முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (20)
ராஜ்சிவா
எழுத்தாளன் டி.வி.யில் தோன்றலாமா?
ஆர்.அபிலாஷ்
எண்ணங்கள் 25
நர்சிம்
நகரத்தின் கதை-பாகம் 31
சித்ரா ரமேஷ்
நான்கு நண்பர்களும் சசிகுமாரும்
சின்னப்பயல்
கவிதை
வேட்டை நாயும் காவல் நாயும்
ஆர்.அபிலாஷ்
சினேகிதனொருவன்
இஸுரு சாமர சோமவீர,
கனவுகள் விற்பனைக்கு அல்ல
ஷம்மி முத்துவேல்
இளங்கோ கவிதைகள்
-
கொத்தித்துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்
செ.சுஜாதா
சின்னப்பயல் கவிதைகள்
-
ஒரு யுவதியை...
செல்வராஜ் ஜெகதீசன்
சிறுகதை
“பொங்கிவரும் பெரு நிலவு”
உஷாதீபன்
பொது
இந்த வார கருத்துப்படங்கள்
“பொங்கிவரும் பெரு நிலவு”
உஷாதீபன்

குறுநாவல் தொடர்ச்சி...

 ( 5 )

 

நீ ரொம்ப அழகாயிருக்கே தெரியுமா?” - ராஜப்பா அவள் தாடையை விரல்களால் திருப்பி ஆசையாய்ச் சொன்னான். முகத்துக்கு நேரே அருகில் தன் முகத்தை வைத்துக் கொண்டு ஆசை பொங்கப் பொங்கப்  பார்த்தான் அவளை. அப்பொழுதுதான் வரைந்து வண்ணமிட்ட சித்திரம் போல் இருந்தாள் சாரதா. அவளின் அகன்ற நெற்றியை, அதில் முன்னே வந்து விழுந்திருக்கும் முடிக் கற்றையை, தீட்டப்பட்டது போல் சீராகப் காணப்படும்  இமைகளை, அவளின் கூர்மையான மூக்கினை, இருபுறமும் அழகுற மென்மையாய் மடிந்து லேசாய்ச் சிவந்து வளைந்து நிற்கும் அவள் காதுமடல்களை என்று ஒவ்வொன்றாய்ப் பார்த்துப் பார்த்து ரசித்தான்.

 

இந்தக் காதுகளுக்குப் பின்னால, பூனை முடி வளர்ந்து, சிவப்பா, தளதளன்னு இருக்கே, அங்கே ஒரு முத்தம் கொடுக்கலாமா? அழக எங்கெங்கெல்லாம் ஒளிச்சு வச்சிருக்கான் இறைவன்பெண்களுக்கே தங்களோட அழகு இப்டி இப்டியெல்லாம் வியாபிச்சிருக்குன்னு தெரியாது போலிருக்குஅதை ஆண்கள் ரசிச்சுச் சொல்றபோதுதான் அவங்களாலேயே உணர முடியுதுன்னு நினைக்கிறேன்நீ எனக்குக் கிடைச்சது என்னோட பெரிய அதிர்ஷ்டம்…”

 

அது சரி, நான் உங்களை ஒண்ணு கேட்கலாமா?”

 

இதென்ன கேள்வி? தாராளமாக் கேளேன்என்ன தயக்கம்?”

 

உங்களுக்கெதுக்கு ராஜப்பான்னு  பேர்  வச்சிருக்காங்க….?”

 

இந்தப் பெயர்  பிரச்சினையை சின்ன வயசிலேயிருந்து நானும்தான் அனுபவிச்சிக்கிட்டே இருக்கேன்முன்னோர்கள் பெயா; வைக்கணும்ங்கிறது மரபு. அப்பத்தான் சந்ததியோட தொடர்ச்சி ஞாபகத்துல வந்துக்கிட்டேயிருக்கும்பாங்கஆனா அந்தப் பெயர்கள் நல்ல அழகான பெயர்களா இருந்தாத்தான் போச்சுஇல்லன்னா வைக்கிறதுக்கு ஒண்ணு, கூப்பிடறதுக்கு ஒண்ணுன்னு வச்சிடறாங்கஅப்டி  அமைஞ்சதுதான் என்னோட பெயரும்ஆனா என்னை எல்லாரும் ராஜா ராஜான்னுதான் கூப்பிடுவாங்கநீயும் அப்டியே கூப்டுட்டுப் போயேன்எம்பேரு என்னவோ இருந்திட்டுப் போகுதுஇதிலென்ன வந்தது உனக்கு?”

