முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 21
ராஜ்சிவா
நகரத்தின்கதை பாகம் - 30
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் - 26
நர்சிம்
அயல்பசி
ஷாநவாஸ்
T20 கிரிக்கெட் – மீசை ஒட்டிய குழந்தைகளும் குழந்தைகளாய் நடிக்கும் பெரியவர்களும்
ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்....கொஞ்சம் ஹெல்தியாய்.....
கே.பத்மலக்ஷ்மி
கவிதை
மிடறு இறங்கும் அர்த்தங்கள்..
இளங்கோ
காதல் ரோஜா
சின்னப்பயல்
தீர்ப்பு
செல்வராஜ் ஜெகதீசன்
ஞாபகார்த்தம்
ஷம்மி முத்துவேல்
கடவுளின் இருண்ட வனமும் நேயாவின் ஒரு வானமும்...
கிரிஷாந்
மன ஒலியின் ஓலம்
வளத்தூர் தி.ராஜேஷ்
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..
வித்யாசாகர்
சிறுகதை
பயணம்
ராமலக்ஷ்மி
நகரத்தின்கதை பாகம் - 30
சித்ரா ரமேஷ்

எட்ரியனஸ்பெட்ரொஸ்ஹெர்டொக் 1920 ஆம் ஆண்டு ராயல் நெதர்லாண்ட் ஸ்ராயல்ஈஸ்ட் இண்டீஸ் ராணுவத்தில் ராணுவ அதிகாரியாகப் பணிபுரிய ஜாவாவுக்கு வந்தார். அடிலைன் ஹண்டர் என்ற யுரேஷியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஜாவானியப் பெண்ணை ஸ்காட்லாந்து அதிகாரி திருமணம் செய்து கொண்டு பிறந்த பெண் அடிலைன் ஹண்டர். இவர்களுக்குப் பிறந்த பெண்குழந்தை மரியா. ஹெர்டோக். 1937 ஆம்ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம்தேதி பிறந்த மரியாவுக்கு ஏப்ரல் மாதம் திஜமா ஹியில் உள்ள ரோமன் கத்தோலிக்கத் தேவாலயமான செயிண்ட் இக்னேஷியஸ் தேவாலயத்தில் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்டது .1942 ஆம்ஆண்டு இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்தது .ஜப்பானியப்படைகள் ஆசிய நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கின. இதனால் எட்ரியன ஸ்ஹெர்டோக் இம்பீரியல் ஜப்பானியப் படையினரால் கைதுசெய்யப்பட்டு போர்க்கைதியாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். 1945 ஆம்ஆண்டுவரை போர்க்கைதியாக ஜப்பானில் இருந்தார். இங்கே ஜாவாவில் அவர் மனைவி அடிலைன் ஐந்துகுழந்தைகளுடன் தன் அம்மா நோர்லூயிஸுடன் போய்த் தங்கினார்.

மரியா மூன்றாவது குழந்தை. இந்நிலையில் ஆறாவது குழந்தைப் பிறந்தது.

மரியாவை அமீனா என்ற தன் தோழியுடன் தங்குவதற்கு நோர்லூயிஸ் அனுப்பி வைத்தார். தனக்கென்று எந்த்த்துணையும் இல்லாததால் குழந்தை மரியாவின் வரவு அமீனாவுக்கு மகிழ்ச்சி அளித்தது .ஜப்பானியப் படையினரால் பிடிக்கப்பட்டு பின்னர் தன் குழந்தைகளுடன் சேர்த்து விடுவிக்கப்பட்டு சுரபையாவில் தங்கியபோது மரியாவை அமீனா திருப்பித் தரவில்லை. அமீனாவும், மரியாவும் எங்கே சென்றார்கள் என்பது கூடத் தெரியவில்லை. 1945 ஆம்ஆண்டு எட்ரியன ஸ்ஹெர்டோக் விடுவிக்கப்பட்டார். ஜாவாவுக்குத் திரும்பினார்.தன் மனைவி, குழந்தைகளுடன் இணைந்தார். ஆனால் மரியா அப்போது இல்லை. காணாமல் போன தன் பெண் குழந்தையைத் தேட முயற்சிகள் எடுத்தார் .அமீனா அவளுடன் இருந்த பெண்குழந்தை இருவர் பற்றியும் எந்த்த் தகவலும் கிடைக்கவில்லை. மனைவி குழந்தைகளுடன் நெதர்லாண்ட்ஸ் திரும்பினார். போகும்போது ஜாவாவில் இருந்த டச்சு அதிகாரிகளிடம் காணாமல் போன பெண்குழந்தையைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவளைத் தேடுவதற்கான முயற்சியையும் நிறுத்தவேண்டாம் என்று ஜாவா மற்றும் சிங்கப்பூரில் இருந்த டச்சு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

