மும்பை நகரத்தின் மத்தியில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் ஒரு யோகா மையம் அமைந்துள்ளது. அந்த யோகா மையத்தில் ரிஷி என்பவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உறுப்பினராக உள்ளார். பாய் விரிப்பு மற்றும் ஒருங்கமைவு பணிக்காக விடியற்காலையிலேயே ரிஷி யோகா மையத்திற்கு வருவது வழக்கம்.

அந்த யோகா மையமானது கிரண் மற்றும் லீனா தம்பதியினரால் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த தம்பதியினர் நீண்ட நாட்களாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்கிறார்கள். ரிஷி தன்னுடைய பணிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடியற்காலையில் வருவது இயல்பான ஒன்று.

கிரண் இல்லாத அப்படியான ஒரு சனிக்கிழமையில் ரிஷியின்மேல் ஆர்வம் கொள்கிறாள் லீனா. தொடர்ந்து ஒருமாத காலத்திற்கு இந்த இணக்கமான பாலியல் உறவு நடைபெறுகிறது. ரிஷி தன்னுடைய சுயநினைவிற்கு வந்தபிறகு அதாவது தனக்கு லீனாவுக்குமான உறவின் ஆணி வேரை கண்டுபிடித்தப் பிறகு லீனாவிடமிருந்து விலக நினைக்கிறார். பின்பு திருமணம் செய்வதற்காக வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். இதனை அறிந்த லீனாவிற்கு ரிஷியின் மேல் கடுங்கோபம் ஏற்படுகிறது. ரிஷியின் மேல் எந்தவித கருணையும் இன்றி தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என்று போலீஸில் தெரிவிக்கிறார். பின்பு ரிஷி கைதுசெய்யப்படுகிறார்.

தன்னுடைய வாழ்க்கையில் பல வாரங்கள் சிறையில் கழிக்கிறார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அவரின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக சிதைகிறது. அவர் வேலை இழக்கிறார், நண்பர்களை இழக்கிறார். சமூகத்தை நேரடியாக  எதிர்கொள்ள மறுக்கிறார்.

பின்பு வாஸ்டாப் அறக்கட்டளை மூலம் பல மாதங்களுக்குப் பிறகு இயல்பான நிலையை பெறுகிறார். இந்த வாஸ்டாப் அறக்கட்டளையானது தவறான வழக்குகளில் சிக்குண்ட ஆண்களை உணர்வுகளின் வழியாக பலப்படுத்தி இயல்புநிலைக்கு கொண்டுவருகிறது. மேலும் ஆண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு போராடிவருகிறது.

வாஸ்டாப் அறக்கட்டளையைச் சேர்ந்த அமித் கூறுகையில் ‘ரிஷி மீது இழைக்கப்பட்ட குற்றத்திற்கு அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார், அவரைத் தேற்றுவது பெரும்பாடாகிவிட்டது’ என்றார்.

‘ஒரு காலத்தில் பெரும்பாலான தவறான வழக்குகள் அனைத்தும் வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமைகளாக இருந்தது. ஆனால் இன்று இணக்கமான பாலியல் உறவில் ஈடுபட்டப்பிறகு அதை பாலியல் வன்கொடுமையாக மாற்றி ஆண்களில் வாழ்க்கையில் பெண்கள் விளையாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில்தான் பாலியல் சார்பிலிருந்து பாலியல் நடுநிலை குறித்த கண்ணோட்டத்திற்குச் சமூகத்தை எடுத்துச்செல்ல இந்த அமைப்பை உருவாக்கினோம்’ என்கிறார் அமித்.

இந்த அமைப்பு 2005ஆம் ஆண்டு யாஹூ குரூப் மூலமாக உருவாக்கப்பட்டது. அப்போது வரதட்சணை கொடுமை என்று சொல்லப்பட்டு ஆண்கள்மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை முறையாக வாதாடி வெற்றி கண்டுள்ளது. ஒரு சிறிய அமைப்பு இன்று பல தன்னார்வாளர்களும் பல்வேறு கிளைகளாகப் பிரிந்து வளர்ந்துள்ளது.

‘இந்த அமைப்பின் நோக்கம் பெண்களுக்கு எதிராகவோ அல்லது பெண்ணியத்திற்கு எதிராகவோ இயங்குவதில்லை, மாறாக ஆண்களுக்கு மறுக்கப்படும் உரிமையை பெற முயல்கிறது என்கிறார்’ அமித்.

நன்றி: timesofindia
தமிழில்: சந்தோஷ்