முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
உயிரோசை நூறாவது இதழ்
மனுஷ்ய புத்திரன்
புதிய தொடர் : தமிழ் சினிமாவில் கலை: நம் சொல்லாடல்கள்
ஆனந்த் அண்ணாமலை
இட் ஸ் நீயூ எக்ஸ்பீரியன்ஸ் ( its new experience)
அப்துல்காதர் ஷாநவாஸ்
ரஜினியும் கமலும் நல்ல நண்பர்கள்
இந்திரஜித்
பயனற்றுப் போகும் வேளாண் திட்டங்கள்
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
பணத்தின் அடையாளம்
நிஜந்தன்
கால்பந்து: சில அற்ப சந்தேகங்கள்
அப்துல்காதர் ஷாநவாஸ்
காமிக்ஸ் கனவுகள்
என்.விநாயக முருகன்
பிரச்சினையும், போராட்டமும்
சந்தியா கிரிதர்
மின்புத்தகங்கள்: திருட்டு, இலவசம் மற்றும் வியாபார உத்தி
ஆர்.அபிலாஷ்
குருதியும் கண்ணீரும் தோய்ந்த இடப்பெயர்வுகள்
சந்திரசேகர ஆஸாத்
தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் குறைந்து வரும் இடைவெளி: நக்கீரன் கோபால் முதல் சவுக்கு சங்கர் வரை
மாயா
கவிதை
அது கவனிக்கப்படலாம் ...!
கலாசுரன்
பிரிவின் வாசம்..!
இளங்கோ
வன்புணர்ச்சிக்கு உத்தேசம்..
ஆறுமுகம் முருகேசன்..
பாண்டித்துரை கவிதைகள்
பாண்டித்துரை
மர்மத்தின் முடிச்சு
ப.மதியழகன்
சூறாவளியின் பாடல்
எம்.ரிஷான் ஷெரீப்,
சிறுகதை
வெள்ளைக்குடைக்குள்
கே.பாலமுருகன்
நானும் உன் பின்னால் அங்கே வர
லதாமகன்
ரங்க சேவை
லாவண்யா சுந்தரராஜன்
'அது'
அஷ்ரஃப் சிஹாப்தீன்
இந்தவாரக் கருத்துப்படம்
ஜெபம்
பாபுஜி
பாறை
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
பயனற்றுப் போகும் வேளாண் திட்டங்கள்
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா

ஒவ்வொரு வெப்ப காலமும் மக்களை, தண்ணீர் வேண்டி கடவுளிடம் கெஞ்ச விடுகிறது. சாதி மதம் பார்க்காமல், பகுத்தறிவுக், கூச்சல்களைக் கடந்து, அணைக்கட்டின் கீழ் பகுதி ,தேக்கங்களின் வறண்ட நிலப் பகுதி , கருப்பசாமி கோயில் , ஹைடெக் கோயில்கள் என பாகுபாடின்றி அவரவர்க்குத் தெரிந்த வகையில் வருண பகவானிடம் வேண்டுதல் விடுக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில், மழை காலத்தில் குறுகிய விவசாயிகளே பலன் பெறுகிறார்கள். பலர் மழை நீரை நம்பியே வாழ்கிறார்கள். புயல், வெள்ளம், என இயற்கை இடர்ப்பாடுகள் அவ்வப்போது கிராமங்களையும், வயல் வெளிகளையும் அழித்து வருகிறது. நாட்டின் ஜிடிபி வளர்ச்சி ,விவசாயத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது. வெள்ளையும் சொள்ளையுமாக, அதிகாரிகளும் அமைச்சர்களும் யாருக்கும் விளங்காத புள்ளி விவரங்களைத் தெரிவிக்க பாமரனும், படித்தவனும், பளிச்சிடும் தொலைக்காட்சியை மட்டும் மையமாக வைத்து தன் நினைவலைகளை எங்கோ தொலைத்தவாறே உள்ளான். அப்படிக் கிடைத்த தகவலில் இன்றைய ஜிடிபி உற்பத்தி 15.7 என கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட குறைவு. ஆனால் நாட்டின் அரை மில்லியன் மக்களோ விவசாயத்தை சார்ந்தே உள்ளனர் என்கிறார் தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் டாக்டர் பிரமோத்குமார் ஜோஷி.

