முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 21
ராஜ்சிவா
நகரத்தின்கதை பாகம் - 30
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் - 26
நர்சிம்
அயல்பசி
ஷாநவாஸ்
T20 கிரிக்கெட் – மீசை ஒட்டிய குழந்தைகளும் குழந்தைகளாய் நடிக்கும் பெரியவர்களும்
ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்....கொஞ்சம் ஹெல்தியாய்.....
கே.பத்மலக்ஷ்மி
கவிதை
மிடறு இறங்கும் அர்த்தங்கள்..
இளங்கோ
காதல் ரோஜா
சின்னப்பயல்
தீர்ப்பு
செல்வராஜ் ஜெகதீசன்
ஞாபகார்த்தம்
ஷம்மி முத்துவேல்
கடவுளின் இருண்ட வனமும் நேயாவின் ஒரு வானமும்...
கிரிஷாந்
மன ஒலியின் ஓலம்
வளத்தூர் தி.ராஜேஷ்
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..
வித்யாசாகர்
சிறுகதை
பயணம்
ராமலக்ஷ்மி
அயல்பசி
ஷாநவாஸ்

‘Pototo’ என்றால் இங்கிலாந்தில் அசலானபொருள் என்று அர்த்தம். ‘Small Pototo’ என்ற சொலவடை ஒரு சின்ன விஷயம்என்பதைக் குறிக்குமாம். ‘அழுகிய உருளைக்கிழங்குஎன்று சொன்னால் மோசமான அர்த்தம் என்று நாம் ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஆஸ்திரேலியாவில் Potator என்று பெண்களைக் கூப்பிடுகிறார்கள். அமெரிக்கா எப்போதுமே தனி தானே. அவர்கள் அகராதியில் டாலர்என்று ஓர் அர்த்தமிருக்கிறது. "He has got 1500 Pototos".

20 ஆம் நூற்றாண்டின் "Couch Pototo" என்ற புதிய பெயர் எந்நேரமும் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பவர்களைக் குறிக்கிறது. அதில் இப்போது "Mouse Pototo" சேர்ந்து கொண்டது. TV ஐ எடுத்துவிட்டுக் கணினியைப் பொருத்தினால் அவர்தான் "Mouse Pototo".

குலை குலையாய் முந்திரிக்காய்....’ என்ற பாலர் பாட்டு அமெரிக்காவில் உருளைக்கிழங்கு என்று பாடப்படுகிறது. கீழே தவறவிட்ட கிழங்கு ‘Hot Pototo’. இசை வித்தகர் லூயிஸ் ஆம்ஸ்ட்ராங்கின் ‘Pototo Head Blues1927’ ம், பாப் இசையின் "It is mashed pototo time’ ம் அந்தந்தக் காலத்தில் ஹிட் அடித்தவை.

 

 

சமையலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, பொரித்து, பொடிமாஸ் செய்து, கறியில் சேர்த்து என பலவகை பயன்பாட்டுக்கு இலக்கணமாகத் திகழும் உருளைக் கிழங்கு, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சீனாவில் அறியப்படாமல் இருந்தது. இன்று உலகில் உருளை விளைவிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவும் சேர்ந்து கொண்டது.

Eric Jenkins என்ற பிரிட்டிஷ்காரர் ஒரே செடியில் 370 LB (168Kg) உருளைக்கிழங்கு விளைவித்த சாதனையை இதுவரை யாரும் மிஞ்சவில்லை.

 

உருளைக்கிழங்குக்கு மிகப் பெரிய மரியாதையைப் பெற்றுக் கொடுத்ததே ருசியும், மொறுமொறுப்பும் நிறைந்த Fries தான். ‘Macdonald’ ன் ‘Fries’ மாதிரி உலகின் எந்தத் தனிப்பட்ட உணவுக் கண்டுபிடிப்பும் இவ்வளவு பிரபலமாகவில்லை. அந்நிறுவனத்தை உருவாக்கிய ரிச்சர்ட், மௌரிஸ் மெக்டோனல்ட் சகோதரர்கள் ‘Fries’ இந்த அளவுக்குப் பிரபலமாகும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