செஞ்சிலுவைச் சங்கம், தாயகத்திற்குத் திரும்பிச் செல்பவர்களுக்காக உருவாக்கப்பட்டச் சங்கம், ராயல் நெதர்லாண்ட்ஸ் ஆர்மி, உள்ளூர் காவல்துறை இவை எல்லாம் தங்களுடைய விசாரணையைத் தொடர்ந்தன. இறுதியில் 1949 ஆம்ஆண்டு அமீனாவையும், மரியாவையும் ஒரு சிறுகிராமத்தில் கண்டுபிடித்தனர். 1950 ஆம்ஆண்டு மரியாவை அவள் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்குப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டச்சுத் தூதரகம் மரியாவை எட்டுஆண்டுகள் வளர்த்ததற்கு ஈடாக ஐந்நூறு வெள்ளி இழப்பீட்டுத் தொகையாக வழங்குவதாக அமீனாவிடம் கூறியது. மரியாவைத் தன் சொந்தமகள் போல் வளர்த்து வந்த அமீனா இந்தப் பணத்தை வேண்டாம் என்று மறுத்து மரியாவையும் ஒப்படைக்க மறுத்தாள்.

மரியாவுடன் சிங்கப்பூர் வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டாள் அமீனா.அங்கு டச்சுத் தூதரக உயர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாணவேண்டும் என்று முயன்றனர். ஆனால் அமீனாவின் பக்கம் இருந்த நியாயத்தையும் அவள்மன வுறுதியைக் கண்டு மேற்கொண்டு என்னசெய்வது என்பது தெரியாமல் குழம்பினர். உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைப் பதிவுசெய்தனர். உயர்நீதிமன்றத்தில் டச்சு தூதரகத்தால் சொல்லப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் மட்டும், அமீனாவின் பக்கம் இருந்த தகவல்களைக் கேட்காமல் மரியாவை சமூகநலத் துறையினரின் கண்காணிப்பில் இருப்பதற்கு அனுப்பும்படி ஆணை பிறப்பித்தனர். மறுநாள் மரியாவை அமீனாவிடம் பிரிப்பதற்கு ஒரு அதிகாரி வந்து விட்டார்.

அமீனாவின் வாக்குமூலத்தைக் கேட்காமல் மரியா மிடில்ரோடில் இருக்கும் மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாள். அதன்பின்னர் யார்க் ஹில்பகுதியில் இருந்த பெண்கள் கைத்தொழில் மையத்திற்கு அனுப்பப்பட்டாள்.ஆனால் இந்தவழக்கின ஆரம்பத்திலிருந்தே மரியா அமீனாதான் தன்அம்மா என்றும், அவளுடன் இருப்பதைத்தான் விரும்புவதாகவும் கூறி வந்தாள்.தன்னுடய உண்மையான பெற்றோரோடு செல்ல விருப்பமி்ல்லை என்பதையும் தெளிவாகக் கூறினாள். ஆனால் உயர்நீதிமன்றம் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் மட்டும் விசாரணை நடத்திவிட்டு மரியாவை அவள் உண்மையான பெற்றோரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவிட்டது.

வழக்கு முடிந்ததும் அமீனாவை இறுக்கிப்பிடித்த படி மரியா நீதிமன்றத்தின் பின்பக்கவழியாக வெளியே வந்தாள். டச்சுத் தூதரகத்தின் வண்டி அவளை அழைத்துப் போக காத்திருந்தது. மரியா நான் உன்னை விட்டுப் பிரியமாட்டேன். அதற்குப்பதில் இறந்துவிடுகிறேன்" என்று மலாய் மொழியில் கத்தினாள். அமீனாவும் கண்ணீருடன் அதையேக் கூறினாள். அமீனாவைப் பிடித்துக் கொண்டு தூதரகக் காரில் ஏற முடியாது என மறுத்தாள் .இந்தக் குழப்பத்தை ஒருபெரிய கூட்டம் கூடி நின்று வேடிக்கைப் பார்த்தது. அமீனாவையும் காரில் ஏறும்படி அனைவரும் வற்புறுத்தினர்.அமீனாவிடம் மீண்டும் ஒரு வழக்கறிஞர் நியமித்து மரியாவைத் திரும்பப் பெறலாம் என்று அமீனாவைச் சமாதானப்படுத்தி அவளைக் காரில் ஏற்றினர். மேல்முறையீடு செய்யும்வரை மரியா அரசாங்கம் ஏற்பாடு செய்த பெண்கள் காப்பகத்ததில் தங்குவதுதான் முறை என்று கண்களில் நீருடன் மரியாவும், அமீனாவும் பிரிந்தனர்.

அடுத்த இருமாதங்கள் யார்க் ஹில்பெண்கள் காப்பகத்தில் மரியா இருந்தாள்.தங்கள் மேல்முறையீட்டுக்குத் தலைமை நீதிபதி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று இருவரும் காத்திருந்தனர். ஜூலை 28 தேதி வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. இந்த முறை வழக்கின் முடிவு வேறு விதமாக அமைந்தது. தாயகத்திற்கு அனுப்பப்படவேண்டும் என்ற தீர்ப்புக்கு மாறாக மேல்முறையீட்டு நீதிமன்றம் மரியாவை அமீனாவிடம் ஒப்படைக்கச் சொல்லி ஆணையிட்டது. மரியாவின் தந்தை கொடுத்த தகவல்களில் முன்னுக்குப்பின் முரணாக சில விஷயங்கள் இருந்ததால் நம்பகத்தன்மை இல்லை என்ற அடிப்படையில் இப்படிப்பட்ட தீர்ப்பு கொடுக்கப்பட்டது. மரியாவின் தந்தையின் சார்பாக வாதாடிய டச்சுத்தூதரகம் இந்த சிறிய தவறை எப்படியும் நிவர்த்தி செய்து மரியாவை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி விடவேண்டும் என்று முனைந்தது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி மேல் முறையீட்டில் வெற்றி கண்டு மரியாவை தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை. 22 வயதான மன்சூர் அடாபி என்ற ஆசிரியப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மலாய் ஆடவருக்கு இஸ்லாமியச் சடங்குகள் மூலம் மரியாவைத் திருமணம் செய்து வைத்தாள் அமீனா. இந்தத் திருமணத்தின் மூலம் மரியாவை அவள் பெற்றோர்கள் திரும்ப அழைத்துக் கொண்டுபோகும் முயற்சிகளை கைவிட்டுவிடுவார்கள் என்று அமீனா நினைத்திருக்கலாம். திருமணம் முடிந்த அன்று இரவே மரியா அமீனாவுடன் திரும்பி வந்துவிட்டாள். இதனால் திருமணம் முழுமை பெறவில்லை. மேலும் மரியா சிறிய பெண். இந்த அவசரத் திருமணம் மரியாவை தன்னுடன் வைத்துக் கொள்வதற்கான ஒரு உபாயமாக அப்போது அமீனா நினைத்துக் கொண்டிருந்தாள். முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை, பிரச்சினைகள் தீர்ந்தபிறகு மரியா தொடரலாம் என்று நினைத்தாள்.இந்தத் திருமணம் சட்டப்படி சரியா, தவறா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. திருமணம் தன் முழுவிருப்பத்ததுடன் தான் நடைபெற்றது என்று மரியா சொன்னாள்.

இந்த திருமணத்தைப் பற்றி இஸ்லாமியச் சமூகத்திலிருந்து முதல் கருத்து வந்தது.வயதுக்கு வந்தபின் பெண்ணைத் திருமணம் செய்து தருவது இஸ்லாமியச் சமயத்தின்படி தவறு இல்லை. ஆனால் திருமண வயது 16 என்று சில இஸ்லாமிய நாடுகள் சட்டம் வரையறுத்துள்ளன. ஆனால் இந்தச் சட்டங்கள் இப்போது நடைபெற்ற திருமணத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் நட்புறவோடு கூடிய புரிந்துணர்வு அவசியம் என்று திஸ் ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேட்டில் ஒரு கடிதம் பிரசுரிக்கப்பட்டது. அதற்குள் முஸ்லிம் சமூகம் டச்சுக்காரர்களையும், ஐரோப்பியர்களையும் காழ்ப்புணர்வோடு பார்க்கத் தொடங்கியது.

ஹெர்டோக் தன் மகளைத் தன்னிடம் திரும்ப அனுப்பவேண்டும் என்ற வழக்கை முடிப்பதாக இல்லை. திருமணம் முடிந்த மறுநாள் ஹெர்டோக்கின் வழக்கறிஞர் ஒருவர் கோலாலம்பூரிலிருந்து வந்து ஒரு கடிதத்தைக் கொடுத்தார். மரியாவை ஆகஸ்ட் 10 ஆம்தேதிக்குள் அவள் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் அப்படிச் செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதப் பட்டிருந்தது. திருமணம் ஆனதால் இந்த சட்டங்களால் எதுவும் செய்துவிடமுடியாது என்ற எண்ணத்தில் மன்சூர், அமீனா இருவரும் இதைப்பற்றிக் கவலைப்படாமல் இருந்து விட்டனர்.

ஆனால் ஹெர்டோக் இதைப்பற்றிக் கலைப்படாமல் இருக்கமுடியுமா?ஆகஸ்ட்மாதம் 26 ஆம்தேதி ஹெர்டோக் வழக்கு தொடுப்பவராகவும், அமீனா, மரியா, மன்சூர் மூவரும் குற்றவாளிகளாகவும் அழைப்பாணை அனுப்பப்பட்டது. குழந்தைகள் நல பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கின் விசாரணை உடனடியாகத் தொடங்கவில்லை. நவம்பர் மாதம் 20 ஆம்தேதி வரை என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் நாட்கள் ஓடின. அதற்குள் ஊடகங்கள் மூலம் உலகமனைத்திலும் இந்தவழக்கைப் பற்றிய கேள்விகள் குவிந்த வண்ணமிருந்தன. இஸ்லாமிய நாடுகள் தங்கள் சமயத்திற்கும், அதன் நம்பிக்கைகளுக்கும் மாறாக தீர்ப்புவந்துவிடக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டின. இருதாய்க்கு ஒருபிள்ளை என்ற கதையின் முடிவு ???????

(தொடரும் அடுத்தவாரம்)

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com