 

அதிலிருந்துதான் ஆரம்பித்தது ஒவ்வொன்றாய். அவனின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் புதிது புதிதாய் இருந்தன சாரதாவுக்கு. ஒரு ஆபீஸில் வேலை பார்ப்பவன் இப்படியா இருப்பான்?

 

என்ன நீங்க, சினிமா நடிகர்  படத்தையெல்லாம் உங்க பெட்டில ஒட்டி வச்சிருக்கீங்க?”

 

அவர்  என்னோட உயிர்  நடிகர்  அவர்  நடிப்புன்னா எனக்கு அவ்வளவு உசிருஅதனாலதான்…” சாதாரணமாய்ச் சொன்னான் ராஜப்பா.

 

அதுக்கும் ஒரு வயசில்லையா? நீங்க ஒரு ஆபீஸ்ல வேலை பார்க்கிறவருவெட்டியாத் திரியறவன் செய்ற வேலையெல்லாம் செய்தீங்கன்னா?”

 

இந்தா பாரு,  இது உனக்குச் சம்பந்தமில்லாத வேலைநீ வர்றதுக்கு முன்னாடியிருந்து பல வருஷமா நா இப்டித்தான் இருக்கேன்என்னை எவனும் ஒண்ணும் சொன்னதில்லை. எங்கப்பா உட்பட. இப்போ புதுசா நீ ஆரம்பிக்காதே…”

 

இனிமே இந்தச் சினிமாப் பத்திரிகையெல்லாம் வாங்குறத நிறுத்திடுங்கஅநாவசியமாக் காசை செலவழிக்காதீங்கடெய்லி ஒரு நியூஸ் பேப்பர்  மட்டும் வேணா வாங்குங்கஅவ்வளவுதான்…”

 

தடை போடுறியாநேத்து வந்தவ நீஇன்னைக்கு என் காரியங்களுக்குத் தடை போடுறியாக்கும்போடீ, ஒன் ஜோலியப் பார்த்திட்டு…”

 

எந்தவொன்றையும் கேட்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டவன் போல் இருந்து கொண்டிருந்தான் ராஜப்பா. மனைவி என்பவள் தனக்கு அடங்கிக் கிடப்பவள் என்பது ஒன்றே அவனின் எண்ணமாக இருந்தது. எனக்கு அட்வைஸ் பண்ற வேலையை விட்டிடுஉன் ஜோலியப் பார்இதுதான் அவனின் பதிலாக இருந்தது.

 

சினிமாப் புத்தகங்களாக வாங்கி நிறைப்பதுசினிமாப் பாடல் கேசட்டுகளாக, சி.டி.க்களாக வாங்கி வாங்கிக் குவிப்பது, சதா சர்வ காலமும் கேட்டுக் கொண்டேயிருப்பது, தூங்கும் நேரம் தவிர, ஆபீஸ் நேரம் தவிர (இல்லை, ஆபீஸில் வேறு என்ன செய்கிறானோ!) எந்நேரமும் சினிமாவும், பாட்டும், கூத்துமாகவே இருந்தான். இது சாரதாவுக்குத் தாங்க முடியாத எரிச்சலை ஏற்படுத்தியது. அவனின் அப்பா அம்மாவே அவனை ஒன்றும் சொல்வதில்லையே! என்ன பிள்ளை வளர்த்திருக்கிறார்கள்? ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடியவனின் தினசரி  நடவடிக்கைகளா இவை?

 

அவனது செயல்பாடுகளில் எந்தவொரு முதிர்ச்சியும் இல்லையே? வயது வளர வளர ஆளுக்கும், அவனது செய்கைகளுக்கும் ஒரு அனுபவ முதிர்ச்சி வேண்டாமா?  சரியான தருணம் ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்  சாரதா.