Burger - Fries ஜோடி, துரித உணவுக் கலாசாரம் பெரும் நம்பிக்கையுடன் உலகில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள உதவிய காரணி. Mac பயன்படுத்தி வந்த ‘Russet Byrk Bank’ என்ற கிழங்கு வகை ஒரே மாதிரி கிடைக்காமல் போக Mac ஐ விலைக்கு வாங்கிய Ray Krok உருளைக் கிழங்கை இன்னொரு வகையில் ‘Deep Fry’ செய்துகொண்டிருந்த Simplot டன் சேர்ந்து பொரிக்கும் தொழில்நுட்பத்தில் புதுமையான முறைகளைச் செயல்படுத்தினார். 7 சதவிகிதம் சோயா எண்ணெய், 93 சதவிகிதம் மாட்டுக் கொழுப்புச் சேர்த்து Fries பொரித்து முதல் நிலையைத் தக்கவைத்துக் கொண்டது Mac நிறுவனம்.

‘Fast Food Nation’ என்ற புத்தகத்தை எழுதிய எரிக் ஸ்காலர்’ Macdonald ன் கிழங்குப் பொரியல்கள் சுவையாக இருப்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் தரமான கிழங்குகள் காரணமல்ல. மாறாக, தொழில்நுட்பம்தான் என்கிறார்.

Mac நிறுவனம் உருவாக்கிய எந்திரங்களைப் பிரதியெடுத்து ‘Fries’ செய்த நிறுவனங்களுக்கு அந்த மொறுமொறுப்பும் கைகூடவில்லை. பொரிக்கும் எண்ணெயில் கலக்கப்படும் ஒருவித இரசாயனமே இந்த மேஜிக் மொறுமொறுப்புக்குக் காரணம் என்கிறார்கள் சிலர்.

 

 

 

ஆரம்பத்தில் பெரிய சைஸ் என்பதே 2 அவுன்ஸ்(57 கிராம்). பின்னர் அது படிப்படியாக ஆறாகி, இப்போது எட்டு அவுன்ஸாகி 150 கிராம் சூப்பர் சைஸில் விற்கப்பட்டது. அதனால் குழந்தைகள் பாதிப்படைவர் என்பதை விளக்கும் ‘Super Size Me’ என்ற குறும்படம் வெளியாக சிறிய, நடுத்தர, பெரிய என்று மூவகைகளில் அளவுகளை மாற்றி அமைத்தது Mac நிறுவனம்.

1937 ல் Herman L.Way என்ற பாப்கார்ன் கம்பெனிக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது Lay Chips. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இமாலய வளர்ச்சி கண்டது ‘Fritos Corn Chips, Ruffles’. அடுத்து Proctor & Gamble அறிமுகம் செய்த ‘Pringles’ இவை புகழ்பெற்ற உருளைக் கிழங்கு ‘Chips’ வகைகள்.

 

ஒரு லட்சம் பேரைக் பேட்டி கண்டு மக்கள் அதிகம் விரும்புவது உருளைக்கிழங்கு பொரியலேஎன்று பட்டம் சூட்டியது பெப்சி நிறுவனம். மென் பானத்துக்கும், துரித உணவுக்கும் எப்போதும் ஒரு கூட்டணி உள்ளது போல. பிரிட்டிஷாரின் ‘Crisp’ வகை துரித உணவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘Chips’ ன் கை ஓங்கியது.

உருளைக்கிழங்கில் ஓட்காதயாரிக்கப்பட்டிருக்கிறது. முதலாம் உலகப் போரில் மிதமிஞ்சிய விளைச்சலைக் கண்ட உருளைக் கிழங்கு ஜெர்மனியில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

காஷ்மீரின் ‘Dum Aloo’ வேக வைத்த உருளையில் தயிர் சேர்த்தது. பஞ்சாபின் ‘Aloo Gobi’ (உருளைக் கிழங்கு, காலி ஃபிளவர்) ‘Aloo Matar’ (பட்டாணி, உருளை) ‘Alooo Parata’, தென்னிந்தியர்களின் மசாலா தாசை, ஆங்கிலோ- இந்தியக் கலாசாரத்தின் ‘Aloo Cutlet’. இவை உருளைக் கிழங்கின் இந்தியக் கலாசாரப் பண்பாட்டு உணவு வகைகள்.

