சனிக்கிழமை வியன்னா பூங்காவில் நடைபெற்ற மாரத்தான் பயிற்சி போட்டியில் பங்கேற்ற எலியாட் 26.2 மைல் தூரத்தை ஒரு மணி 59நிமிடம் 40 விநாடிகளில் கடந்து புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.
34 வயது நிரம்பிய கென்ய  ஒலிம்பிக் வீரரான எலியாட் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ‘பெர்லின் மாரத்தான்’ போட்டியில் 42 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி ஒரு நிமிடம் 59 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். அவரது முந்தைய சாதனையை அவரே மீண்டும் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 2.5 நிமிடத்துக்கு ஒரு கிலோமீட்டர் என்ற வேகத்தைச் சராசரியாகத் தக்கவைத்து இலக்கை அடைந்துள்ளார்.
இதில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் கடந்த 16 ஆண்டுகளில் மாரத்தானில் நிகழ்த்தப்பட்ட எல்லா சாதனைகள் கென்யா மற்றும் எத்தோப்பியா வீரர்களே நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
இதுவரை எலியாட் பங்கேற்ற 12 மாரத்தான் போட்டிகளில் 11 முறை வெற்றிப்பெறுள்ளார்.இவரை மாராத்தான் ஜாம்பவான் என உலகமே புகழ்ந்து வருகிறது.