முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஆழமாக குழி தோண்டி புதைக்கப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல்: 2ஜியும் சோனியா 'ஜி'யும்
மாயா
உலகத்தை சுற்றி
இளைய அப்துல்லாஹ், லண்டன்
பலனளிக்குமா பிராஜெக்ட் சீட்டா.........?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
"முள்": துயரம் ஒரு பரிசு
ஆர்.அபிலாஷ்
கவிதை
அம்மா போன பிறகு
ஆர்.அபிலாஷ்
தாயற்றவனின் பசி
தேஜூ உஜ்ஜைன்
மனதின் சுயப்பரிசோதனைகள்
தி .ராஜேஷ்
கோழிப் பண்ணை
தேனம்மைலெக்ஷ்மணன்
காதல் மீன்கள்
டி.வி.ராதாகிருஷ்ணன்
சக மனிதன்
தனுஷ்
கண்ணாடி இரவு
கலாசுரன்
சொல்லுவதில் என்ன இருக்கிறது..!
இளங்கோ
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
-
அற்புதங்கள் நிகழும் தருணம்
சந்தியா
சொல்லா சாபமா
ஹேமா(சுவிஸ்)
சிறுகதை
கல்தூண்
லதாமகன்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
மொழியாக்கம்: ஆர்.அபிலாஷ்
இந்த வாரக் கருத்துப் படம்
வரவேற்பு
பாபுஜி
பறக்கும் விலை
பாபுஜி
உயிர்மை 100 சிறப்புப் பகுதி
2011 சென்னை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்
-
தாயற்றவனின் பசி
தேஜூ உஜ்ஜைன்

எரிந்து விழுகிறான்
திமிர் பிடித்தவன் எனாதீர்கள்
கேக்க ஆளில்லை குடுத்து வச்சவன்
என்றுரைக்காதீர்கள்
ஹோட்டல் சாப்பாடு மூணு வேளையும்
என பொறாமைப்படாதீர்கள்
Solitude is bliss - தனிமை ஒரு வரமென
பழமொழி பகன்று கடுப்பேற்றாதீர்கள்
 
காதலியற்ற அவனின் தனிமைப்பொழுதுகள்
எப்படிக் கழிகின்றனவென்று யோசியுங்கள்
ரமணன் எதிர்பார்க்கா கனமழை நேரத்தில்
எங்கிருப்பானவன் என எண்ணிப்பாருங்கள்
உணவகமில்லா வறண்ட பகுதியில் சுற்றுகையில்
பசிதோன்ற யாரையழைப்பான் என யோசியுங்கள்
 
தாயில்லாப்பிள்ளையென இரக்கமும் காட்டாதீர்கள்
முடிந்தாலொரு ஞாயிறு வீட்டுக்கழையுங்கள்
நலமேதானென்றாலும், நலம் உசாவுங்கள்
போலியாகவேனும் பாசம் காட்டி
கொஞ்சமே கொஞ்சமாய் ரசம் சாதம் போடுங்கள்
ஊறுகாயும் புளித்த மோர்சாதமும் இருந்தாலும் நன்றே....
 
தலைவாழை இலையும், எட்டுப்பத்து கறிகளும்,
தலப்பாகட்டு பிரியாணியும் தந்த சந்தோஷத்தை
நெஞ்சில் கசியும் நன்றியை, அவனின்
பார்வையில் பொங்கும் பாசத்தை
கவனிக்கத் தவற மாட்டீர்கள் நீங்கள்...
 
-
 
(தாயில்லாத, திருமணமும் ஆகாத நான்கு வருடங்களாக ஹோட்டலிலேயேயேயேயேயே சாப்பிட்டு நொந்து போயிருக்கும் ஒரு இளைஞனின் பார்வையில்)
 
சென்னையில் சுற்றித்திரியும் ஆயிரக்கணக்கான சினிமா உதவி இயக்குனர்களும், தொழில் நிமித்தம் குடும்பம் விட்டு வெளியூரில் இருக்கும் அத்தனை ஆயிரம் இளைஞர்களும் திருமணம் ஆகும் வரை அனுபவிக்கும் கொடுமை இது.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com