சுதந்திர இந்தியாவில் சமதர்மம், ஜனநாயகம், மக்களாட்சி என்ற அடிப்படைக் கோட்பாடுகளோடு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் என்பது கடந்த சில ஆண்டுகளாக பண பரிமாற்ற திருவிழா போன்ற மாயைப் பெற்று, பெரும் அதிகார ஊடகங்கள் மற்றும் அரசியல் வியாபாரிகள் ஒத்துழைப்பினால், வணிக வியாபாரம்போல நடைபெற்று வரும் இந்தத் தேர்தல் என்பது மக்களின் வாக்கு வங்கியின் சக்தியைவிட கார்ப்பரேட்டுகளின் வியாபார யுக்திகளாலும். இணையவழி பிரச்சாரங்களாளும் பெரியதொரு மாற்றத்தினை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது இன்றைய பாராளுமன்ற தேர்தல் கள நிலவரங்கள்.

விருவிருப்பாக நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களால்‌ விழாக்கோலம் பூண்டுள்ள இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை என 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள இன்றைய தினம் நாட்டில் ஆளுங்கட்சியாக திகழும் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பரபரப்பாக பேசப்படும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது இன்றைய தேர்தல் பிரச்சார சூழ்நிலையில்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போதும் ( 7 ஏப்ரல் 2014) இதே நாளில்தான் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஊழல் கறைபடிந்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றி குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விலைவாசியைக் கட்டுக்குள் வைக்கும் எனவும், விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மற்றும் ராமர் கோவில் கட்டப்படும் மேலும் இந்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும். இன்னும் பல வாக்குறுதிகளைக் கொடுத்து!

இந்திய பாராளுமன்ற அரசியலமைப்பு வரலாற்றிலேயே பாஜக என்னும் கட்சியை ஒரு மிகப்பெரும் அங்கீகாரத்தோடு கடந்த பொதுத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு, அதிக இடங்களில் வென்ற கட்சியாக உருவெடுத்தது பாரதிய ஜனதா கட்சி. அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 272 உறுப்பினர்களைவிட பத்து உறுப்பினர்களை அதிகமாக பெற்றது அக்கட்சி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 54 மக்களவை தொகுதிகளை 22 கட்சிகள் வென்றன. அதாவது பாரதிய ஜனதா கட்சியின் 282 தொகுதிகளுடன் சேர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 335 என்ற நிலையில் இருந்தது. இதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து நாடாளுமன்ற அவைகளிலிலும் பாஜகவை அமர்த்தியது 2014ல்‌ பாஜக தேர்தல் அறிக்கை.

பிறகு ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் இன்றுவரை நாட்டையும் நாட்டு மக்களையும் பரபரப்பாக வைத்ததில் பாஜகவின் பங்கு பெரும் பங்காக இருந்தது என்பதை மறுக்க முடியாது. மேலும் 2013-14இல் ‘மரண வியாபாரி’ என்று காங்கிரஸ் கட்சியானது மோடிக்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது! கடுமையான தாக்குதலால் பாதிக்கப்பட்டவராக மோடியைப் பலர் நினைக்க!

பலருக்கு அவர் பணக்காரர்களுக்கு எதிரான நாயகர் எனவும் தில்லிவரை வந்து ஆளும் பணக்காரர்களை ‘அசைத்துப்பார்க்க’ வந்த ‘வெளி நபராகவும்’ தெரிந்தார்.
ஆனால் ஒரே தோட்டாவை இரண்டுமுறை சுட முடியாது; ஐந்தாண்டுகளுக்கு முன் கடைப்பிடித்த வம்சாவளி ஆட்சிக்கெதிரான உத்தி இப்போது கைகொடுக்காது என நிரூபிக்கப்பட்டுள்ளது பாஜகவின் தேர்தல் அறிக்கை.

தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இவ்வேலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை பரபரப்பாக வெளிவந்து அரசியல் விமர்சகர்களாலும் அரசியல் கட்சிகளாலும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளையும் சுத்தப்படுத்த திட்டம் வகுக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதி முக்கியமாக இடம்பெற்றது. மேலும் கங்கை தூய்மை என்ற ஒரு வாரியம் அமைக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டது நாடறியும். ஆனால் இன்றுவரை அந்த நிதியில் ஒரு ரூபாய்கூட செலவு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றத்தால் பல அறிவுறுத்தல்கள் கொடுத்தும் கண்டும் காணாததுமாக இருந்து வருகிறது மத்திய அரசு. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முட்டுக்கட்டை போட்டதும் மத்தியில் அங்கம் வகிக்கும் பாஜகதான் என்பது தென் நாட்டில் வசிக்கும் மக்கள் கூறும் முக்கியதொரு குற்றச்சாட்டாக இருந்தாலும் அதைப்பற்றி தமிழக மற்றும் கர்நாடக பாஜகவினர் மழுப்பலான அறிக்கைகளிலாலேயே நழுவி ஓடுகின்றனர்

2014ஆம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையில் ஒற்றை தேசிய வேளாண் சந்தையை உருவாக்கி, வெவ்வேறு பகுதியில் உள்ள மக்களின் உணவுப் பழக்கத்தை கருத்தில்கொண்டு, அங்கு விளையும் அந்தப் பயிர்கள் மற்றும் காய்கறிகளைத் தயாரிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் 5 ஆண்டுகளாக ஆட்சியில். விவசாயிகள் சொல்லொணாத் துன்பத்திற்கும். இடர்பாடுகளாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது மேலும் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் விவசாய வாழ்வாதாரங்களை இழந்து தலைநகர் டெல்லியில். இந்திய விவசாயம் கடுமையான வறட்சி நிலவும் நிலையில், விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்; அனைத்து நதிகளை நீர்வழிப் பயணத் திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு லாபகர விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றபோது அவர்களை அழைத்து ஏன் என்றுகூட விசாரிக்காமல் இருந்தது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டு பண்ணியிருக்கிறது விவசாயிகள் மத்தியில்.

மேலும் இந்தியாவில் 2015ல் 12,602 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், மகாராஷ்டிராவில் 4,291 பேரும். தமிழகத்தில் 606 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,453 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் – டிசம்பர் மாதத்தில் மட்டும் 120 விவசாயிகள் மரணம் அடைந்ததுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.

2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இளைஞர் நலன், சுய வேலைவாய்ப்பு ஊக்குவித்தல் போன்றவற்றை மேம்படுத்த வேலைவாய்ப்பு மையங்களை வாழ்க்கை தர மையமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பாஜக. ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு தன்மையை இழந்து கொண்டுவந்து வீதியில் இறங்கி போராட வேண்டிய வேளையில்  அரசு வேலைகள் மட்டும்தான் வேலையா? பக்கோடா விற்று வேலை வாய்ப்பைக் கொள்ளலாமே என்று பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள், இளைஞர்களின் போராட்டங்களை கிண்டல் செய்யும் விதமாக பேசியது பாஜகவின் தலைமை அமைப்பானது. ஒருமித்த கருத்துடன் இந்திய வேலைவாய்ப்பு மேலாண்மை எதிர்ப்பு நிலைத்தன்மையால்  இளைஞர்களை கீழ்த்தரமாக பொதுவெளியில் பேச முற்பட்டதும். மேலும் ஆண்டுக்கு இரண்டரை கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்கிற உறுதியை அளித்த பாரதிய ஜனதாவின் பிரதம மந்திரி வேட்பாளரான நரேந்திர மோடி கடந்த ஐந்தாண்டு கால முடிவுவரை இதுவரை எத்தனை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி இருக்கிறோம் என்பதை ஒரு வெள்ளை அறிக்கையாககூட இதுவரை வெளியிடாமல் இருப்பதும்  பாஜகவின் வாக்கு வங்கிக்கு ஒரு பெருத்த தேக்க நிலையை இளைஞர்களிடையே சென்று அடைந்திருக்கிறது என கூறலாம்.

இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்துத் தகவல்களைத் திரட்டிவரும் வணிகத் தகவல் நிறுவனமான ‘தி சென்டர் ஃபார் மானிட்டரிங் தி இந்தியன் எகனாமி’ (இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்). நாட்டின் வேலையின்மை நிலவரம் 2018 டிசம்பர்வரை 7.38 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கிறது.
மேலும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைக்கத்தக்க வேலைவாய்பு மையம் மேற்கொண்ட ‘உழைக்கும் இந்தியாவின் நிலை – 2018’ என்ற விரிவான ஆய்வின்படி, இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு இடைவெளி 16 சதவீதமாக உள்ளது எனவும் பாஜகவின் ஆட்சியில் சேவைத்துறை வேலைகளில் உள்ள பெண்களின் இடஒதுக்கீடு என்பது அரசாங்க உயரதிகாரிகள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளில் 2011 வரை 13 சதவிகிதமாக இருந்த பெண்கள். 2015இல் அவர்களின் பங்கு 7 சதவீதமாகச் சரிந்துவிட்டது.

