“இன்டர்ஸ்டெல்லர் தொழிநுட்ப நிறுவனம்” (Interstellar Technologies)

இன்டர்ஸ்டெல்லர் தொழிநுட்ப நிறுவனம் விண்வெளிக்கு ஏவுகணைகளை அனுப்புவதற்கு ஜப்பானின் முதலாவது தனியார் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இது கடந்த 2019, மே 4-ல் மோமோ-எஃப்3 (Momo-F3) என்ற வெற்றிகரமான செயற்க்கைகோளை விண்ணில் ஏவப்பட்டது

இன்டர்ஸ்டெல்லர் 2017 ல் தனது முதல் கட்ட தயாரிப்பில் மோமோ என்ற ஏவுகணையை விண்ணில் ஏவ முயற்சித்தபோது தொலைதொடர்பு கோளாரின் காரணமாக 66 விநாடிகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. இது வெற்றிகரமாக கருதப்படவில்லை என்றாலும் அடுத்ததாக ஜப்பானிடமிருந்து மோமோ 1 என்ற ஏவுகணையைத் தயாரிக்க அனுமதி வந்தது.

தனது இரண்டாவது முயற்சியில் ஒருசில இயந்திரக்கோளாரின் காரணமாக ஏவுகணையை ஏவப்பட்ட ஒருசில விநாடிகளிலே தனுது உந்து சக்தியை இழந்து முன்னோக்கி செல்லமுடியாமல் வெடித்து பூமியில் விழுந்து நொறுங்கியது.

இன்டர்ஸ்டெல்லர் தொழிநுட்ப நிறுவனம் தனுது முயற்சியை கைவிடாமல் தனது மூன்றாவது முயற்சியான மோமோ -எஃப்3 (Momo-F3) வெற்றிகரமான மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மோமோ -எஃப்3 2019, ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று சொல்லபட்டது ஆனால் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பில் கோளாறு இருந்தது பிறுகு அதை சரி செய்து மீண்டும் விண்ணில் ஏவ நினைத்தபோது மோசமான வானிலை மற்றும் அதிவேக காற்றுவீச்சு காரணமாக நிறுத்தி வைக்கபட்டது.

இறுதியாக 2019,மே 4 ல் விண்ணில் ஏவப்படும்போது 10 வினாடிகளுக்கு முன்பு ஒழுங்கின்மையை கண்டறியப்பட்டு பிறகு தானாகவே கவுண்டவுன் நிறுத்தி வைக்கப்பட்டது. இது நீண்ட நேரம் நீடிக்காமல் 45 நிமிடங்கள் கழித்து ஏவப்பட்டது. $ 440,000 மொமோ ஏவுகணை 32 அடி (10 மீட்டர்) உயரமும் ஒரு மெட்ரிக் டன் எடையைக் கொண்டிருக்கும் ஒரு சிறிய ராக்கெட் ஆகும். இது ஏவகணைகளின் சோதனை என்பதால் மோமோ -எஃப்3 ல் எந்த ஒரு அறிவியல் சோதனைகளும் இல்லை. இதனைதொடர்த்து இன்டர்ஸ்டெல்லர் தொழிநுட்ப நிறுவனம் மோமோ -எஃப்3 யை மேம்படுத்துவதற்கு “ஜீரோ” என்ற புதிய செயற்க்கைகோளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது 2020 ல் சோதனை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது இன்டர்ஸ்டெல்லர் தொழிநுட்ப நிறுவனம்.Momo-F3.