மிழ்நாடு உத்தரப் பிரதேசம் அல்ல. இங்கே ரொம்ப முட்டாள்தனமாக எதையாவது சொன்னால் நம்ப மாட்டார்கள். கொஞ்ச முட்டாள்தனத்துக்கு மட்டும்தான் இடம் உண்டு. அந்தவகையில் எனக்குத் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டின் அறிவுச்சூழலையும் பற்றி ஒரு திமிர் எப்போதுமே உண்டு. ஆனால் தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை அந்த திமிர் ‘சர்ர்’ரென இறங்கிவிடுகிறது. ஏனெனில் தமிழ் இலக்கிய உலகில் நிலவும் மிகப்பெரிய சாபக்கேடு என்ன தெரியுமா? கண்முன் அப்பட்டமாகத் தெரிகிற விஷயங்களைக் கூட நம்மூர் இலக்கியவாதிகள் சிலருக்கும், அவர்களின் அதிதீவிர இலக்கிய வாசகர்களுக்கும் உட்கார்ந்து விளக்க வேண்டி இருப்பதுதான். அப்படி விளக்கிச் சொன்னால் கூட சாவகாசமாக ஆறு நாள் கழித்து ரஜினி போல பிரஸ்மீட் வைத்து, “சாரி. மன்னிப்பு கேட்க முடியாது” என அவுட்லுக் இதழைக் காட்டிவிட்டு ஓடிவிடுவார்கள். இப்படி ஒரு தர்மசங்கடமான சூழலில்தான், வரலாற்றை மனதில் வைத்து இந்த கிண்டில் ஸ்s மற்றவர்கள் எனும் சர்ச்சையைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது.

இந்தப் பிரச்சினை கூட ஒரு முக்கோணப் பிரச்சினைதான். ஒரு பக்கம் கிண்டில் எழுத்தாளர்கள். இன்னொரு பக்கம் இலக்கியவாதிகள். இன்னொரு பக்கம் ஸிஷிஷி பார்ப்பனர்கள். இதில் முதல் இரண்டு தரப்புக்கும் இடையே நடப்பது ‘எழுத்து’ பற்றிய பிரச்சினை. இது அறியாமை பிரச்சினை, சாதாரண பொறாமை பிரச்சினை. ஆனால் மூன்றாம் தரப்புக்கும் முதல் தரப்புக்கும் இடையில் நடப்பது “நீங்கல்லாம் எழுத்தாளராடா?” என்கிற பிரச்சினை. இதுதான் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது ஆயிரமாயிரம் ஆண்டுகால இனப் பிரச்சினை. சமஸ்கிருதம் படித்தால்தான் டாக்டர் ஆக முடியும் என்கிற நிலையில் இருந்து, இட ஒதுக்கீட்டில் படித்தவன் ஒழுங்காக ஊசி போட மாட்டான் என்பதில் ஊர்ந்து, இன்று கிண்டிலில் எழுதினால் அது கேவலமாகத்தான் இருக்கும் என்று வந்து நிற்கிறது இந்த இனப்பிரச்சினை, அதாவது இனவெறி! அதுமட்டுமல்லாது, தமிழ் இலக்கிய உலகில், ‘ரமணி மாமி ஊருக்குப் போயிருந்த சமயம் சுப்பு மாமா எப்படிக் காலையில் காபி குடிக்காமல் கக்கா போக கஷ்டப்பட்டார்’ என்பது மட்டுமே சமூக இலக்கியமாகப் பதியப்பட வேண்டுமே தவிர, ‘டாக்டருக்குப் படிக்க எண்ணியதைத் தவிர ஒரு தவறும் செய்யாத குழந்தை அனிதாவின் கழுத்தைத் தூக்குக் கயிறு எப்படி இறுக்கியது’ என்பது பதியப்பட்டுவிடக்கூடாது என்கிற பயம், பதட்டம்.

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த ஆர்.எஸ்.எஸ். மாமாக்களின் நடமாட்டம் பொதுவெளியில் பயங்கரமாக இருக்கிறது. குருமூர்த்தி, எஸ்.வி.சேகர், எச்.ராஜா போன்றவர்கள் ‘வாயில்’ சைக்கிள் செயின் சகிதமாக சுத்துகிறார்கள். வார்த்தைகளில் எந்த ஃபில்டரும் போட்டுக்கொள்வதில்லை. திறந்துவிட்டால் அது பாட்டுக்குக் கொட்டுகிறது. இதனால் ஒரே ஒரு நன்மை உண்டு. அவாள் என்றால் புத்திசாலிகள், அறிவாளிகள் என்கிற ஆயிரமாயிரம் காலத்து பிம்பம் பல்லிளிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படிப் பதிப்பகத்துறையிலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் அந்த மூன்றாம் தரப்பு. (ஆனால் அவர்கள் பேரை நான் குறிப்பிட்டால் மனுஷ்ய புத்திரன் சென்சார் செய்துவிடுவார் என்பதால் நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.) இந்தக் கும்பலைச் சேர்ந்த ஒரு மாமாவின் முகநூல் பதிவைப் பார்த்து, “அடப்பாவிகளா… இப்படி ஒரு மூளைய வச்சுகிட்டாடா எங்கள இத்தன வருசம் சூத்திரனா, பஞ்சமனா வச்சிருந்தீங்க” என என்னை நானே கேட்டுக்கொண்டேன். அவர் என்ன எழுதியிருந்தார் என்றால், “கிண்டில் போட்டியில் இவர்கள் ஏன் கூட்டமாகப் பங்கேற்கிறார்கள், இதன்மூலம் நியாயமான இலக்கியத்துக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது. இவர்கள் வேண்டுமானால் கலைஞர் விருது என தனியாக ஒன்றைத் தங்களுக்குத் தாங்களே தந்துகொள்ளலாமே” என்று.