மேலும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய ரயில்வே நிர்வாகம் சுமார் 89,400 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் செய்தது. அந்த 89,400 பணியிடங்களுக்காக வந்த விண்ணப்பங்கள் 2 கோடியே 30 லட்சமாகும்!

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மஹாராஷ்டிரா மாநில தலைமைச் செயலகத்திலிருந்து, அதன் உணவக ஊழியர் வேலைக்காக 13 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் செய்தது. மொத்தம் 7,000 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் வந்தன. அவர்களில் பலர் பல்கலைக்கழக பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் திடமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனால் பயன்பெறுகிறவர்கள் முற்றிலும் மேல்தட்டில்தான் குவிந்திருக்கிறார்கள். அதன் பிரதான நோக்கம்தான் உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு எனவும் உழைக்கும் வர்க்கத்தினரும் அடிநிலை நடுத்தர வர்க்கத்தினரும் பெண்களும் இளைஞர்களும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என படித்த பல இளைஞர்கள் இன்றளவும் வேலையின்மையால் இருப்பதை காண முடிகிறது.

1.17 இலட்சம் கிலோமீட்டருக்கு மேல் ரயில் பாதையைக் கொண்டது இந்திய ரயில்வே துறை. அதில் சில பழமையானதும் கூட. சில பாதைகள் அதிக பயன்பாடுகளைக் கொண்டது. அப்படியிருக்க இந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் 4000 கிலோமீட்டருக்கு மட்டுமே இருப்புப் பாதைகள் புதுப்பிக்கப்பட்டன. அதாவது மொத்த பாதையில் 3.5%.  அதே போல மின்சார பாதைகளின் விஷயத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் மூன்று வருடங்கள் எதுவுமே செய்யாமல் வீணடிக்கப்பட்டன. நான்காவது வருடத்தில் வெறும் நான்கு கிலோமீட்டர்கள் மின்சார பாதைகள் மட்டுமே போடப்பட்டிருக்கிறது.

பல்வேறு ஒப்பந்தங்கள் வெளிநாடுகளுடன் போடப்பட்டபோதிலும். ஒரே ஒரு டெல்கோ ரயில் பெட்டி சோதனை செய்யப்பட்டதைத் தவிர வேறு எந்தத் தாக்கங்களும் இதனால் நிகழவில்லை.

மோடி 2015 ஏப்ரலில் ஃபிரான்ஸ் சென்றபோது மித வேக ரயில்களுக்கான ஒப்பந்தமும், ரயில்வே நிலையங்களைப் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் இன்றுவரை அதைப்பற்றி ஒரு தகவலும் இல்லை. இன்றைய தேர்தல் அறிக்கையிலும் ரயில்வே பற்றிய ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளையும் காண முடியவில்லை. மேலும் மே 2015 சீனா சென்ற மோடி அப்போது, சீனாவுடன் 2015-2016 வருடத்திற்குள் இரு நாட்டு ரயில்வேக்களும் கூட்டுறவு செயல்பாடுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதிலும் இன்றுவரை ஒரு செயல்பாடும் இல்லை.

ரஷ்யாவுடன் 2018 அக்டோபர் மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ரயில்வே பணியாளர்களுக்கு உயர் தொழில்நுட்ப அறிவு மற்றும் பல் நோக்கு ரயில்வே நிலையங்களை உருவாக்குதல் என்பன பல ஒப்பந்தங்கள் போட்டாலும் இது 2015 இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியே என கூறினார்கள் ரயில்வே துறையினர் பலரும். 2015 லும் சரி 2018 லும் இது சம்பந்தமாக ஒரு செயல்பாடும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பெரும் லாபகரமான அரசு நிறுவனமாக இருந்த ரயில்வே துறை, அதன் வெற்றியைப் பல்வேறு நாடுகள் ஆராய்ந்த பெருமையும் பல பல்கலை கழகங்களில் பாடத் திட்டமாகவே வைக்கப்பட்டிருந்த இந்திய ரயில்வேயின் நிலைமை, கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. பாஜக அரசின் மிக மோசமான நிர்வாகத் திறமையையும் கடும் அலட்சியத்தையுமே காட்டுகிறது.

