முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 21
ராஜ்சிவா
நகரத்தின்கதை பாகம் - 30
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் - 26
நர்சிம்
அயல்பசி
ஷாநவாஸ்
T20 கிரிக்கெட் – மீசை ஒட்டிய குழந்தைகளும் குழந்தைகளாய் நடிக்கும் பெரியவர்களும்
ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்....கொஞ்சம் ஹெல்தியாய்.....
கே.பத்மலக்ஷ்மி
கவிதை
மிடறு இறங்கும் அர்த்தங்கள்..
இளங்கோ
காதல் ரோஜா
சின்னப்பயல்
தீர்ப்பு
செல்வராஜ் ஜெகதீசன்
ஞாபகார்த்தம்
ஷம்மி முத்துவேல்
கடவுளின் இருண்ட வனமும் நேயாவின் ஒரு வானமும்...
கிரிஷாந்
மன ஒலியின் ஓலம்
வளத்தூர் தி.ராஜேஷ்
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..
வித்யாசாகர்
சிறுகதை
பயணம்
ராமலக்ஷ்மி
கொஞ்சம் டேஸ்டியாய்....கொஞ்சம் ஹெல்தியாய்.....
கே.பத்மலக்ஷ்மி

என் மாமனாரின் உடல்நலக் குறைவு, அவரது திடீர் மரணம், இந்நிகழ்வு என் குடும்பத்தில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாய் நானும், என் கணவர் கிருஷ்ணன் ரஞ்சனாவும் சில வாரங்களுக்குக் கட்டுரைகள் எழுத முடியாமல் போனது. எங்கள் கடமையை நிறைவேற்றிவிட்ட முழு மன திருப்தியோடு மீண்டும் இத்தொடரைத் துவங்குகிறேன். என் கணவரது கட்டுரை வரும் வாரத்தில் வரும்.

***

காஷ்மீரின் பழமையான கோவில்களுள் மிக முக்கியமானது பாராமுல்லா கோடி தீர்த்த முக லிங்கர் கோவில். பன்றியின் வாய் எனப் பொருள்ட வராக முஹ் என அழைக்கப்பட்ட இப்பகுதி பின்னர் வாராமூலா என வழங்கப்பட்டு பின்னர் பாராமுல்லா என பெயர் மாற்றம் கொண்டது. இது ஸ்ரீ நகரிலிருந்து 55கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு சமயம் பார்வதி தேவி சதி சரஸ் என்ற ஏரியின் உரு கொண்டு சிவனைப் பூஜிக்க வந்தபோது ஜலோத்பவன் என்ற அசுரன் இந்த ஏரியைக் கைப்பற்றிக் கொண்டு சிவ பூஜையைத் தடுத்தான், அப்போது , விஷ்ணு வாராக உரு கொண்டு தன் கூர்மையான பற்களால் மலையில் துளையிட்டு நீர் வரச் செய்ததால் இப்பகுதி வராக மூலா என பெயர் வழங்கப்பெற்ற இப்பகுதி காஸ்யப முனிவரால் உருவாக்கப்பட்டது என்கிறது நீலமாதா புராணம். விதஸ்தா நதியின்(தற்போதைய ஜீலம் நதி) கரையில் கோடி தீர்த்தம் எனுமிடத்தில் மிகப்பழமையான சிவாலயம் உள்ளது. இந்நதியின் கிழக்குக் கரையில் ஆதி வாராகருக்கான பழமையான கோவில் ஒன்றும் உள்ளது. ஹர ராத்திரி எனும் தாந்திரீக முறைப்படி கொண்டாடும் விழா இக்கோவிலில் நடத்தப்படுகிறது. இப்பூஜையின் போது செய்ய வேண்டிய தாந்திரீக வழிபாட்டு முறைகளை பிருங்கஸ சம்ஹிதை என்கிற நூல் விரிவாக்க் கூறுகிறது. இவ்வாலயத்தில் எங்குமில்லாத படி சிவலிங்கத்தில் முக உருவம் உள்ளது தனிச்சிறப்பு. அருகில் கங்கா நோர் என்ற புனித நீரூற்றும் உள்ளது. காசியை விடவும் சிறந்த தலம் என்கிறார்கள் ஆன்றோர்கள். இந்நதியில் கோடிக்கணக்கான புண்ணிய நதிகள் சங்கமிப்பதால் இங்கு இறந்தவர்களது ஈமக்கிரியைகள், இங்கிருக்கும் கோடி காட்டில் செய்தால் அவர்களது பாவங்கள் நொடியில் தீர்ந்து அந்த ஆன்மாக்கள் சிவலோகப் பதவி அடையும் என்பது இந்த தலத்தின் தனிச்சிறப்பு. யுவான் சுவாங்கின் இந்திய விஜயத்தின்போது இப்பகுதியில் கனிஷ்கர் காலத்திய செப்பேடுகள் புதைபட்டுள்ளதைக் கண்டறிந்து உலகிற்குக் காட்டினார்.

