ஒதுக்கப்பட்ட எண் வரிசைக்கு எதிராகப் போலி வரிசையை உருவாக்க முடியும். தர்க்கப்படி இது சாத்தியம். ஒரு சாஃப்ட்வேர் இஞ்சீனியராக இதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். என எக்கனாமிக்ஸ் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார். அவர் மேலும், தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரங்களில் சில புதுப்பித்தல்கள் செய்தன ஆனால் அவை பேட்ச்சஸ் எனும் மிகச் சிறிய விஷயங்கள்.

தவறுகள் நடந்திருக்கும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் எனக்கு வாக்கு இயந்திரம் கொடுத்தால் நான் அது தவறாகக் கையாளப்பட்டிருக்கிறதா என்று சொல்லமுடியும் என்றார்.

சாம் பிட்ரோடா இந்தியாவில் தொலைத்தொடர்பு புரட்சியை ராஜீவ்காந்தி அரசு இருந்த காலத்தில் கொண்டுவந்தவர். இன்று அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி அமைப்பின் உறுப்பினர் மற்றும் எலெக்ட்ரானிக் வாக்கு இயந்திர தொழில்நுட்ப ஆராய்ச்சியிலும் இருக்கிறார்.

பிட்ரோடா மூன்று முக்கிய சிக்கல்களைச் சொல்கிறார். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரங்கள் பல வருட பழமையானவை. தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு வருடத்திலேயே பல தொழில்நுட்பங்கள் வழக்கற்று போய்விடுகின்றன.

இரண்டாவது இந்த இயந்திரங்களை இந்தியாவில் நிலவும் வெயில் தூசி போன்ற கடுமையான சூழல்களில் கையாளுவது கடினம். மூன்றாவது எங்கு இந்த இயந்திரங்களை வைப்பது யார் இதைக் கொண்டு செல்வது, லாரிகளில் கொண்டு செல்லும்போது என்ன ஆகும், யார் அதை இயக்குபவர்கள்? இவையெல்லாம்

மிக சிக்கலான பிரச்சனைகள். கிராமப்புற பகுதிகளில் இதை பயன்படுத்துவது இன்னும் கடினம். ஆகவே என்னைப் பொறுத்தவரை வாக்கு இயந்திரங்களைப் பற்றிய கவலைகள் மிகவும் நியாயமானது.” என்றார்.

இத்துறையில் பலவருட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதால். இதைப்பற்றிய பொதுவான கருத்துச்சொல்லும் தகுதி எனக்குள்ளது. எனக்கு வாய்ப்பு வழங்கினால் தற்போதிருக்கும் இயந்திரங்களை முற்றிலும் மாற்றியமைப்பேன்.

இந்தியாவைப்போல உலகில் எந்த ஒரு நாடும் இவ்வளவு வாக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இன்னமும் வாக்குச் சீட்டு முறைதான். ஆதலால் இந்திய தேர்தல் ஆணையம் 50% வாக்குகளை வாக்குச் சீட்டு முறையில் நடத்தவேண்டும். அந்த வாக்குகளை எண்ண இரண்டு வாரங்கள் ஆகலாம். ஆனால் இந்திய மக்கள் தேர்தல் ஆணையத்தின் மீதும் தேர்தலில் மீதும் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் இப்படிச் செய்வது சரியானது அல்ல. மக்களின் குரலைக் கேளுங்கள் அவர்கள் கவலைக் கொண்டால், அந்தக் கவலையை போக்குவது தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்”. என பிட்ரோடா கூறினார்.