ஐதராபாத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கு ஒன்றில் போலீசார் துப்பு துலக்கியதில் தாயே தனது மகனை கொன்று கொலையை மறைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த மசூதா பீ என்பவரின் மகன் முகமது காஜா போதை, சூதாட்டம் உள்ளிட்ட தீயப் பழக்கங்களுக்கு  அடிமையானதால், அடிக்கடி தாயிடமும், குடும்பத்தினரிடமும் தகராறு செய்துள்ளான். மகனின் கொடுமையை பொறுத்து கொள்ள முடியாத தாய் மசூதா, மருமகன்கள் ரஷீத், பஷீர் மற்றும் ஆட்டோ டிரைவர் ஹாஷம் ஆகியோர் உதவியுடன்  கடந்த 2001ம் ஆண்டு, ஜூன் 5ம் தேதி காஜாவை ‘கள்’  குடிக்க அழைத்துச் சென்று கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பின் தற்போது துப்புதுலங்கியுள்ளது. 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் மசூதாவை தேடி வருகின்றனர்.