முன்பு எல்லம் நாட்டு நடப்பை பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்றால், செய்திதாள் மற்றும் செய்தி சேனல்களை பார்த்தால்தான் தெரியும். ஆனால், தற்போதுள்ள டிஜிட்டல் உலகில் செய்திதாளகளைவிடவும், செய்தி சேனல்களைவிடவும் விரைவாக அப்டேட் ஆவது சமூக வலைதளங்களில்தான். அரசியல் கட்சி தலைவர்களையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளையும் மிகவும் காமெடியாகவும், அதேநேரத்தில் விழிப்புணர்வுடனும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம்வரை, பாமர மக்கள் முதல் பாரத பிரதமர் வரை அனைவரையும் பற்றி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது. அந்தவகையில் சமூக வலைதளங்களில் இன்றைக்கு டிரெண்டான செய்தி என்வென்று தெரிந்துகொள்ள சமூக வலைதளத்திற்குள் நுழைந்தேன்

நுழைந்தவுடனே, “அமெரிக்காவுல மைக்ல் ஜாக்‌ஷன் கூப்பிடாக… ஜப்பன்ல ஜாக்கிஜான் கூப்பிடாக… என்னடி கலர்கலரா ரீலா விடுற” அப்படினு நிறைய நெட்டிசன்கள் கமெண்ட் பண்ணிட்டு இருந்தாங்க… யார இப்படி கமெண்ட் பண்ணுறாங்கனு பார்க்கபோன… அட நம்ம நாட்டோட பிரதமர் மோடிய வச்சிதான் கமெண்ட் பண்ணிட்டு இருக்காங்க… அப்படி அவரு கமெண்ட் பண்ணுற அளவுக்கு என்ன பண்ணுனாருனு நான் கேட்டத்துக்கு, “ஒரு விஷயமா ரெண்டு விஷயமா? அவரு பண்ணுற எல்லாமே கமெண்ட் பண்ணுறமாறிதான் இருக்குனு” என்னோட போஸ்டுக்கு ஒரு கமெண்ட் வந்தது. அப்பதான் நியாபகம் வந்தது.

“மேகங்களுக்கு இடையே விமானங்கள் சென்றால் ரேடாரில் அது தெரியாது” என பிரதமர் மோடி அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து சர்ச்சையைக்குரிய பல விஷயங்களை பேசிவரும் பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

சரி, பிரதமர் மோடி இப்ப அப்படி என்னதான் பண்ணுறானு நானே இன்டெர்நெட்ல தேடி பார்க்கும்போதுதான் தெரிஞ்சது. சமீபத்தில் நியூஸ் நேஷன் டிவிக்கு மோடி அளித்த பேட்டிதான் இதுக்கு காரணம் என்று. அப்படி என்ன காரணம் பாப்போமா?

“1990களின் தொடக்கத்திலேயே நான் டிஜிட்டல் பேட் வைத்திருந்தேன். இப்போது அனைவரும் அதனைப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் 1980களிலேயே நான் டிஜிட்டல் கேமரா வைத்திருந்தேன். 1987-88களில் அத்வானியை டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து டெல்லிக்கு அந்த போட்டோவை அனுப்பினேன். நான் எடுத்த கலர் போட்டோவை பார்த்து அத்வானி ஆச்சரியப்பட்டார்.” என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நியூஸ் நேஷனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேட்டிதான் தற்போது பசியிலிருந்த நெட்டிசன்களுக்கு உணவளிப்பதுபோல அமைந்துள்ளது.

டிஜிட்டல் கேமரா வைச்சிருந்தது குத்தமாயா அப்படினு கேட்கலாம்னு பார்த்தா? இந்தியாவில் டிஜிட்டல் கேமரா, டிஜிட்டல் பேட் ஆகியவை 1990களுக்குப் பின்னர்தான் அறிமுகமாகியதாகவும், 2000ஆம் ஆண்டுகளில்தான் இவை அன்றாடப் பயன்பாட்டு பொருட்களில் ஒன்றானது என்றும் வரலாறு கூறுகிறது. ஆனால் பிரதமர் மோடி 1980களிலேயே டிஜிட்டல் கேமரா, டிஜிட்டல் பேட் தாம் வைத்திருந்ததாக கூறியிருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் அதே பேட்டியில் தாம் எம்.எல்.ஏ.வாகும் வரை தமக்கு வங்கிக் கணக்கே இல்லை என்றும் எம்.எல்.ஏ. ஆனபோதுதான் கொஞ்சம் பணம் கிடைத்தது எனவும் மோடி கூறியுள்ளார். இதை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், 1980களில் ஒரு சிலரிடமே இருந்த மிகவும் விலை உயர்ந்த டிஜிட்டல் கேமராவை கையில் பணமே இல்லாத ஏழைத்தாயின் மகன் மோடி எப்படி வைத்திருந்தார்? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தியாவில் இ-மெயில் அறிமுகம் செய்யப்பட்டதே 1995களில்தான் என்கிறபோது அதற்கு முன்னரே மோடி எப்படி டிஜிட்டல் பேட் வைத்திருந்தார் எனவும் அதில், இ மெயிலை முதன்முதலில் யாருக்கு அனுப்பினார் எனவும் மோடியின் இ-மெயில் ஐடி டீ ஸ்டாலா? எனவும் அடுக்கடுக்கான கிண்டலான கேள்விகளை முன்வைக்கின்றனர் நெட்டிசன்கள். இன்னும் ஒருபடி மேலேபோன நெட்டிசன்கள், “ஆளே இல்லாத கடையில யாருக்கு பா நீ டீ ஆத்துற” அப்படினுற மாறி “இ-மெயிலே அறிமுகபடுத்தாதபோது, நீங்க யாருக்குபா மெயில் அனுப்பனிங்க மோடி ஜீ” என்றும் கமெண்டுகளைத் தெறிக்கவிடுறாங்க நெட்டிசன்கள்.

மோடியின் இந்தப் பேட்டியைத் தொடர்ந்து இப்போது கூகுள்தான் படாதபாடுபடுகிறது. “மோடி அப்படி பேட்டி கொடுத்ததுக்கு நான் என்னயா பன்னுவேன்” அப்படினு கூகுளே வாய்விட்டு கதறிடும்போல அந்த அளவுக்கு நெட்டிசன்கள் கூகுளில், இந்தியாவில் டிஜிட்டல் கேமரா எப்பொழுது அறிமுகபடுத்தப்பட்டது? இ-மெயில் இந்தியாவுக்கு வந்தது எப்போது? என தேடித் தேடி சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.