முன்பு ஒரு காலத்திலே-13

நிஜமும் நிழலும்.

ஒரு மரம் நா அது நிழல் கொடுக்கணும். பறவைகள் வந்து கூடு கட்டணம் . அடுத்த தலைமுறையை வளர்த்துட்டு ,அது திரும்பி போகணும் . மரம் ஒன்னும் மனுஷனைப் போல கிடையாது.வேரில் ஆரம்பிச்சு கிளை வரைக்கும் எல்லாருக்கும் பயன்படற  மாதிரி வாழ்ந்துட்டு போற   ஒசந்த உதாரணம்   மரம்ன்னு சொல்லுவாங்க.ஆனா இது எதுவுமே இல்லாமல் ஒரு மரம் வளர்ந்து மக்களை அழிச்சிட்டு போறதுன்னு சொன்னா …அப்படி ஒரு மரம் இருக்கான்னு  சொன்னா ..இருக்கு . அதுதான் சீமக் கருவேல மரம்.

ஆஸ்திரேலியாகாரன் கிரிக்கெட் மட்டும் கற்றுக் கொடுத்துட்டு நம்பள வீண்டிக்கல.இன்னொண்ணும் செஞ்சான்… 1950 ல் ஒரு விதை எடுத்து வந்து போட்டு சூப்பரா நம்மள காலி பண்ணிட்டான் .அதுதான் இந்த நாசமாப்போன சீமக்கருவேலமரம்.கருவேலமரம் நல்ல மரம் .நம்ம கிராம மண்ணோட மரம்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதின்னு சொல்றமே அந்த மரம்  கருவேலமரம் .ஆனா இந்த சீம கருவேலமரம் இருக்கே அது ரொம்ப மோசமானது. இது அடுப்புக்கு கொஞ்சம் உதவுமே தவிர வேற எதுக்குமே பயன்படாது .முள்ளிருக்கும் .இது முளைச்ச இடத்துல வேறு எந்த செடியும் வளராது .இது ஒரு நச்சு மரம்னு  சொல்லுவாங்க . இதுல இருந்து பறவைகள் கூடு கட்ட வும் முடியாது.அது  நிக்க நிழலும் கொடுக்காது.நம்ம நாடு நல்லா இருக்குன்னு யாரு கண்ணு வச்சானோ தெரியல 1950இல் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு வித எடுத்துவந்து இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் போட்டாங்க .

அதைதான் வேலிகாத்தான் முள் அப்படின்னு எல்லாரும் சொல்றாங்க. அந்த வேலிகாத்தான் தான் எதையும்   விடல.இதோட வேர் இருக்கே ங்கொப்பன் மவனே அது பூமிக்குள் போர்போடற கணக்கா வேரு 135,  150 அடி தூரம் போய் அதிரடிப்படை மாதிரி தண்ணீரை உறிஞ்சி சாப்பிடும் .சுத்தி இருக்கற எந்த மரமும் வளரவே வளராது .சாபம் விட்ட கணக்கா சகட்டுமேனிக்கு அழிச்சிடும்.அதுல இருக்கிற மிகப்பெரிய சோகம் என்னன்னா…சின்ன வயசுல கிராமத்துல பள்ளிக்கூடம் விட்டு  நான் வீட்டுக்கு வந்தா, எங்க அப்பா என்ன சொல்லுவார்  தெரியுமா? ‘டேய் போயிட்டு வேலிகாத்தான் முள்  வெட்டிகிட்டு வாடா .. தறி நெஞ்சு காலு நோவுது வெந்நீர் வச்சி குளிக்கணும்.போய்  வெட்டிட்டு வாடாம்பார்.

என்ன பண்ண? முடியாதுன்னு சிவப்புக்கொடியா காட்ட முடியும்.நான் போயிட்டு வேலிகாத்தான் முள் கொடுவா எடுத்து போய் வெட்டி அதை எடுத்து வருவேன்.கையெல்லாம் கீரல்.எரிக்க பயன்படும். அத வச்சி பொழச்சவனும் இருக்கான்.எதுல காசு பாக்கலாம் அப்படிங்கறவனுக்கு ஏது விதி?எரியற வீட்ல புடுங்கறது லாபம். இந்த மாதிரி  கதைதான் எல்லா ஊர்லயும். இருக்கிற ஜனங்களும் வேற வழி இல்லன்னு சொல்லிட்டு  சீமக் கருவேலமரத்தோட வாழ்க்கைய ஓட்டனாங்க.

வேலி காக்காத முள் இது. வேலிகாத்தான் முள் இல்லன்னு சொல்றேன் . இது வந்து என்ன செய்யும் தெரியுமா?வெயில் காலத்துல கூட அது பச்சை பசேலென இருக்கும் .மஞ்சள் பூ பூக்கும் .இலைங்க பச்சையா இருக்கும் .ஆனால்  இந்த மரத்தால எந்த உபயோகமும் கிடையாது.ஜாடையில பார்த்தீங்கன்னா புளியமரம் மாதிரியே இருக்கும் .ஆனா  புளிய மரம் மாதிராயா? 60 வருஷமா நம்ம நாட்டை குட்டிச்சுவரா மாத்திரிச்சு. இங்கிலீஷ்காரன  முழிச்சிகிட்டான்.என்ன பண்ண கூடாதுன்னு  தெரிஞ்சிகிட்டான்.அமெரிக்காகாரன் வேலிகாத்தான் முள் இந்த நாட்டிலே எங்கேயுமே அந்த முள் செடி இருக்கக் கூடாது ன்னு  சொல்லி வேரோடு பிடிங்கி தூக்கி போட்டு எக்சிபிஷன் ல வெச்சு இதுதான் வேலிகாத்தான் முள் அப்படின்னு சொல்லி  தப்பிச்சிட்டான்.நம்ம நாட்டுல நம்ம எல்லாம் என்ன பண்ணோம். ஞாபகம் இருக்கா?நம்ம இந்திய அரசாங்கம் என்ன பண்ணிச்சின்னா ‘’சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் ‘’ஆரம்பிச்சு. என் ஜி ஓ கூட கூட்டு சேர்ந்து கிராமம் கிராமமாக ,பெரிய நிதி எல்லாம் ஒதுக்கி இருக்கிற எல்லாரும் சேர்ந்து ஒழிக்க பாடுபட்டடது.அடேங்கப்பா இது பெரிய வேலையா போச்சு.

வேடந்தாங்கல் – எல்லா உலக நாடுகளில் இருந்தும் பறவைகள் வந்து தங்கி ரொம்ப ஜாலியா இருந்து போகும் .அந்த இடத்துல எல்லாம் முள்ளு மரம் வளந்து வர்கள் பறவைங்களை கிழிந்சு கொன்னு, அங்க வர்ற மனுசங்களையும் முள்ளால கிழிச்சி கொன்னு  பயமுறுத்திடுச்சி.அதுக்கு அப்புறமா முழிச்சுக்கிட்டு வேடந்தாங்கலை சுத்தமானதா  ஆக்கனாங்கன்னு சரித்திரம் சொல்லுதுஇந்த சீமைக் கருவேல மரத்தை என்ன பண்ணலாம் ?!இது ஒரு நச்சு மரம் சுத்தி யாரையும் வளரவே விடாது என்பது வேற விஷயம் .இத  எந்த பூச்சியும் ஒன்னும் பண்ண முடியாது .இந்த சீமை கருவேலமரத்துக்கு வேற பேர் எல்லாம் இருக்கு.காட்டு கருவேல மரம், சீமை உடை ,சீமைக்கருவை ,வேலிக்கருவை ,டெல்லி முள் ,இப்படி எல்லாம் தசாவதாரம்  மாதிரி நிறைய பேரு இருக்கு. படத்து பேர கணக்குக்கு தான் சொன்னேன். வேற எதாச்சும் சொல்லி கோத்து விட்டுடாதீங்க.

ஏன்னா கருவேல மரத்தையும் தந்த மரம்  மாதிரி பேசுற முடியுமா ?!அது வந்து ஒரு ஜன்னலுக்கு கதவுக்கு எதுக்கும்  பயன்படுத்த முடியாது.ஆனா நம்மூர்ல பாரம்பரியமா வளர்க்க கருவேலமரம் இருக்கு.நெஜமா  இந்த கருவேல மரங்கள் ஒரு நல்ல மரம் .அது கிராமத்தில் இருக்குது .அது வந்து இந்தியத் துணைக்கண்டத்தில் நிறைய இருக்கும் அப்படின்னு சொல்லுவாங்க .

‘’ஆலும் வேலும் பல்லுக்குறுதி

இந்த கருவேல மரத்தில் இருக்கிறார் .கிளைங்கள்ல பாத்தீங்கன்னா. காய்ங்க கிளுகிளுப்பு மாதிரி காத்துல ஆடிக்கொண்டே இருக்கும் .காய்ங்கள எடுத்து ஒரு சின்ன கயித்துல கட்டி ஒரு கிளுகிளுப்பை மாதிரி நாங்க சின்ன வயசுல எல்லாம் விளையாடுவோம்.

இதுல இருக்குற கோந்து அதாங்க பிசினு  இருக்கே அது நோட்டு புத்தகம் எல்லாம் ஒட்டுவதற்கு பயன்படும் .இந்த இலைய வந்து ஆடுங்க விரும்பி சாப்பிடும் .சாப்பிட நல்ல சத்து இருக்கும். தழை உரமாவும்.

