வாரத்தின் முதல் நாள் தொடக்கத்தில் சென்செக்ஸ் 189.48 புள்ளிகள் குறைந்து 39,262.59 புள்ளிகளிலும், நிஃப்டி 63.10 புள்ளிகள் குறைந்து 11,760.20 புள்ளிகளிலும் உள்ளது. நிஃப்டியில் 515 பங்குகளின் விலை ஏற்றத்தோடும் , 1075 பங்குகளின் விலை இறக்கத்தோடும் , 99 பங்குகளின் விலை சராசரியாகவும் உள்ளன.

கடந்த வாரம் முழுவதும் நிலையற்ற தன்மையோடு நிஃப்டி மற்றும் வங்கி நிஃப்டி இருந்தது. நிஃப்டி ஸ்பாட் இன்ட்ராடே 12,000 புள்ளிகளைத் தொட்டது. இந்த வாரத்தில் NBFC, இஞ்சினியரிங் மற்றும் ஏற்றுமதி பொருட்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் காணப்படுகிறது.

நிஃப்டியில் டி.எச்.எஃப்.எல் மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் ஆகியவை முறையே 25 சதவீதம் மற்றும் 25 சதவிகிதம் குறைந்துள்ளது .

காலை வர்தகத்தில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் பங்குகள் 6.5 சதவீதம் வரை சரிந்தன.

மேலும் ஐ.டி.சி. பங்குகள் ஜூன் 17 ம் தேதி 0.4 சதவிகிதமாக குறைந்துள்ளது.

காடிலா ஹெல்த்கேர், அரவிந்தோ பார்மா, ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ வங்கி, எம் அண்ட் எம் ஆகிய பங்குகளின் விலை லாபத்தோடும்

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி மற்றும் இந்தஸ் இண்ட் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களைக் காட்டிலும் திங்களன்று டாலர் விலை உயர்ந்து 69.80 ரூபாயாக உள்ளது.

பிஎச்இஎல், ஆஸ்டர் டிஎம், காடிலா, டிஎச்எஃப்எல், பாரத் பைனான்சியல், எஃப் டி சி, டிவிஸ் லேப் ஆகிய நிறுவனங்களின் செய்திகள் இன்று வெளியிடப்படுகிறது.

ஐடிசி. ஜேஎஸ்பிஎல்.ஹெக்ஜாவேர்.டாக்டர் ரெட்டி. பயோகான். சன் பார்மா.பி ஐ இண்டஸ்டிரீஸ். வோக் ஹார்டு போன்ற நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது.