முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
பித்தி மொஹந்தி – நம் காலத்தின் நாயகன்
ஆர்.அபிலாஷ்
சொலவடைகளும் பழமொழிகளும்
கழனியூரன்
தி கிரேட் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்........!
கிராபியென் ப்ளாக்
‘கனவாரோ மீயோ’ (ஜோர்பா தி க்ரீக்)
சின்னப்பயல்
கவிதை
வீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா!
வித்யாசாகர்
சுயம்பு
ஷம்மி முத்துவேல்
இளங்கோ கவிதைகள்
-
மகா இயக்கத்தின் சிறு நினைவு சிதறல்கள்
வளத்தூர் தி .ராஜேஷ்
சிறுகதை
இடைவெளி
ராம்ப்ர‌சாத்
பொது
மகா இயக்கத்தின் சிறு நினைவு சிதறல்கள்
வளத்தூர் தி .ராஜேஷ்

தன் இயக்க சுழலில் 
எத்தனை விதமாக 
மறுதலித்து கொண்டிருக்கிறது
ஒப்பற்ற மனம் .

எதிலும் தன் அடக்குமுறையில் 
மவுன சிறகுகளை 
முறித்து கொண்டிருந்தேன் 
உணர்தலின் வலி 
பெருவெளி எங்கும் 
நிறைந்து கொண்டிருக்கிறது .
இதில் 
தன் நுண்ணிய பகிர்வு 
எண்ணுதலை விட 
மிகு நுண்ணிய தன்மை கொண்டது.
அதில் 
ஓர் மவுன இடைவெளியை 
பிரபஞ்ச அலையின் 
இயக்கமாய்
 
மவுன சிறகுகளை 
விடுவிக்க முயல்கிறது.

சில அனுமானத்தின் நிழலில் 
இரவை உற்றுநோக்கி கொண்டிருக்க 
அசைவுறும் பிரபஞ்ச நிழல்
தன்னின் பிரதிபலிப்பை 
எங்கு கொண்டு
சேகரித்து கொண்டிருக்கிறது .

இங்கு 
பெற்றுக்கொண்டவையில் 
தொன்மையின் ஒளிர் சிதற 
தன் பிம்பம் எதன் எதிரொளி.

மேலும் காத்திரு 
அகாலம் 
தன் வினையை
என்னென்றும் உற்பத்தி 
செய்து கொண்டிருக்கும் .

------

தன்  நினைவுகள்
உன் காலத்தின்
முடிவிலியில்
தொடங்குகிறது.

நினைவாய்
உன் புன்னகையில்
எஞ்சி இருப்பதை
சேகரித்து கொண்டிருக்கிறேன்
நம் பிரபஞ்ச
எதிர் காலத்திற்காக.

 
உன் மவுனம்
மட்டுமே
என் நிறைவாய்
நிறைகிறது .
அதுவே
என்னை வழி நடத்துகிறது .

 
எங்கெங்கும்  உன் மன ஒலிகள்
என்னை
வந்தடைகிறது
மவுன சிறகில்.
அவ் உணர்தல்
தனித்தன்மையுடன்
பிரபஞ்சம் எங்கும்
எதிரொலித்து கொண்டிருக்கிறது .

 
உன் நிழலில்
ஆதியின் ஒளியினை
வழிபட்டு
கொண்டிருக்கிறேன் .

உன் மறு வருகையை
பிரபஞ்ச உணர்தலில்
மகா இயக்கமாக்கு . 

**

 

 

 

 

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com