141 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலத்தில், 80 மில்லியன், மழைநீரைச் சார்ந்தே உள்ளது. 60 சதவீதம் நிலத்தடி நீரை , அதன் உபரியான போர்வெல், கிணற்று நீர் பாசனம் என நிறைவு செய்து கொள்கிறது. முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, "அணை வாய்க்கால் "தண்ணீர் கிடையாது என்பதுதான். பசுமைப்புரட்சி வெற்றி பெற்ற ஹரியானா, பஞ்சாப், வடக்கு உத்தரப் பிரதேசம், போன்ற மாநிலங்களின் விவசாயம், கிணற்று நீரையும், போர்வெல் நீரையும் நம்பியே நடைபெறுகிறது. இந்த ஆச்சரியமான விபரம், அணைகளின்பால் வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்தது. நம் தாத்தாக்களுக்கும், பாட்டிகளுக்கும், அவர்கள் தந்தைகளுக்கும் பயன்பாட்டு செயல் அறிவு தெளிவாகவே பிறப்போடு வளர்ந்திருந்தது. எப்போது மழைவரும் எவ்வளவு காலம் நீடிக்கும், எந்த விதமாகப் பயிர்களை நடலாம், எப்போது அறுவடை செய்யலாம் என அனைத்தும் அறிவர். இப்போதைய புத்தக அறிவும், அதன் உருவாக்கமான அரசு அதிகாரிகளும் ,அவர்களைப் பேணிக்காக்கும், மருந்து, விதை ,உரக் கம்பெனிகளும் மக்களின் மரபியல் திறனை மழுங்கடித்து வெற்றி பெற்று விட்டனர்.

சந்தைப் பொருளாதாரம் மையப்படுத்தப்பட்ட பின்பு , "பணம் " என்ற வார்த்தை மிக முக்கியமாகியது. விவசாயிகளை வியாபாரிகளாக்கி ,பெரும் முதலாளிகள், தங்கள் உற்பத்திக் கூடங்களாக இவர்களை மாற்றினர். இவர்களும், அதிக நிலங்களில் ஒரே வகையான பயிர்களைப் பயிரிடல், குறுகிய கால பயிர்கள், மரபணுமாற்றப்பட்டது, ஹைபிரிட் என்ற பல நாமங்களைச் சூடிக்கொண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு உலாவரும். விதைகளை உபயோகிக்கத் துவங்கினர். இதை ஊக்குவிக்க , நிலத்தில் அதிக வேதியியல் உரங்கள், பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிப் போனார்கள். விளைவு, நிலம் பாழானது தான். மழைக்காலத்தில், பயிரிடல் சவாலாகிப் போனதும், இது போன்ற கருத்துகள் வலுவடைய பின்னணியானது. அணையை நம்பிய விவசாயம், மெல்ல மக்கள் மனதில் உட்புகத் துவங்கியது. இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை மழைக் காலம், அப்போது பெய்யும் மழை அளவு 1100 மில்லி மீட்டர். இந்தியப் புவியியல் அமைப்பு மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும் என்கிறது. ராஜஸ்தானில் 100 மில்லி மீட்டர் என்றால், மேகாலயத்தில், 11000 மி.மீ கொட்டித் தீர்க்கிறது. அதற்கேற்றாற் போல் , வேறுபட்ட பயிர்களை , இதுகாறும் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர். விபரீத ஆசையைத் தூண்டும் சந்தை பொருளாதாரம், விவசாயிகளை வேறு நோக்கோடு செயல்பட தூண்டுகிறது. கோடைகால மாம்பழத்தைக் குளிர் காலத்திலும் ,மக்களை விரும்ப வைக்கிறது. குளிர் கால ஆரஞ்சு பழங்களை கோடை காலத்தில் விளைவிக்கிறது. "பணத்திற்காக மாறுபட்ட பயிர்களை , மாறுபட்ட சூழ்நிலையில் பயிரிடும் போது மண்ணும் பயிரும், அதன் விளைச்சலும் விஷமாகிப் போகின்றன" என்கிறார் வேளாண் ஞானி மசானபு ஃபுக்கோக்கா . இந்த அக்கிரமத்திற்கு அறிவியலும் புகை போடுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த , நாமல் பாய் " அணைகள் இவ்வாறான எண்ணங்களுக்கு , எண்ணையிடுகின்றன. இயற்கை மீது நமது பேராசையைத் திணிக்க ,அதன் விளைவு சமச்சீரான உணவு கிடைக்காமல் போகிறது." என்கிறார். இவர் அணைகள் எதிர்ப்பு நிலைப்பாடை கொண்டவர்.