இது எவ்வளவு பெரிய அபத்தம் என புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நீங்கள் முதலில் ரிஞிறி நீஷீஸீtமீst எனப்படும் இந்தக் கிண்டில் போட்டியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். திடீரென இலக்கிய வெறி பிடித்தலையும் இந்த மாமாக்கள் அமேசானை ஏதோ ‘இலக்கிய ஆர்வலர்’, ‘இலக்கியப் புரவலர்’ என கருதிக் கொண்டு, இலக்கியத்தை வளர்ப்பதற்காக அமேசான் இந்தப் போட்டியை நடத்துவதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அமேசான் என்பது ஒரு வியாபாரி. அந்த வியாபாரி சந்தையில் விட்டிருக்கும் புதிய தொழில்நுட்பம் கிண்டில். அந்தக் கிண்டிலையும், கிண்டிலின் மூலமான வாசிப்பு அனுபவத்தையும் வாசகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தவே இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இதுதான் அடிப்படை. அதாவது இந்தப் போட்டியில் எழுதும் எழுத்தாளர்கள் தங்கள் சுற்றம், நட்பு, சமூகவலைதளங்கள் என எல்லாவற்றிலும் மாய்ந்து மாய்ந்து தங்கள் கிண்டில் நூலை ப்ரொமோட் செய்ததன் மூலம் அமேசானின் கிண்டில் தொழில்நுட்பத்தையும் ப்ரொமோட் செய்தார்கள் என்பதுதான் உண்மை. அதுதான் இந்தப் போட்டியை அமேசான் நடத்துவதன் மைய நோக்கம். இதுவே இவர்களுக்குத் தெரியாமல்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக, அருவெறுப்பை வரவழைக்கும் இன்னொரு காமெடி ஒன்றும் நடந்தது. பிரபல பதிப்பகத்தைச் சேர்ந்த ஒருவர், அமேசான் போட்டியின் முதல் சுற்றில் தேர்வான ஐந்து பேரின் பெயர்களையும் எழுதி, “இவர்கள் எல்லாம் தேர்வானால் அந்தப் போட்டி எந்த லச்சணத்தில் இருக்கும் எனப் பாருங்கள். எனவேதான் சொல்கிறேன், எலக்ஷன் வைக்கக்கூடாது. செலக்ஷன் வைக்க வேண்டும்” என்றெல்லாம் ஆங்கிலத்தில் முக்கி முனகி இருந்தார். அமேசானிலும் இறுதிச் சுற்று என்பது ஜட்ஜுகள் தேர்ந்தெடுக்கப்போகும் செலக்சன்தான். முதல்சுற்றுதான் எலக்‌ஷன். அந்த ஐந்து நூல்களும் விற்பனை, வாசகர் மதிப்பீடு போன்றவற்றை வைத்து அமேசான் அல்கோரிதம் தேர்ந்தெடுத்த ஐந்து நூல்கள்.

அதன் பின், அந்த ஐவரில் ஒருவர் அந்தப் பதிப்பக மாமாவுக்கு நக்கலாக ஒரு கோரிக்கை வைக்கிறார். அதாவது “என் நூலைப் படியுங்கள் சார்” என்று. அந்தக் கோரிக்கையில் விரிக்கப்பட்ட வலை புரியாமல் அந்த மாமாவும் கெத்தாக “கண்டிப்பாகப் படிக்கிறேன் ஜீ” எனப் பதில் அளிக்கிறார். இதன்மூலம்தான் ஒன்று அப்பட்டமாகப் புரிபட்டது. தேர்வான நூல்களைப் படிக்காமலேயேதான் அவரைப் போன்றவர்கள் இவ்வளவு புலம்பி இருக்கிறார்கள். ஒருவேளை படித்துவிட்டு அவர் கருத்துச் சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. அந்த ஐந்து நூல்களையும் படிக்காமல் கருத்துச் சொன்ன இவர் புத்திசாலியாம். படித்துவிட்டு அமேசானிலும், முகநூலிலும் விமர்சனங்கள் எழுதிய மக்கள் முட்டாள்களாம். இதைவிட ஒரு அருவெறுக்கத்தக்க புத்தி, முன்முடிவு, திமிர் ஏதாவது இருக்க முடியுமா? அதனால்தான் இந்த மூன்றாம் தரப்பினருடனான பிரச்சினை மிகவும் முக்கியம் என்றேன். ஏனேனில் இது ஆயிரமாண்டுகால இனவெறி.