 

                                                                                               

 

                                                                                               

 

                                                                                                ( 6 )

 

அப்பொழுதுதான் அவனுக்கு மாறுதல் வந்தது. அன்றாடம் போய் வந்து விடக்கூடிய தூரமாய் இருந்தால் பரவாயில்லை. ஆனால் அப்படி அமையவில்லை. முன்னூறு கி.மீ. க்கு அப்பால் கொண்டு போட்டால்? என்ன காரணத்திற்காக இந்தத் திடீர்; மாற்றம்? என்று கேட்ட போது அவன் சொல்லவேயில்லை. மாநிலம் முழுக்க எங்கே வேணாலும் போடுவாங்கயார்; கேட்க முடியும்? கிளம்புகிளம்புஎன்றான் சர்வ சாதாரணமாய்.

 

தனிமையின் சுதந்திரம் பிடித்துத்தான் இருந்தது அவளுக்கு. இங்கேயாவது ஒவ்வொன்றுக்கும் தன் அம்மாவையும், அப்பாவையும் கேட்டுக் கொண்டிருந்தான். இனிமேல் தன் பேச்சைத்தானே கேட்டு ஆக வேண்டும் என்பதை நினைத்தபோது ஒரு திருப்தியும் ஏற்பட்டது அவளுக்கு.

 

ஆனால் அங்கு சென்ற இடத்தில் அவன் இப்படி மாறுவான் என்று யார்  கண்டது?

 

வாங்க மாலினிசும்மா உள்ளே வாங்க…” - கையைப் பிடித்து இழுக்காத குறையாக ஒரு பெண்ணைக் கூட்டி வந்து நின்ற போது அதிh;ந்து போய்விட்டாள் சாரதா.

 

இவுங்க என் ஆபீஸ்ல கம்ப்யூட்டா; ஆபரேட்டா;. பேரு மாலினி…” - அவன் சொன்ன போது உறலோ  என்று சொல்லிக்கொண்டு அவள் கை கொடுக்க வந்தபோது ஓங்கி அவள் கன்னத்தில் பளார் என்று ஒன்று கொடுக்கலாமா என்றுதான் வந்தது இவளுக்கு. தொலையட்டும் என்று கைகளைக் குவித்து வணக்கம் சொல்லி வைத்தாள். அவளை அழைத்துக் கொண்டு மாடி ரூமுக்குப் போன ராஜப்பா வெகு நேரம் கீழே வராதது வேறு அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பெரிய அதிர் வேட்டுச் சிரிப்பும், கைதட்டலும், கேட்டுக் கொண்டேயிருந்தது.

 

சாரதாஎங்க ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வா…” என்று அவன் சொன்னபோது வேண்டா வெறுப்பாகத்தான் செய்தாள். அப்பொழுது கூட அவள் முன் திட்டுகிறோமே என்ற உணர்வு இல்லாமல் அவன் சொன்னான்.

 

சூடாக் கொண்டு வரணும்னு கூடவா உனக்குத் தெரியாது. இப்டி ஆறிப் போய்க் கொண்டு வந்திருக்கியே? போய் சுட வச்சுக் கொண்டுவா…” என்றபோது அவள்கூட இருக்கட்டும் ராஜாபரவால்ல, இதையே குடிப்போம்…” என்றாள்.

 

அது எதுக்கு? காபின்னாலே அது சூடா இருந்தாத்தான் நல்லாயிருக்கும்..ஆறிப்போயா குடிக்கிறது? எது சூடுன்னு உனக்குத் தெரியுமா, இல்ல அதையும் சொல்லித் தரணுமா? எது குடிக்க முடியாதோ அதுதான் சூடுதெரிஞ்சிக்கோ…” - சொல்லிவிட்டு அவன் பெரிதாகச் சிரித்தபோது அவளும் உடன் சேர்ந்து சிரித்தது தாங்க முடியாத வேதனைதான் அன்று.

 

அவள் கிளம்பும்போது அவன் சொன்னான். இவுங்கதான் எனக்குக் கம்ப்யூட்டர்  சொல்லித் தர்றாங்க எங்க ஆபீஸ்லஆகையினால தினசரி  சாய்ந்திரம் லேட்டாத்தான் வருவேன்சும்மா மொண மொணங்கிற வேலை வச்சிக்காதே….”