எங்க ஊரு அப்பத்தா செய்ற வேலையை நான் சொல்றேன் .காய்ல இருக்குல்ல விதைங்க அத நல்லா காய வச்சி இடிச்சி இந்த கொட்டாங்குச்சி இருக்குல்ல அதுல ஊத்தி , தண்ணி ஊத்தி வச்சு வெயில்ல நல்லா காய வச்சி , நல்லா காஞ்சி இருக்கணும் .அதை எடுத்து பொட்டு மாதிரி நெத்தில எடுத்து வச்சுக்குவாங்க.அந்த பொட்டுல இன்னொரு த்தர் பார்த்தா கூட முகம் தெரியும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

கிராமத்துல காலங்காத்தால எழுந்து போயி காலைக்கடன் பண்றோம் இல்ல .அது பண்ணும் போதே அந்த வேலங்குச்சி கொஞ்சம் ஒடிச்சி வைத்து பல்லு விலக்குவது  வழக்கம் .என்ன பிரச்சனை அது அவ்வளவு அற்புதமாக பல்லுல இருக்கிற அந்த அழுக்கு எல்லாம் எடுத்து வைத்து பல்லை உறுதியாக்கி இருக்கும்.கிராமத்துல பண்ணிட்டு இருந்த சமாச்சாரம்தான்..அதுக்கப்புறம் தான் பின்னாடி வந்து எஜமான் படத்தில் ரஜினிகாந்த் விளக்கம ஆரம்பிச்சாங்க.

‘’ஆலும் வேலும் பல்லுக்குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி ‘’என்ன  இதுன்னா.

நால்வரில் இருக்கிற நாலடியார் ,ரெண்டு ரெண்டு வரியில் இருக்கிற திருக்குறள் பழமொழில சொல்லி வச்சிருந்தாங்க .கருவேலமரம் எவ்வளவு பெரிய விஷயம். பாத்தீங்களா!

இந்த கருவேல மரத்தில் இந்த செம்மரியாடு மேய்க்குறவங்க உக்காந்துட்டு தூக்கு செட்டில் வைத்திருந்த சாப்பாடு எடுத்து சாப்பிட்டுக்கிட்டே ஆடுங்கள பாப்பாங்க . நானே பலதடவை  அதோட மரத்தாண்ட ஒக்காந்து இருக்கேன் , பாடம் எழுதி இருக்கேன் ,படிச்சி இருக்கேன் அதெல்லாம் அந்த கிராமத்தில் ஒரு வழக்கம்.

பூமணிவாசகம் அப்படின்னு ஒரு எழுத்தாளர். என்ன எங்கியோ கேட்ட மாதிரி தோணுதா?அசுரன் கதை இவர் எழுதுனதுதான்.தன்னுடைய பெயரை சுருக்கி பூமணி அப்படின்னு வச்சிருக்கார்.அது இல்ல விசயம். 1997இல் என்.எப்.டி.சி அதாவது இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகமும் , தூரதர்ஷனும் சேர்ந்து அந்த படத்தை தயாரிச்சாங்க. அதுல நாசர் ஹீரோவாக நடிக்க ராதிகா  ,சார்லி நடிச்சாங்க .தீப்பெட்டி செய்யற குழந்தைகளோட கதை .பசங்கள மேல படிக்க வைக்க கூடாது அப்படிங்கறது .ஆனா படிக்க வைக்கணும் அப்படின்னு நினைச்சு எழுதப்பட்ட அந்தக் கதை கருவேலம்பூக்கள் .அதுக்கு தமிழக அரசு பரிசு கிடைத்தது . வெளிநாட்டில் கூட அந்த படம் ஓடிச்சு.பூமணி அப்படின்னு சொன்னதும் கருவேலம்பூக்கள் கூடவே ஞாபகம் வருவது இதனாலதான்.

பாரதிராஜா படம் எடுத்த போது அந்த படத்தில் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் ராதிகாவும் விஜயகுமாரும் இந்த கருவேல மரத்தை அகற்ற மாதிரிலாம் காட்சிகள்  இருக்கும் .எதுக்கு  சொல்ல வரேன்னா அப்போதெல்லாம் கிராம்ம் சுத்தி  இது கிடந்தது.நாம பாரம்பரிய கருவேல மரத்தை தயவுசெய்து வளர்க்கறதுல எந்த  தப்பும்  கிடையாது .ஆனால் சீமைக்கருவேல மரம் எங்க  பார்த்தாலும் அதை வேரோடு பிடிங்கி தூக்கி போட்டு எரிக்கணும்.அது தேசத்துக்கு ஒரு வில்லன் மாதிரி.

வழக்கம் போல தான்…நான்  எழுதிவிட்டு இருக்கும்போது எங்க பேத்தி வந்து நைசா எட்டிப் பார்த்துட்டு இது என்ன குடும்பம் தெரியுமா ?

குடும்பம்   -Fabales

இனம்- Vachellia

நம்ம  விவசாயி குடும்பம் இல்லையா என்று சொல்லி இருந்தா கரு வேலமரம் வளக்கலாம் னு போற போக்குல சொல்லிட்டு போயிட்டா…ஞாபகம் வச்சுக்கோங்க. ஒரே மாதிரி சாயல் இருந்தா கூட நல்லவங்க , கெட்டவங்க  இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கோங்க.இந்த கருவேல மரத்தையும் சீமை கருவேல மரத்தையும் நாம தெரிஞ்சுக்கணும்னு தான் இவ்வளவு மெனக்கெடறேன். இதான் என்னுடைய இன்றைய கருத்து.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
  2. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
  3. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
  4. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
  5. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
  6. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
  7. அரச மரம் :ராசி அழகப்பன்
  8. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
  9. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
  10. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
  11. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
  12. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
  13. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
  14. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
  15.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
  16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்