***

 

ரோத்

ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் வரும் புன் டேயுன் விழாவின்போது முக்கியமாக நிவேதிக்கப்படும் இனிப்பு இது.

1 கப் கோதுமை மாவு ,1/4 கப் சர்க்கரை, 1/4 கப் பால், 3 டே.ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய், 1/4 ஸ்பூன் ஏலப்பொடி, 1 ஸ்பூன் கசகசா, பொரிப்பதற்குத் தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ,பாதாம், முந்திரி விருப்பத்திற்கேற்ப.

அகலமான பாத்திரத்தில் வெண்ணெய் ,ஏலப்பொடி ,சர்க்கரை சேர்த்து நுரைத்து வருமாறு அழுத்தி தேய்த்துக் குழைக்கவும். அதில் கோதுமை மாவு சேர்த்துக் கட்டியில்லாமல் கலந்து விடவும். பின் பால், தேவையானால் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசையவும்.( சப்பாத்திக்கு பிசைவது போல். ) 1/2 மணி நேரம் ஊற விடவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி , தடிமனான பூரிகளாகத் தேய்க்கவும். ஒரு கடாயில் நெய்யை காய வைத்து, பொன்னிறமாகும் படி பொரிக்கவும் .குறைந்த தீயில் ஒவ்வொன்றாகப் பொரித்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே அதன் மீது தோலுரித்து ,சன்னமாக சீவிய பாதாம், முந்திரி, கசகசாவைத் தூவி அலங்கரிக்கவும்.

***

பனீர் மசாலா கிரேவி

தேவையானவை

பனீர் ---1கப், வெங்காயம்---2, தக்காளி --1/4 கி, இஞ்சி பூண்டு விழுது ---1 ஸ்பூன், கரம் மசாலா ---1 ஸ்பூன், மல்லித்தூள் ---1 ஸ்பூன், மி. தூள் ---2 ஸ்பூன், ஊற வைத்து அரைத்த முந்திரி விழுது ---1/4 கப், உப்பு தேவையான அளவு, எண்ணெய் ---2 கரண்டி,

தாளிப்பதற்கு

பட்டை, சோம்பு, லவங்கம், ஏலம்

முதல் தயாரிப்புகள்

வெங்காயத்தை விழுதாக அரைக்கவும், தக்காளியை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் மூடிவைத்து பின், தோலுரித்து மிக்ஸியில் அரைத்து கூழாக்கவும்.
கடாயில் எண்ணெய்விட்டு தாளித்து, வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். தக்காளி விழுது , மல்லித்தூள், மிளகாய் தூள், சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பச்சை வாசம் போனதும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அதில் அரைத்த முந்திரி விழுது, உப்பு சேர்க்கவும். இறுதியில் பனீர் துண்டங்கள், கரம் மசாலா தூள் சேர்த்து மூடி போட்டு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும். இது ரொட்டி, சப்பாத்தி, புல்கா போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

 

முத்திரை:64

பிரக்ஞா பிராண கிரியா

தியான முத்திரைகளில் மற்றொரு படியாக உள்ளது இந்த பிரக்ஞா பிராண கிரியா முத்திரை. இதைச் செய்வதன் மூலம் நமது ஆதார சக்கரங்களில் சக்தி பெருகும். குறிப்பாக மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் இரண்டும் பலம் பெறும். சக்கரத்தில் உள்ள சக்தி குறைபாடுகள் நீங்கும். இம்முத்திரை செய்வதன் மூலம், உயர் ரத்த அழுத்தம் குறைந்து, டென்ஷன் குறையும், இதயத் துடிப்பு சீராகி, படபடப்பு குறையும், மூச்சும் சீராகும், நிம்மதி அற்ற நிலை நீங்கும். உடலின் அனைத்துப் பாகங்களும் ஆற்றல் பெறும். மனம் அமைதி பெறும். மூளைக்கு அதிகளவு ரத்த ஓட்டம் செல்வதால், மூளை சுறுசுறுப்பாகி ஞாபக சக்தி பெருகும்.

ஆள்காட்டி விரலை மடித்துக் கட்டை விரலின் அடிபாகத்தில் படும் படி லேசாக அழுத்திப் பிடிக்கவும். மற்ற விரல்கள் நேராக நீண்டிருக்கும் படி வைக்கவும், உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு கால் முட்டியின் மீது வைக்கவும். முடிந்தவர்கள் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்தால் அதிக பலன் கிடைக்கும். முடியாதவர்கள் சம்மணமிட்டு அமர்ந்து செய்யுங்கள்.

குறிப்பு: குறை ரத்த அழுத்தம் (Low Blood Pressure) உள்ளவர் இந்த முத்திரை செய்ய வேண்டாம்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com