சில இலக்கியவாதிகளும் இதில் எழுதினார்கள். எழுத ஆரம்பிக்கும் நாள்தொட்டே ஈகோ பிரச்சினை. அவர்களையும் சொல்லிக் குற்றமில்லை. சாகித்திய அகாதமி விருதெல்லாம் பெற்றுவிட்டபின் சாதாரண சுப்பன் குப்பனுடன் சேர்ந்து ஒரு போட்டியில் பங்குகொள்வதென்றால் சும்மாவா! அவர்களைப் பொறுத்தவரை இந்திர லோகத்தில் தேவர்களுக்காக ஆடும் ரம்பை மானத்தைவிட்டு பூலோகவாசிகள் முன்னிலையில் ஆடுவதைப் போலத்தான் இந்தப் போட்டியைக் கருதினார்கள். கலந்துகொள்வதற்கே இப்படி என்றால், அதில் வெற்றிபெறவில்லை எனும்போது அவர்கள் ஈகோ எவ்வளவு அடிவாங்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். ஆனால் இதை நான் குறை சொல்ல மாட்டேன். சாதாரண மனித இயல்புதான் இது. அதனால் அவர்களை நாம் பெரிதாகக் கண்டுகொள்ளத் தேவையில்லை. கடந்துவிடலாம்.

ஆனால் சில விஷயங்களை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அமேசான் கிண்டிலில் படித்த வாசகர் வட்டம் என்பது வெகுஜன வட்டம். தீவிர இலக்கிய வாசிப்பு சுவிசேஷக் கூட்டம் அல்ல. அவர்கள் எளிய நடையிலான நூல்களை விரும்பினார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், பலரிடம் கிண்டில் டிவைஸ் இல்லாத சூழலில், மொபைலின் சின்னஞ்சிறிய திரையில் வேகமாக நகரும் நூல்களைப் படிக்கவே விரும்பினார்கள். யாரும் 300+ பக்க தடி நூல்களை மொபைலில் படிக்க விரும்ப மாட்டார்கள். கண் வலிப்பதோடு, கவனச்சிதறலுக்கும் ஆளாவார்கள். இப்படி ஏராளமான விஷயங்களை மனதில் வைத்து எழுதப்பட்ட நூல்களே மக்கள் ஆதரவைப் பெற்றன. நிறைய விற்றன. நிறைய ரிவ்யூக்களைப் பெற்றன. இதில் அப்படி என்ன கம்பசூத்திரம் இருக்கிறது எனப் புரியவில்லை. அதனால்தான் அப்பட்டமாக கண்முன் இருக்கும் விஷயத்தையே விளக்க வேண்டியுள்ளதே என முதல் பத்தியில் புலம்பினேன்.

எது எப்படியோ. இந்தப் போட்டியால் பலர் படிக்கத் துவங்கினார்கள். பலர் எழுதத் துவங்கினார்கள். அதுதான் இப்போட்டியின் நேரடிப் பலன். கண்கூடான பலன். அதைவிட்டுவிட்டு எது இலக்கியம், எது இலக்கியமில்லை என்ற போட்டிக்குள், வாதத்திற்குள் நான் வரவே இல்லை. கபாலி படத்தில் ரஜினியின் ஓப்பனிங் பாடலை கானா பாலா பாடுவது பொறுக்காமல் எஸ்.பி.பி. சொன்னார் “இப்போதெல்லாம் டாஸ்மாக் பாடகர்கள் பாடுகிறார்கள். அதெல்லாம் குரலா?” என்று. ஆனால் மக்கள் ரசனை மிகுந்தவர்கள். அவர்களின் கேட்கும் சூழலுக்கேற்ப, மூடுக்கு ஏற்ப அவர்களுக்கு இருவரையுமே பிடிக்கும்.

மற்றபடி குழு அமைத்து விற்றார்கள். கூவிக்கூவி விற்றார்கள் என்றெல்லாம் புலம்புகிறவர்களுக்கு நடுவர்களே அழகாகப் பதில் அளித்துவிட்டார்கள். பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம் என ஒதுங்கமுடியாத காலம் இது. நூறு பூக்கடைகள் போட்டி போட்டால் நூறு பூக்கடைகளும் விளம்பரம் செய்யத்தான் செய்யும். அதில் நல்ல பூக்கடைக்கு வியாபாரம் பெருகும். அது வியாபாரம் மட்டும் அல்ல. சர்வைவலும் கூட.