அதே மாநிலத்தை சேர்ந்த விஜய் ஜர்தாரி ,மலைகளில் , பழங்குடிகளின் உதவியோடு , பழ மரங்கள் , விதைகள், மரக் கன்றுகன், வாசனை செடிகள் மற்றும் பருவ காலத்திற்கு ஏற்ற பயிர்களைப் பயிரிட வலியுறுத்தி வெற்றி பெற்றவர். வெப்ப காலத்தில் பயிரிடப்படும் கம்பு, கேப்பை, குதிரை வாலி போன்ற சத்தான உணவுகளை, படித்த கும்பல். " காட்டு மிராண்டிகளின் உணவு (BARBARIAN'S FOOD) என்ற பட்டம் சூட்டி ஓரங்கட்டி ,அரிசி, கோதுமை, சோளம் போன்றவற்றைப் பயிரிட வலியுறுத்துவதும், ஓட்ஸ் ( நம் நாட்டு கம்பு வகை போன்றது) , கார்ன் பிளாக்ஸ் ( வறுத்த சோளம் --பாட்டி தருவாள் ) போன்றவற்றை இறக்குமதி செய்து அதிகாரிகளும் ,கம்பெனிகளும், அதில் வெற்றியும் பெற்று விட்டனர். அதிக சுவை , மென்மைத்தன்மை, பார்க்க அழகு, எளிதில் ஜீரணமாதல் என ஏதேதோ மக்களை நம்ப வைக்கும் போதை வார்த்தைகளை உபயோகப்படுத்தி , ஒன்றும் அறியாத பழங்குடி மக்களையும், கிராமத்தினரையும், திசை திருப்புவதை வேதனையோடு குறிப்பிடுகிறார். சில காலங்களுக்குப் பின், இம்மக்கள் தன் பிடிக்குள் வந்ததை உணர்ந்து மிகக் குறைந்த விலைக்கு அவர்களின் விளை பொருட்களை வாங்குகின்றனர். அதாவது அடிமைக் கலாச்சாரம் இன்னும் ஒழியவில்லை என்பதற்கு இது ஓர் உதாரணம்.

விவசாய முன்னேற்றமே நாட்டின் முக்கிய வளர்ச்சி என தூக்க கலக்கத்தில் கூறிய மன்மோகன் சிங் ,சற்று உணர்ச்சி வசப்பட்டவராய் "பாரத் நிர்மாண் " என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். பெரிய அணை ,அகண்ட நீர்த்தேக்கம் என்பது இதன் நோக்கம். மழையற்ற காலத்திலும், நிலத்தைப் பயன்பாட்டுக்கு இட்டுச் செல்லல் , அதிக வருவாய் போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களை சுமந்து , பல கோடி ரூபாய்யைக் கபளீகரம் செய்யும் இத்திட்டத்தை, அப்போதே விவசாய அறிஞர்களும், பழங்குடி இனத்தவர்களும் எதிர்த்தனர். கிராமங்கள் அழிக்கப்படுதல், பல்லாயிரக்கணக்கானவரின் கட்டாய இடம் பெயர்தல் போன்ற முக்கிய பிரச்சினைகள். மறைக்கப்பட்டதன. மைய அரசு இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், நீர்தேக்க முறைகளைக் கடந்த ஆண்டுகளில் அதிக முனைப்புடன் செயல்படுத்தியது. இப்போது மைய அரசின் விவசாய வளர்ச்சிக் குழுமமே "இத்திட்டத்தால் விவசாய வளர்ச்சி முன்னேற்றம் அடையவில்லை "என திட்டவட்டமாக அறிக்கை சமர்ப்பித்தது. மக்களின் பல்லாயிரம் கோடி வரிப்பணம் வீணடிக்கப்பட்டது . விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறி அவை ரியல் எஸ்டேட் காரர்களால் வீட்டடி மனையாக உருமாறியது.