2014ஆம் ஆண்டு பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வரி விதிப்பில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்று முன்மொழிந்த போதிலும் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு வரிவிதிப்பில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்ததுடன், ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் லட்சக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரங்களை சீர்குலைத்துச் சென்றதை கண்கூடாக காண முடிந்த இந்த வேளையில்  விலைவாசியைக் கட்டுக்குள் வைக்கவும் தவறியுள்ளது இன்றைய பாரதிய ஜனதா அரசு.

மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபார நிறுவனங்கள் 60 சதவீதத்திற்கும் மேல் மூடப்பட்டு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் வியாபார முன்னேற்றத்தோடு செல்லும் சூழ்நிலையில் வரி விதிப்புகளும் புதிய வணிகத்திற்கான நடைமுறை குளறுபடிகளாலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர் உள்நாட்டு வியாபாரிகள். ஆனால் இதுவரை பாரதிய ஜனதாவும் அதன் கூட்டணி கட்சிகளும் எந்த ஒரு ஆறுதல்களையும் அறிவிப்புகளையும் செய்யாமலிருப்பதும் வியாபார அமைப்புக்களிடையே ஏற்பட்டுள்ள இடைவெளி பாரதிய ஜனதாவிற்கு ஒரு பின் இறக்கமாகவே கருதப்படுகிறது.

மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் சில பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டவைதான் எனவும் சிறு நிறுவனங்களையும் வணிகர்களையும் விவசாயத் துறையையும் பெரும்பாலான தொழிலாளர்களையும் கைவிட்ட கொள்கைகள் அவை எனவும் அந்தக் கொள்கைகளின் விளைவுகள்தான் இன்று கண்முன் நிற்கின்றன என்கின்றனர் எதிர்க்கட்சித் தலைவர்கள்.

2011ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதான அறிக்கையாக வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் திரும்ப கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் இன்று கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள்வரை ஒருங்கே உரக்கக் கூறியுள்ள ஓட்டு வேட்டையாடிய பின்னர். தற்போது வெளிநாட்டில் குவிக்கப்பட்டுள்ளது கருப்பு பணம் அல்ல, அதை இந்தியர்கள் அனைவரின் வியர்வையில் சம்பாதித்த பணம் என்று மத்திய நிதியமைச்சர் அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பது பாரதிய ஜனதா கட்சியின் எதிர்மறை கருத்தின் நிலைப்பாட்டினை அறிய முடிகிறது.

மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கல்வியை உறுதிசெய்யும் வகையில் தேசிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். 50 புதிய சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும். வேளாண் விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் போன்ற பல தேர்தல் வாக்குறுதிகளை 2014ஆம் ஆண்டு அளித்த பாரதிய ஜனதா கட்சி தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி வெற்றிபெற்ற போதிலும், வெற்றிபெற்ற சில மாதங்களில் ஸ்வச் பாரத், பாரத் மேக் இன் இந்தியா போன்ற பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தும் அந்த அறிவிப்புகள் இன்றுவரை தகவல் பலகைகளில் பல்லிலித்துக்கொண்டு இருக்கின்றன இந்திய தேசத்தில் மேலும் கடந்த 5 ஆண்டு கால பாராளுமன்ற அவை நடவடிக்கைகளில் வெறும் 19 நாட்கள் மட்டுமே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டிருப்பது மிகவும் வருத்தப்படக்கூடிய ஒரு விஷயமாக இருந்தபோதிலும் கங்கை தூய்மை பணி திட்ட தலைவராகவே திரு.நரேந்திர மோடி இருந்தும் இதுவரை அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஒரு ரூபாய்கூட செலவுசெய்யாமல் இருப்பதும் அதற்கான ஆணைய கூட்டம் ஒருமுறைகூட நடத்தப்படவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியும்கூட, இதுவரை கங்கை தூய்மை திட்டப்பணிகளுக்காக பணிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் கண்கூடாகவே காணமுடிகிறது பாஜகவின் முன்னுக்குப்பின் முரணான தேர்தல் அறிக்கைகளை.

மேலும் மாநிலங்களில் விவசாயிகளின் கஷ்டங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், பெண்கள், தலித்துகள், மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் பாதுகாப்பற்று இருப்பது ஆகியவை எதிர்க்கட்சிகளால் முக்கிய பிரச்சனையாக எதிரொலிக்கிறது இந்தத் தேர்தலில்.

ராமர் கோவில் கட்டப்படும், பெண்களுக்கான பாதுகாப்பு அளிக்கப்படும் சட்டம் நிறைவேற்றப்பட சட்டத்திருத்தம் கொண்டுவர கொண்டுவரப்படும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும் என்கிற பல்வேறு வகையான தேர்தல் அறிக்கைகளை 2014ஆம் ஆண்டில் அறிவித்த பாரதிய ஜனதா 2019ஆம் ஆண்டு நடைபெறும் இந்தத் தேர்தலிலும் அதே அறிக்கையினை மறுபிரதி எடுத்து மக்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறது எனலாம்.

இந்தியாவின் அரசு அலுவல் மொழியான இந்தி மற்றும் மாநில பிராந்திய மொழிகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவங்களை ஒதுக்கிவிட்டு. சமஸ்கிருதத்தை வளர்க்க அனைத்து கல்விக்கூடங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மாநில சுயாட்சி விவகாரங்களில் தலையிடுகிறது மத்திய அரசு என்பதை கண்கூடாக காண முடிகிறது.

மத்தியப் பட்டியலில் உள்ள கல்விகள் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று ஒவ்வொரு மாநில அரசும் விரும்புகின்ற இந்த வேளையில்!

மத்திய அரசின் கேந்திரிய கல்விக் கூடங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் மேலும் அந்த கல்விக்கூடங்கள் மூலமாக சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படும் என்கிற ஒரு தேர்தல் அறிக்கை என்பது சாதாரண பொதுமக்களை முகம் சுளிக்கும் விதமாகவே வைத்திருக்கிறது.

ஆண்டுக்கு இரண்டரை கோடி பேருக்கு வேலை என்றால் கடந்த ஐந்தாண்டுகளில் ஏழரை கோடி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தன்மையை உருவாக்கிக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் நாட்டின் பொருளாதார உற்பத்தி உயர்ந்திருப்பதாக ஒரு மாயை காட்டிக்கொண்டுள்ள பிஜேபி அரசு சிறு குறு நடுத்தர விவசாயிகள் மற்றும் சிறு குறு நடுத்தர வியாபாரிகளுக்கு எந்தவிதத்தில் தனது சேவையை ஜிஎஸ்டி வழங்கியுள்ளது என்பதை தார்மீக அடிப்படையில் வெள்ளை அறிக்கையாக கொடுக்க வேண்டும்.

நிலைமை இப்படியிருக்க நாட்டை வல்லரசாக்க போகிறேன் நல்லரசாக மாற்றப் போகிறார் என்ற போன ஆட்சியில் வீர முழக்கமிட்டு அரசவையில் அரியணை ஏறிய நரேந்திர மோடி நரேந்திர மோடி அவர்கள்.

2014 ஆம் ஆண்டு ஒரு பலமான கட்சியாக பாராளுமன்றத்தில் அமர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியை நிறைவு செய்துள்ள போதிலும். தாங்கள் செய்துள்ள சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க இதுவரை முடியவில்லை பாஜகவின் ஒட்டுமொத்த தலைவர்களாலும்.

“பானையில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு” என்று எதிர்க்கட்சிகள் பலரும் ஏளனம் செய்யும் இந்த வேலையைகூட.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் ஆட்சியைத் தொடர எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டைகளாக இருந்தார்கள். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாதிகளை நாங்கள் கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருந்தோம் என்று மேடைமேடையாக முழங்கி வரும் பாரதிய ஜனதா தலைவர்கள்.! அந்தத் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு திட்டங்களையும் இதுவரை பொதுமக்கள் முன்னிலையிலோ வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. அப்படியே பொதுமக்களோ அரசு அதிகாரிகளோ எதிர்க்கட்சிகளோ கேள்வி கேட்க. அது ராணுவ ரகசியம். அதை எப்படி உங்களிடம் கூற முடியும் என எதிர்க் கட்சிகளையும் மக்களையும் ஏளனம் செய்யும் வகையிலேயே உள்ளது பாஜகவின் பதில் அறிக்கைகள்.2012இல் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், “பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் முஸ்லிம்கள் கூட்டு சேர்ந்து, இந்திய முஸ்லிம்களின் உதவியுடன் இந்தியாவில் பதற்றத்தை உருவாக்குவதால்தான் இன்று நாங்கள் இப்படி தீவிரவாதத்திற்கு எதிராக முழங்குகிறோம் என ஒவ்வொரு மேடைகளில் பிரச்சாரம் செய்து வந்த மோடி, கடந்த 5 ஆண்டுகளாக தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை யாராலும் அறிய முடியவில்லை..

