பல அபூர்வங்கள நிறைந்த இந்த உலகில் பல நாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பலவிதமான வெற்றியை கண்டுள்ளார்கள். இருப்பினும், இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது இந்தியாவானது இன்றும் பல அதி நவீன தொழில்நுட்பத்தில் ஆர்வத்தைக்காட்டி தனது ஆராய்ச்சிகளின் வெற்றியை முன்வைத்துள்ளது. இதனால் உலக நாடுகளின் பார்வை நம் இந்தியாவின் பக்கம் திரும்பிள்ளது. எனவே, பலவிதமான கோணங்களில் ஆராய்ந்து எந்தவித சேதமும் இல்லாமல் இத்தகைய வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த நம் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு நாம் பெரிதும் நன்றிகூற வேண்டும்.

உலக நாடுகளின் பார்வை தற்பொழுது இந்தியாவின் பக்கம் திசைதிரும்பிள்ளது, இதற்குக் காரணம் மே 22, 2019 அன்று கார் நிக்கோபார் தீவுகளில்(Car Nicobar Islands) இருந்து இந்திய இராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரம்மோஸ்(BrahMos) ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இது ஒலியைவிட வேகமாக செல்லும் ஒரு கப்பல் ஏவுகணையாகும் (supersonic cruise missile-Mach 2.8). இது சுறுசுறுப்பான துப்பாக்கிச் சூட்டிற்காக, இந்திய ராணுவப்படை, கப்பற்படை, விமானப்படை மற்றும் பல நிறுவனுங்களுடன் இணைந்து இச்சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இந்த பிரம்மோஸ் ஏவுகணை அணைத்து விதமான சேவைகளுக்கு ஒத்துழைப்பு தரும்வகையில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 270 கிலோ

மீட்டர் தூரத்திற்கு தனது குறிக்கோளைத் துல்லியமாக செய்து முடிக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் சோதனையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. இதனால் இது நவீன போர்க்களத்தில் பெரும் படைபெருக்கியாகும்.

பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO  Defence Research and Development Organisation), மற்றும் ரஷ்யாவின் என்பிஒ மஷிநோஸ்ட்ரோனியா( NPO Mashinostroyeniya) இணைந்து உருவாக்கிய ஏவுகணையாகும். இதனால் இதற்கு இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியின் பெயரையும், ரஷியாவின் மாஸ்க்வா நதியின் பெயரையும் இணைத்து “பிரம்மோஸ்” என உருவாக்கப்பட்டதாகும். பிரம்மோஸ் ஏவுகணையால் இன்னும் நம் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் பக்கபலமாக இருக்கும் என அறிய முடிகிறது.

பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கும் முயற்சியை முன்வைத்தவர்: நமது இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா். ஏபிஜெ அப்துல்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.