மேலைநாட்டுக் கலாசாரத்தில் திறக்கப்பட்ட சுமார் 271 கிளைகள் கொண்ட ‘Macdonald’ 1990 ல் மாட்டுக் கொழுப்பைப் பயன்படுத்துவதை எதிர்த்து மும்பையில் தாக்குதலுக்குள்ளானது. கம்பீரமாகக் கடைக்கு முன் உட்கார்ந்திருக்கும் Mac சிலையின் கழுத்தில் மாட்டுக் குடலை மாலையாகப் போட்டு இந்து உணர்வாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அமெரிக்காவிலும் சுமார் 12 அமைப்புகள் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தன. மாட்டுக் கொழுப்பு உபயோகித்ததைச் சொல்லாமல் மறைத்து சைவ எண்ணெய் பயன்படுத்தியதாகச் சொன்னார்கள் என்பது புகார். பத்து மில்லியன் கொடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கு பைசல்செய்யப்பட்டது.

தானியங்கி இயந்திரப் பயன்பாடு, சமையல் நேரத்தையும், வெப்பத்தின் அளவையும் குறைத்துக், கூட்டுவது போன்ற தொழில்நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது Mac தான்.

Rapid Flying System மூலம் 30 லிருந்து 40 வினாடிகள் பொரிக்கும் நேரத்தைக் குறைத்துப் பல லட்சம் வாடிக்கையாளர்களைத் தாமதமில்லாமல் கையாளும் முறையையும் Mac தான் செயல்படுத்தியது.

 

உப்பைப் பொதுவாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாட்டுக்கும் ‘Fries’ தொட்டுக் கொள்ளக் கீச்செப்’ (Ketch up) தேர்ந்தெடுத்துச் செயல்படுத்துகிறது. அமெரிக்காவில் தக்காளி கீச்செப், இங்கிலாந்திற்கு மால்ட் வினிகர், பெல்ஜியத்திற்கு மயோனிஸ், இந்தோனசிய சாத்தே சாஸ் மாதிரி நெதர்லாந்துக்கும், கனடியர்களுக்கும் வெள்ளை வினிகர். பூண்டு சாஸ் போலந்து நாட்டவருக்கு. ஃபிலிப்பைன்ஸ்காரர்களுக்கு சீஸ். சர்க்கரையும், வெண்ணெயும் கலந்த சீஸ் வியட்நாமியருக்கு என்று உலகைப் பகுத்தறிந்து செயல்படுகிறது Mac.

அடுத்த ஆண்டு ஜனவரியில் முதன்முதலாக இன்னும் கூடுதலான காய்கறிகள் உள்ளடக்கத்தில் அமிர்தசரஸிலும், கோத்ராவிலும் ‘Mac Aloo Tikki Burger’ ஐ அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

கரையாத கொழுப்பும், அதிக உப்பும், மிக அதிகமான கலோரிகளும் கிழங்குப் பொரியலைத் தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தப்படும் சாஸ்களும் உடல் நலப் பிரச்சினைகளுக்குக் காரணமானவை என்று பல ஆய்வுகள் சொன்னாலும் மூன்றாம் உலக நாடுகளில் Mac ன் விற்பனை அதிகரித்து வருகிறது.

ஐரிஸ் உருளைக்கிழங்கில் கருகல் நோய் தாக்கிய 1846 ல் பில்லியன் கணக்கான மக்கள் இறந்தனர். பல்வகையில்லாத பயிர் முறையே அதக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

சீனாவும், இந்தியாவும் மரபணு மாற்று உருளைக்கிழங்கு சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கு அதிகமாகச் செலவிட்டு வரும் நாடுகள். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் AMAI என்ற மரபணுவை உருளையில் செலுத்தி மும்மடங்கு அதிக உயிர்ச்சத்துள்ள உருளையை உருவாக்கியது.

அதன் பெயர் PROTOTO.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com