2013-14 இல் மோடி அவர்கள் உண்டாக்கிய ஊழலுக்கு எதிரான எதிர்பார்ப்பு மிகையான நம்பிக்கையாக முடிந்திருக்கிறது.

அவர் பெருமைப்பட்டுக்கொண்ட திட்டங்கள் எதுவும் அறிவிப்புகள், கோஷங்களைக் கடந்து பலனளிக்கவில்லை. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. மக்களின் கை கடிக்கும் நிலை உள்ளது. மோடியின் ஆட்சிக் காலத்தில் முக்கிய அமைப்புகள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதுவரை இல்லாத வகையில் செய்தியாளர்களைச் சந்தித்து, அரசியல் தலையீடு பற்றி பேட்டி கொடுத்தும். ரிசர்வ் வங்கி நொறுங்கிப் போகுமளவிற்க்கு அதன் தலைவர் ராஜினாமா செய்ததும். சிபிஐ ஆணையமே சர்ச்சைக்குள்ளாகி தலைமை இல்லாமல் இருப்பதும்.! மத்தியத் தகவல் ஆணையம் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டதும். ஆயுதப் படையினர் இது வரை இல்லாத வகையில், இன்று அதி தீவிர தேசியவாத அரசியல் சொல்லாடலில் ஈடுபட வேண்டியிருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களை சந்திக்காத. மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யாத. கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு சாமரம் வீசுகின்ற ஒரு பிரதமராக தான் நரேந்திர மோடி அவர்கள் பயணப்பட்டு உள்ளார் என்பது பலரின் குற்றச்சாட்டுகளாக இருப்பினும்.!
அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே நரேந்திர மோடியின் செயல்பாடுகள் இருந்ததைக் கண்கூடாக காண முடிந்துள்ளது கடந்த ஐந்து ஆண்டுகளில்.

நாகரிகம் வளர, நாடு முன்னேற்றப்பாதையில் நகர, ஊழல் என்பது ஒரு காலத்தில் இல்லாமல் போகலாம். வாரிசு அரசியல் என்பதும் அந்த நாகரீக கலாச்சாரத்தில் ஒரு காலத்தில் காணாமல் போகலாம். ஆனால்.! மதவாதம்,இனவாதம், வகுப்புவாதம் என்பது ஒரு நாட்டை இரு பெரும் பிரிவுகளாக பிரித்து. மக்களை சகோதரத்துவத்தில் இருந்து பிரித்து ஒரு பெரும் பிரிவினையை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.
பாஜகவினர் எடுத்துக்கொண்டிருக்கும் இந்துத்துவ ஆயுதம் வகுப்புவாதம் ஆகும்.அந்த வகுப்பு வாதத்தின் மூலம் ஒரு மதத்தை கட்டமைப்பு முயல்கிறீர்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது.

இந்துக்கள் தான் முக்கியமானவர்கள் என்றால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமாக பாதிக்கப்பட்டு இறந்ததும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். உலகெங்கும் இருக்கும் அனைத்து இந்துக்களுக்கும் இயற்கை இல்லமாகவே இந்தியா திகழும் என்று பாஜகவின் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மோடியிடம் கேட்டபோது, ‘இந்துத்துவம் என்பது ஓர் மதம் அல்ல; அது ஓர் வாழ்க்கை முறை’ என்று சொன்னார். அப்படியென்றால், மற்ற பிரிவினரையும் அது உள்ளடக்கியதுதானே. ஓர் இந்தியக் குடிமகனாக, இந்த வாழ்க்கை முறை என்பது தனிப்பட்ட வாழ்க்கை முறை அல்ல என்றுதானே கருத தானே வேண்டும்.! எனவே, இந்தியா தனிமனிதனுக்கு இயற்கையான இல்லம் இல்லை என்று அர்த்தமாகிவிடுமா?

சரி.! சிறுபான்மை மதத்தினரையும் அரவணைத்து கட்டுக்கோப்பாக பயணிக்கும் ஜனநாயக நாடு இந்தியா என்று நரேந்திர மோடி அவர்கள் ஒரு அறைகூவல் விடுத்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பலவித இன்னல்கள் மற்றும் அச்சுறுத்தல்களால் பல உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன இந்த ஆட்சியில்.
இதுவரை எந்த விதத்தில் ஒரு பதிலோ.! தார்மீகப் பொறுப்பும் ஏற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களோ.! அவர் சார்ந்துள்ள கட்சி தலைவர்களோ கூட ஒரு சிறு வருத்தம் கூட தெரிவிக்காமல் இருப்பது ஒரு பெரும் பிரிவினைவாதத்திற்கு அச்சு கோலாக அமைந்து இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
நிலைமை இப்படியிருக்க,

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிடும் சட்டப்பிரிவு 370 நீக்கம்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்குவதை தடை செய்யும் 35ஏ நீக்கம்.

இஸ்லாமிய பெண்களின் உரிமையை நிலைநாட்டிட முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.

அனைத்து மதத்தவரும் சமம் என்பதை நிறுவிட பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று தேர்தல் அறிக்கைகளில் கூறியிருப்பது எள்ளி நகையாடக்கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது எதிர்க்கட்சி பிரச்சாரங்களால்.

மேலும்.

தென்னிந்தியாவில் அதுவும் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு பெரும் புயல்கள் தாக்கியிருக்கின்றன. மற்றும் மழை வெள்ளம் இன்னும் ஏனைய பல போராட்டங்களும், களேபரங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில் கூட. தமிழகத்திற்கு வந்து சிறு ஆறுதல் கூட சொல்ல முடியாத பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

இன்று தமிழகத்திற்கான திட்டமாக இந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்து இருக்கிறோம் என்று மக்கள் முன்னாலும் ஊடகத்தினர் முன்னாலும் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயல் என்று கூறும் நிலைமையில் உள்ளது பாரதிய ஜனதாவின் இந்த சிரிப்பலை தேர்தல் அறிக்கை என்கின்றனர் எதிர்க் கட்சித் தலைவர்களும் அரசியல் விமர்சகர்களும்.

கடந்த தேர்தலின்போது லோக் ஆயுக்தா சட்டம் உடனடியாக கொண்டு வரப்படும் என்று உறுதி கூறியது பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ஊழல் மிக முக்கியப் பிரச்சினையாக தேர்தலில் முன்னிறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நீங்கள் லோக் ஆயுக்தா சட்டம் உடனடியாக கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்த பாஜக. தான் ஆளும் குஜராத்தில் லோக்ஆயுக்தாவை நியமிக்கப் பத்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஒரு தன்னிச்சையான அமைப்பாக இயங்குவதற்கான வாய்ப்பு ஏதுமில்லாத வகையில், நீர்த்துப்போன சட்டத்தின் கீழ் அதைக் கொண்டுவந்ததுள்ளது. சுதந்திரமில்லாமல் இயங்கக்கூடிய இதுபோன்றதொரு ஊழல் ஒழிப்பு முன்னெடுப்புகளைத்தான் மத்தியிலும் கொண்டுவர லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என்று மீண்டும் இந்த தேர்தல் அறிக்கையிலும் கூறப்படுகிறது.

ரஃபேல் மோசடி, உச்ச நீதிமன்ற விசாரணை வரையறைக்குள் வரவில்லை என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறியதே தவிர, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்படக்கூடாது என தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி கூறிய போதும்கூட நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை இதுவரை தொடங்காது வைத்ததற்குக் காரணம்தான் என்ன என்பதை எதிர்க்கட்சிக்கு கூறவில்லை என்றாலும் மக்களாகிய எங்களுக்கு கூறுங்கள் என ஒவ்வொரு மேடையிலும் எதிர்க்கட்சியினர் கேட்டு வரும் வேளையில்கூட.

கம்பீரமாக தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது பாஜக.