முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 21
ராஜ்சிவா
நகரத்தின்கதை பாகம் - 30
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் - 26
நர்சிம்
அயல்பசி
ஷாநவாஸ்
T20 கிரிக்கெட் – மீசை ஒட்டிய குழந்தைகளும் குழந்தைகளாய் நடிக்கும் பெரியவர்களும்
ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்....கொஞ்சம் ஹெல்தியாய்.....
கே.பத்மலக்ஷ்மி
கவிதை
மிடறு இறங்கும் அர்த்தங்கள்..
இளங்கோ
காதல் ரோஜா
சின்னப்பயல்
தீர்ப்பு
செல்வராஜ் ஜெகதீசன்
ஞாபகார்த்தம்
ஷம்மி முத்துவேல்
கடவுளின் இருண்ட வனமும் நேயாவின் ஒரு வானமும்...
கிரிஷாந்
மன ஒலியின் ஓலம்
வளத்தூர் தி.ராஜேஷ்
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..
வித்யாசாகர்
சிறுகதை
பயணம்
ராமலக்ஷ்மி
மன ஒலியின் ஓலம்
வளத்தூர் தி.ராஜேஷ்

மன ஒலியின் ஓலம்

ஓர் உணர்தலை அனைத்து விதமாகப் 
பரிசோதனை செய்து கொண்டிருக்கிறேன்

உருமாற்றங்களின் கற்பனையை உடைத்தெறிக்க 
சிற்சில கணங்களின் காலம் இது
.


உருவாகியிராத திசையின் தென்றல் தீண்ட 
உருவாகிறது என் மனதின் அசைவுகள்
.
பிரபஞ்ச துருவங்கள் தொடர்ந்து சலனப்படுத்த 
மித மிஞ்சிய உணர்தலை என்ன செய்வது
.

என் இல்லாமையின் இருப்பை 
எவ்விதமாக்க் கொண்டாலும் அவைகள்
 
கற்பனையன்று மீதங்களின் மனப் பகிர்வு
.

எதையாவது எதிர் கொள்ள அனைத்தும் இருக்கிறது
ஏற்றுக்கொள்ள சிறிது தான் 
எஞ்சி இருக்கிறது
. 

நிகழும் சொற்கள் யாதெனில் 
ஒன்றுமில்லாமல் இருப்பது
.
அதில் உணர்தல் 
என்  இருப்பின் பெருவெளி
.

எவ்வித தொடர்பும் இன்றி
 
இயற்றப்படும் இவைகள்
 
ஆதியின் சலனத்தின்
 
ஓர் நினைவுகளின் சான்றுகள்
.

என் வார்த்தைகளை இணைத்துக்கொள்ளுங்கள் 
இல்லையெனில் விட்டு விடுங்கள்
 
ஒலித்துக் கொண்டிருக்கும் மன ஒலியின் ஓலம்
 
பிரபஞ்சத்தின் இருப்பு
.

முற்றும் தொலைந்த ஒன்று 
என் இயலாமையுடன் தொற்றிக்கொண்டிருக்கிறது
.

உன் அனுமானத்தின் முன்பே
நிகழ்ந்து விடக் கூடியது என் நொடிகள்
. 

முறையொன்றும் ஏதுமில்லாமல் 
தகித்துக் கொண்டிருக்கிறது நான்
 
இதுவரை பின்பற்றாத மவுனங்கள்
.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com