முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 21
ராஜ்சிவா
நகரத்தின்கதை பாகம் - 30
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் - 26
நர்சிம்
அயல்பசி
ஷாநவாஸ்
T20 கிரிக்கெட் – மீசை ஒட்டிய குழந்தைகளும் குழந்தைகளாய் நடிக்கும் பெரியவர்களும்
ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்....கொஞ்சம் ஹெல்தியாய்.....
கே.பத்மலக்ஷ்மி
கவிதை
மிடறு இறங்கும் அர்த்தங்கள்..
இளங்கோ
காதல் ரோஜா
சின்னப்பயல்
தீர்ப்பு
செல்வராஜ் ஜெகதீசன்
ஞாபகார்த்தம்
ஷம்மி முத்துவேல்
கடவுளின் இருண்ட வனமும் நேயாவின் ஒரு வானமும்...
கிரிஷாந்
மன ஒலியின் ஓலம்
வளத்தூர் தி.ராஜேஷ்
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..
வித்யாசாகர்
சிறுகதை
பயணம்
ராமலக்ஷ்மி
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..
வித்யாசாகர்

டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்.. 

விதை வெளிவராததொரு வலி தெரியுமா?

பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல
அமரும் மௌனத்தின் கணம்
கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி
கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு.

ஒவ்வொரு வார இதழ்களின்
பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப்
புரட்டுகையில்
தனது கவிதை வெளிவராத இதழ்
தீயைப் போலே உள்ளே
இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது.

பசிக்கும் குழந்தை ஓடிச் சென்று
சமையலறை புகுந்து
ஒவ்வொரு சட்டியாக இதில் சோறிருக்கா
இதில் சோறிருக்கா யெனத் தேடுமொரு
வலி நிறைந்த பசியது.

என்றாலும், தன்னைப் புதைத்துக் கொள்ளாமலும்
எரித்துக் கொள்ளாமலும்
வாராவாரம் சாகும் பல இதயங்களின் மரணத்தை
மிதித்துக் கொண்டு யாரோ ஒருசிலரின் கவிதைகள்
எங்கோ ஒரு சில இதழ்களில்
எப்படியோ வந்துதான் விடுகிறது..

வெளிவராத கவிதைகளெல்லாம்
வெறுமனே யாரோ படிக்காத அல்லது
பிரித்துக் கூடப் பார்த்திடாத தபால்களிலோ
மின்னஞ்சல் வந்துவிழும் இன்பாக்ஸ்களிலோ
யாருக்கும் அனுப்பப் படாமலே பெருகிக்கிடக்கும்
டிராப்டாகவோ நிறைந்து நாட்களை மட்டுமே தின்கிறது.,

பின் நாளொன்றில்
மொத்தமாக ஒரு கிளிக் அடித்து
எழுதிய கவிஞர்கள் குப்பைகளாய் வந்து குவிந்திருக்கும்
மின்னஞ்சல்களின் பெயரோடு சேர்த்து
டெலிட் செய்யப்பட்டதில்
நானும் பலமுறை இறந்துதான் போனேன்...

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com