முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 21
ராஜ்சிவா
நகரத்தின்கதை பாகம் - 30
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் - 26
நர்சிம்
அயல்பசி
ஷாநவாஸ்
T20 கிரிக்கெட் – மீசை ஒட்டிய குழந்தைகளும் குழந்தைகளாய் நடிக்கும் பெரியவர்களும்
ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்....கொஞ்சம் ஹெல்தியாய்.....
கே.பத்மலக்ஷ்மி
கவிதை
மிடறு இறங்கும் அர்த்தங்கள்..
இளங்கோ
காதல் ரோஜா
சின்னப்பயல்
தீர்ப்பு
செல்வராஜ் ஜெகதீசன்
ஞாபகார்த்தம்
ஷம்மி முத்துவேல்
கடவுளின் இருண்ட வனமும் நேயாவின் ஒரு வானமும்...
கிரிஷாந்
மன ஒலியின் ஓலம்
வளத்தூர் தி.ராஜேஷ்
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..
வித்யாசாகர்
சிறுகதை
பயணம்
ராமலக்ஷ்மி
கடவுளின் இருண்ட வனமும் நேயாவின் ஒரு வானமும்...
கிரிஷாந்

கடவுளின் இருண்ட வனமும் நேயாவின் ஒரு வானமும்...


நேயா சின்ன நட்சத்திரங்களை
வளர்க்கிறாள்.
ஒரு வானத்தை வசீகரிப்பதென்பது
அவளால் தான் நிகழக் கூடும்
.

பச்சையாய் இருண்டது வனம்
.
நிறங்களால் படர்ந்த ஓவியம் அது
.

பெரிய நிலவின் கீழ் அவள்
தனது நாட்குறிப்பில் அதையெல்லாம்
கணக்கு வைத்திருக்கிறாள்
.
ஏழு பறவைகள் பதின் மூன்று வண்ணத்துப் பூச்சிகள்
ஒரு நத்தை
அவள் சந்திக்காத அந்த ஓநாயும்
அவளது கதைகளில் உண்டு
.
அவளது இருப்பில் எப்பொழுதுமே
ஆச்சரியங்கள் நிரம்பியிருக்கும்
.

எனது பெயரை அழகாகப் பாடுவாள்
நேயா எனது மகளே
!

ஒரு நாள்
அவள் வளர்த்த நட்சத்திரமொன்று
வனத்தில் உதிர்ந்தது
.
வனத்திலெங்கும் இருள் படிந்தது
.
வானத்தில் ஒன்றையும் காணோம்
.
ஒரு துளி கண்ணீரேனும் இல்லை
.

"நேயா நீ எங்கே இருக்கிறாய் ?"

அவள் எங்கே போனாள் என்று
யாருக்கும் தெரியவில்லை
.
மகளே நேயா ,
நீயின்றித் தனித்திருக்கின்றன
வாசனையற்ற இருண்ட வனமும்
நட்சத்திரங்களின் பிரார்த்தனையும்
.

பின்னொரு நாள்
ஏதோ ஒரு நட்சத்திரம்
வானத்தில் புதிதாக முளைத்திருந்தது
.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com