இத்தகைய மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்திய ஹிமான்ஷூ தாக்கர் பல அதிர்ச்சி தரும் தகவல்களைக் கூறுகிறார். 1991 முதல் 2007 வரை நீருக்காகப் பல கோடிகளை மைய அரசு செலவிட்டு தேக்கிய நீரின் அளவை , பருவ மழை ஓரிரு நாட்களில் தந்து நிறைத்து விட்டது. கடந்த 15 ஆண்டுகளில் 1,42,000 கோடி ரூபாய் நீருக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இதன் மறு விளைவு அதிர்ச்சிகரமாக இருந்தது. யாரும் எதிர்பாரா வண்ணம், 24.4 லட்சம் ஹெக்டேர் விளைநிலமும் இத்திட்டத்திற்காக முங்கிப்போய் விளைச்சலும் பெரும் வீழ்ச்சி அடைந்தது. சிறு மாநிலங்களில் இதைச் செயல்படுத்தும், சிறு அதிகாரிகள் கூட கொள்ளை அடித்துப் பணத்தை வீடு சேர்ப்பதில் சம்பல் கொள்ளையர்களை விட மிஞ்சி விடுகிறார்கள். உத்தரகாண்ட் மாநில கடைநிலை ஊழியர் ஒருவர், இத்திட்டத்தின் மூலம் 60 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து ,தன் படுக்கை அறையில் பதுக்கி வைத்திருந்தாராம். 2009 ல் மட்டும் 3 கோடி ரூபாய் இவ்வாறான ஊழியர்களிடமிருந்து மட்டும் வசூலாக்கப்பட்டுள்ளது.

மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் வழக்கம் போல் 2010 ல் பருவ மழை நன்றாக இருக்கும் என ஆரூடம் கூறியுள்ளது. பல சமயங்களில் தவறான அறிக்கை சமர்பிக்கப்பட்டு , காமெடி பீஸாக, தங்களை வெளிக்காட்டி கொள்கிறார்கள். தங்கள் அறிக்கை இரண்டு தினங்களுக்கு முன்பும், பின்பும் மட்டுமே பொருந்தும் என்பது இவர்கள் வாதம். ஒரு விவசாயி "2 தின அறிக்கை" மூலம் எப்படிப் பயிர்களை ,விதைகளை நடமுடியும்?

புவி அறிவியலின் மத்திய இணை அமைச்சரான டாக்டர் . ஷைலேஷ் நாயக், ‘தற்போது நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன .இனி வரும் நாட்களில் துல்லியமான தகவல்களைத் தர ஆய்வு மையம் முயற்சிக்கும் என சப்பைக் கட்டு கட்டுகிறார். ‘நாசாவோ கட்டிடம் கட்ட தேவையான நீரை அதிகப்படியாகவே நிலத்திலிருந்து உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது. இது நன்றன்று. இயற்கை நீரைத் தேக்கி அதைக் கட்டிடம் கட்ட பயன்படுத்தும் முறையை இந்தியாவில் கட்டாயம் செயல்படுத்தவேண்டும் . இல்லையேல், பெரும் வறட்சியை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கிறார்.

" ஒருவருக்கொருவர் தங்கள் சுட்டு விரலை நீட்டிக் குறை சொல்வதற்குப் பதிலாக தாங்களாகவே முன் வந்து இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொள்வதே ஆகச் சிறந்தது " என்ற மகாத்மாவின் வரிகள், இப்போதும் என் மனதை நெருடியவாறே உள்ளது.

kannan233@gmail.com

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com