முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
விருது பெற்ற மூத்த படைப்பாளிகள்!
இந்திரஜித்
ஆயிரத்தில் ஒருவன்: கையாலாகாத கைதி
ஆர்.அபிலாஷ்
ஆயிரத்தில் ஒருவன்- வரலாறு என்கிற புனைவின் மீதான கலை
கே.பாலமுருகன்
குப்பை தேசம் ------?
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
ஏலம் போகும் மனிதம்
நிஜந்தன்
வெள்ளி முளைத்தும் விடியாத சமூகத்தேக்கம்
கோ.புண்ணியவான், மலேசியா
கவிதை
வரையறைகள்
தரங்கினி
நேற்று இன்று நாளை..
நவீன்
ஒரு சிணுங்கலுக்குப்பின்...
ஜனா கே
கவிதை எழுதுவோர் கதை
லதாமகன்
கிளையகற்றி.. கை விரித்து..
இளங்கோ
போர்களுக்கு முந்தைய விருந்துகள்
மதன்
சிறுகதை
கிருஷ்ணி...
கார்த்திகாவாசுதேவன்
இந்த வாரக் கருத்துப் படம்
சொந்தங்களின் பார்ட்டி
/
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
கவிதை எழுதுவோர் கதை
லதாமகன்

 

இந்த கவிதை
அடுத்த தலைமுறையில்
 நிற்காது என்றான்
அந்த கவிஞன்.
அடுத்த தலைமுறையில்
கவிஞர்களுக்கு பஞ்சம் வரப்போவதாய்
உனக்கு யார் சொன்னது?
0


அணில் தூங்கும் இடம் பற்றி
கவலைப்பட ஒரு கவிஞன் இருந்தான்.
அவன் தூங்கும் இடம் பற்றி
கவலைப்பட இங்கு யாருமில்லை.
o


“கவிஞர்கள் பெரும்பாலும்
இளவயதிலேயே இறந்து விடுவது
ஏன்?” என்றாள் அவள்
“இப்படி கேள்வி கேட்பதால்தான்”.
o


மரத்திலிருந்து உதிரும் பூக்களை
கணக்கெடுக்க வேண்டியிருக்கிறது
குழந்தையின் விளையாட்டுகளை
கவனிக்க வேண்டியிருக்கிறது
சூழ்நிலையின் அபத்தங்களுக்கு
காத்திருக்க வேண்டியிருக்கிறது
துரோகத்தின் கணங்களை
நினைவில் வைத்திருக்க வேண்டும்
சொந்த விஷயங்களை
அவர்களுக்கு விளக்கமாய் சொல்ல வேண்டும்.
கவிஞனாய் இருப்பதற்கு பதில் சும்மா இருக்கலாம்.
o


அந்த கவிஞன் திருடன்.
இவன் கோழை.
இன்னொருத்தன் குடிகாரன்.
மற்றொருவன் ஸ்த்ரீலோலன்.
கவிதாயினி ஒருத்தி காமம் பீடித்தவள்.
இன்னொருத்தி சிகரெட் ரசிப்பவள்.
ஒருத்தி திமிர் பிடித்தவள்.
போதும்.
இனி
அவர்களின் எழுத்துக்களைப்பற்றி பேசுங்கள்.
o

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com