இன்றைய வர்த்தகத்தில் பிவோட் தரவரிசையின் படி, நிஃப்டி ஏற்ற நிலையோடு 11,568.83 புள்ளியில் இருந்து 11,630.03 வரை‌ 00000உயரும் என்று எதிர்க்கப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கும் சீனாவுக்கும் இடையிலான புதிய வர்த்தகச் சந்தைகள் காரணமாக இந்திய குறியீட்டெண் மே 6 ம் தேதி கிட்டத்தட்ட ஒரு சதவிகிதம் குறைந்தன.

வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையான நேற்று. சென்செக்ஸ் 362.92 புள்ளிகள் சரிந்து 38,600.34 புள்ளிகளில் முடிவடைந்தது, நிஃப்டி 114 புள்ளிகள் குறைந்து 11,598.30 புள்ளிகளில் முடிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் ஜீ எண்டெர்டெய்ன்மென்ட். டைடன் கம்பெனி. டாடா மோட்டார்ஸ். யெஸ் பேங்க் ஓரளவு இறக்கத்துடன் பயணித்தாலும்
பிபீசிஎல். எல்‌ அண்டு டி டிசிஎஸ் பஜாஜ் ஃபின்சர்வ் மிக கடுமையான இறக்கத்துடன் பயணித்து இன்ட்ரா டே எனப்படும் குறுகிய கால முதலீட்டில் எதிர்பாராத நஷ்டத்தை சந்தித்தது.

சாஃப்ட் வேர்துறையைத் தவிர, உலோகம், இன்ஃப்ரா, வங்கி, ஆட்டோ, பார்மா மற்றும் எஃப்எம்சிஜி இதர துறைகளும் சிவப்பு வண்ணம் பூசி விலை இறக்கத்துடனே‌ வர்த்தகமாகியது மேலும் பிஎஸ்இ குறியீட்டெண் மற்றும் பிஎஸ்இ இன்டெக்ஸ் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீட்டெண்களும் இறக்கத்துடனே பயணித்தன..

காலாண்டு முடிவுகளின் தாக்கங்களும் பங்குகளின் ஏற்ற இறக்கங்களும்.

மாரிகோ நிறுவன பங்குகளின் நான்காவது காலாண்டில் நிகர லாபம் 18.6 சதவீதம் உயர்ந்து ரூ. 217 கோடியிலிருந்து 183 கோடி ரூபாயாக இருந்தது. இதன் வருவாய் 8.7 சதவீதம் அதிகரித்து 1,609 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் நான்காவது காலாண்டில் 5 சதவிகித வருமானம் குறைந்து 969 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. இது முந்தைய கால கட்டத்தில் 1020 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த வங்கியின் பங்குகள் இன்று இறக்கம் கண்டு 401 ரூபாயில் முடிவடைந்தது.

தொலைதொடர்பு துறையில் உள்ள பார்தி‌ ஏர்டெல் நிறுவனம் நான்காவது காலாண்டின் லாபம் 24.36 சதவீதம் உயர்ந்து ரூ. 2,022 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

கமாடிட்டி சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 116 ரூபாய் உயர்ந்து 31,563 ரூபாயில் முடிவடைந்தது. மேலும் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 39 ரூபாய் உயர்ந்து வர்த்தக இறுதியில் 4346 ரூபாயில் முடிவடைந்தது. மேலும் இந்தியாவில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் இறக்குமதி 84 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 0.15 பைசா உயர்ந்து 69.61 பைசாவாக முடிவடைந்தது.

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு விமான சேவைகளை வேறு நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு நேற்றையதினம் ஒப்புதல் வழங்கியுள்ளது