தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேக் சாந்த் பாஷா, தனது வீட்டிலிருந்த மின்விளக்கு செயலிழந்ததால் கடைக்குச் சென்று புதிய மின்விளக்கை வாங்கி வந்துள்ளார். அந்த மின்விளக்கை  வைத்து அவரது வீட்டிலிருந்த 7 வயதான மகன் சமீர் மற்றும் அவரது மகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் கையில் வைத்திருந்த பொழுது மின்சாரம் இல்லாமல் மின்விளக்கு ஒளிர்ந்தது. இந்தத் தகவல் அந்த ஊர் முழுவதும் பரவியதால் அப்பகுதி மக்கள் வியப்புடன் மின்சார மனிதர்களைப் பார்த்துச்சென்றனர். இந்தச் செய்தி ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பரவியது.

உடலில் பட்டதும் பல்ப் எரிவது பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கினாலும் இது எப்படிச் சாத்தியமானது எனச் சிலர் கேள்வி எழுப்பினர். உடலில் பட்டதும் பல்ப் எரிவது சிறுவர்களின் சக்தி அல்ல. அது அந்த பல்பின் சக்தி என்று பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பல்ப் இன்வர்டர் பல்ப் எனவும் மின்சாரம் இல்லாத நேரத்தில் பயன்படுத்தக்கூடிய பல்ப் எனவும் விளக்கமளித்தனர்.

இந்த பல்ப் 8 மணி நேரம் சார்ஜ் ஏறினால் 4 மணி நேரம் வரை எரியக் கூடிய அளவுக்குத்  திறன் வாய்ந்தது . இதில்  Li-ion பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை 250 முதல் 1000 ரூபாய் வரை  கூட கிடைக்கிறது. தற்போது இன்வெர்ட்டர் எல்.ஈ.டி பல்புகளை பலரும் பயன்படுத்தி அந்த வித்தையை செய்துகாட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.