முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
உழைப்பின் கடல் - அண்ணா நூலகம்
ஸ்டீபன். வி
சேட்டனும் பாட்டனும்
வாஸந்தி
வேளாண் வரலாற்றின் காலடிச் சுவடில்......
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5)
ராஜ்சிவா
ஜெயலலிதா அரசின் விலை உயர்வும் மக்களின் ஞாபக மறதியும்
மாயா
ஹர்பஜன் சிங்கிடம் இல்லாத ஒன்று அஷ்வினிடம் உள்ளது
ஆர்.அபிலாஷ்
சொல்ல மறந்த பெயர்கள்
ஷாநவாஸ்
வாசனை நினைவுகள்
மோகன் குமார்
மருத்துவப் பிரதிநிதிகள்
எர்னஸ்டோ குவேரா
பேய்க்கு பயந்து ……………….
இளவேனில்
ஏழாம் அறிவு
இந்திரஜித்
இந்தியா வளர்ந்து வரும் நாடு
ஆர்த்தி வேந்தன்
கவிதை
ஆத்மார்த்தி கவிதைகள்
ஆத்மார்த்தி
எப்படி இருப்பினும்
வளத்தூர் தி.ராஜேஷ்
இறை தேடி
ராஜா
இளங்கோ கவிதைகள்
இளங்கோ
தலைப்பு: ஒரு பிஞ்சு கைப்பிடி இரவின் வண்ணச் சாயம்
தேனு
தப்பித்தல்
தனுஷ்
இயலாமை
ஆறுமுகம் முருகேசன்..
சிறுகதை
கதையல்ல நிஜம்…
உஷாதீபன்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்......கொஞ்சம் ஹெல்தியாய்........
கே.பத்மலக்ஷ்மி
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5)
ராஜ்சிவா

நான் இந்தத் தொடரை, மாயா இனத்தவர் சொல்லியபடி, '2012 இல் உலகம் அழியுமா? இல்லையா?' என ஆராய்வதற்காகவே ஆரம்பித்தேன். ஆனால் மாயா பற்றி எதுவுமே சொல்லாமல், ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். மாயா இன மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதன் பேரில், உலகம் அழியும் என்று நாம் ஏன் நம்ப வேண்டும்? இந்தப் பயம் அறிவியலாளர்களிடையே கூட, இரண்டாகப் பிரிந்து விவாதிக்கும் அளவுக்குப் பெரிதாகியதன் காரணம் என்ன? அந்த அளவுக்கு இந்த மாயாக்கள் முக்கியமானவர்களா? என்ற கேள்விகளுக்கு நாம் பதில் தேடும்போது, உலகத்தில் நடைபெற்ற பல மர்மங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும்.

அத்துடன், நான்  குறிப்பிடும் சம்பவங்களும், படங்களும் அறிவியலுக்கு ஒத்து வராத, மூட நம்பிக்கைகளைச் சொல்லுவதாக நீங்கள் கருதலாம். ஆனால், உலகத்தில் பல விடுவிக்கப்படாத மர்ம முடிச்சுகள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றிற்குக் காரணமாக, திடமான ஒரு முடிவை எம்மால் எடுக்க முடிவதில்லை. ஆனாலும், அந்த மர்மங்களை நாம் தெரிந்து கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லை. உலகத்தில் இப்படி எல்லாம் இருக்கின்றன என்பதே தெரியாமல் எம்மில் பலர் இருக்கிறோம். அதனால் அவற்றை முதலில் பார்த்துவிடுவோம். 

நவீன விஞ்ஞானம் இன்றிலிருந்து கிட்டத்தட்ட 400 ஆண்டுகளிலிருந்துதான் ஆரம்பித்தது. அது கடந்த 100 வருடங்களில் மிகவும் அசுரத்தனமான வேகத்தில் பிராயாணித்து, இன்று எல்லையில்லாமல் விரிவடைந்து காணப்படுகிறது. பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கண்டுபிடிக்கப்பட்டது இந்தக் காலப் பகுதிகளில்தான்.

தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) என்னும் விஞ்ஞானி 1879ம் ஆண்டுகளில் மின் விளக்கைக் கண்டுபிடித்தார் என்று எமக்குத் தெரியும். அதைத்தான் உண்மையென்றும் நாம் இன்றுவரை நம்பியும்  வருகின்றோம். ஆனால், எகிப்தில் உள்ள டெண்டெரா (Temple of Hathor, Dendera) என்னுமிடத்தில்உள்ள நாலாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சுவர்களில் உள்ள சில சித்திரங்கள் எம்மை வாயடைக்கப் பண்ணியிருக்கின்றது (அந்தக் கோவிலின் படமே மேலே ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது).

அந்தக் கோவிலின் சுவரில் என்ன சித்திரம் இருந்தது என்று பார்க்கலாமா?

இவற்றைப் பார்த்தவுடனேயே, இவை இரண்டும் மின் விளக்குகள் வடிவத்தில் இருக்கின்றன என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். அவற்றைச் சரியாகப் பாருங்கள். அந்த மின் விளக்குகளின் கீழ்ப்பகுதியில் உள்ள குமிழும், அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீண்ட இழையும் (wire), மின் விளக்கின் உள்ளே இருக்கும் எரியிழையும், எமக்கு வேறு எதையும் ஞாபகப்படுத்த முடியாது. அந்தச் சித்திரத்தை கொஞ்சம் பெரிதாகவும், அது இருக்கும் அந்தக் கோவிலின் சுவரையும் இந்தப் படங்களில் பாருங்கள்.

"என்ன விளையாடுகிறீர்களா? அது ஏதோ கத்தரிக்காய் போல ஒரு உருவத்தில் இருக்கிறது" என நீங்கள் அலறுவது புரிகிறது. கத்தரிக்காய் ஒரு மனிதன் பிடித்துக் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இருக்காது. அத்துடன் எந்த ஒரு காயுக்கும் அடியில் உள்ள தண்டு இவ்வளவு நீளத்தில் இருக்காது. அத்துடன் அதன் நடுவே உள்ள மின்னிழை போன்ற அமைப்பும் வேறு எதிலும் இருப்பதாகத் தெரியவில்லை. 

இந்த ஒரு சித்திரத்தை வைத்து இப்படிப்பட்ட முடிவுக்கு நாம் வரமுடியாது என்பது நிஜம்தான். இது போன்ற பல அமைப்புகளுடன் கூடிய சித்திரங்கள் எகிப்து பிரமிட்களில் காணப்பட்டாலும், எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்து வெறுப்பேற்ற முடியாததாகையால், குறிப்பாக நான் தரும் இந்தப் படத்தைப் பாருங்கள். உங்கள் சந்தேகம் குறைவதற்கு சாத்தியம் அதிகமாகும்.

இந்தப் படத்தில் உள்ளவையும் மின்விளக்குகள்தானா? இல்லையா? என்கிற முடிவுக்கு நீங்கள் வருவதற்கு முன்னர், அவை வெளிச்சம் தந்தால் இப்படிக் காட்சியளிக்குமா என்னும் படத்தையும் தருகிறேன் பாருங்கள்.

'இவற்றை எல்லாம் எம்மால் நம்ப முடியாது. இவையெல்லாம் வேறு ஏதோ சித்திரங்கள்' என்று சொல்லி நானும், நீங்களும் இதிலிருந்து நகர்ந்து விடலாம். ஆனால் பாக்தாத் (Baghdad) நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள், 'இல்லை, இவை எல்லாம் மின்சாரம் சம்பந்தமானவையே' என்ற  முடிவுக்கு நாம் வரவேண்டிய சூழலில், எம்மை வைத்துவிட்டது.

கி.மு.250 காலங்களில் இந்தப் பொருள் வழக்கில் இருந்திருக்கிறது. அதைத் தற்சமயம் கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்களே அதைக் கண்டு கொஞ்சம் அசந்தது என்னமோ உண்மைதான். அந்தப் பொருள் என்ன தெரியுமா? பாட்டரிகள். 

"என்ன பாட்டரிகளா? கி.மு.250 வருடத்திலா?" என்றுதானே கேட்கிறீர்கள். நீங்களே பாருங்கள்.

எல்லாமே நாம் இப்போதான் கண்டுபிடித்தோம் என மார்தட்டும் எங்களுக்கு, இவையெல்லாம் மறைமுகமாக சாட்டையடிகளைக் கொடுக்கின்றன. இவை பற்றி பல மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், இவை எம்மை யோசிக்க வைக்கின்றன. உங்களையும் இப்போது யோசிக்க வைத்திருக்கும்.

சரி, இவையெல்லாம் உண்மையில் மின்சாரம் சம்பந்தமானவை என்றால், இந்த அறிவை அந்தப் பழமையான மக்கள் எப்படிப் பெற்றுக் கொண்டார்கள்? இந்த மாபெரும் கேள்வியுடன் நாம் எகிப்தைவிட்டு மாயனை நோக்கி நகரலாம்.

அதற்கு முன்னர் நீங்கள் வாழ்நாளில் நம்பவே முடியாத ஒரு வரலாற்று அடையாளம் ஒன்றை சுட்டிக் காட்டிவிட்டுச் செல்கிறேன். அதைப் பார்த்தால் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்து விடுவீர்கள். ஸ்பெயினில் கி.பி.1200 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரு சர்ச்சில் உள்ள சிலையின் இந்தப் படத்தைப் பாருங்கள். 

என்ன சரியாகத் தெரியாவிட்டால் கொஞ்சம் பெரிதாகப் பார்க்கலாம்.

நவீன விண்வெளி மனிதன் ஒருவன், அதே உடைகள், காலணிகள், தலையணிகளுடன் கி.பி.1200 ஆண்டில் கட்டப்பட்ட சர்ச்சில் இருப்பது ஆச்சரியத்தின் உச்சமல்லவா

இந்தச் சிலை எப்படி அந்தச் சர்ச்சில் வந்திருக்கலாம் என்ற கேள்வியை யோசித்தபடியே அடுத்த வாரம்வரை காத்திருங்கள்.

இதற்கான விடையையும், மாயன்களைப் பற்றியும் அடுத்த தொடரில் பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com