 

அவன் சொன்னதோடு நின்றதா அவள் பழக்கம்? எத்தனை தூரத்திற்குக் கொண்டு சென்று விட்டது அவனை?

 

பொறி கலங்கிப் போய் எழுந்தாள் சாரதா. தலை கனத்தது. விண் விண் என்று தெறித்தது.உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. தலை முடிக்குள் கைகளை விட்டுக்  கோதினாள். வியர்வை கொப்பளித்திருந்தது. அவனோடு வாழும் காலத்திலும் தன்னைக் கலங்கடித்தவன், இன்று தூக்கத்திலும் இந்தப்பாடுபடுத்தி விட்டானே? இப்படியா தொடர்ச்சியாகக் கனவுகள் வரும்? ஒரு நிகழ்வு கூட விடுபடாது வரிசையாக வந்து தொல்லைப் படுத்துகின்றனவே?

 

அவனோடு தனியாகப் போய் என்ன பாடுபடுத்தி விட்டான்? அப்பா, அம்மாவிடம் அத்தனையையும் சொல்லியிருந்தால் நம்பியிருப்பார்களா அல்லது அவனுக்கு ஆதரவாகப் பேசுவார்களா? காலத்தின் கோலத்தில் அவனுக்கு அந்த அதிர்ச்சி மட்டும் ஏற்படாமலிருந்தால், அதனால் அவன் மரிக்காமல் இருந்திருந்தால் ஒரு வேளை அவனது அட்டூழியங்களையெல்லாம் இவர்கள் தெரிந்து கொண்டிருக்கக் கூடுமோ?

 

அன்று அதற்கு மேல் தூக்கம் பிடிக்க மறுத்து விட்டது அவளுக்கு. கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்தவளாய் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வதில் முனைப்பானாள் சாரதா.

 

                                                                                                ( 7 )

 

மிஸ்டர்  பாண்டியன், நாளைக்கு சென்னைல நடக்கப் போற கோ-ஆர்டினேஷன் மீட்டிங்கிற்கு என்னோட நீங்களும் வர்றீங்கஅதுக்கான ரிப்போர்ட்ஸெல்லாம் தயார் பண்ணிக்குங்கபட்ஜெட் ஃபிகர்ஸெல்லாம் கரெக்டா இருக்கட்டும்குறிப்பா நமக்கு ஒவ்வொரு ஹெட்லயும் இன்னும் எவ்வளவு தேவைங்கிறதைக் கரெக்டா எடுத்து வச்சிக்குங்கநா கேம்ப் போறேன்நாலு மணிக்கு வர்றேன். வந்ததும் நாம உட்கார்ந்து டிஸ்கஸ் பண்றோம்ஓ.கே…”

 

சொல்லிவிட்டு சீஃப் கிளம்பிப் போனதும் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான் பாண்டியன். திடீரென்று இப்படிச் சொன்னால் எப்படி? ஒரு இரண்டு நாள் கால அவகாசமாவது வேண்டாமா? தன் அறையிலிருந்து அலுவலகத்தின் உள்ளே பார்த்தான். பெரும்பாலான சீட்கள் காலியாகக் கிடந்தன. அந்த எல்லோரையும் கேட்டுத்தான் பாஸ் சொல்லிப் போன எல்லாவற்றையும் இவன் தயாரித்தாக வேண்டும். குறிப்பாக சாரதா செக்க்ஷன்தான் முக்கியம். பட்ஜெட் சம்பந்தப்பட்டது பூராவும் அவள் பிரிவில்தான் உள்ளன. அவளிடமும் எல்லாமும் தயாராய் இருக்கின்றனவோ என்னவோ? இல்லையென்றால் தானே எல்லாவற்றையும் தயார்  செய்தாக வேண்டும். மலையையே புரட்டிப் போடுவது போலான வேலைகளைச் சுமத்தி விட்டுப் போய் விட்டார். எப்படி முடிப்பது என்ற மலைப்புடனேயே கணினிக்கு முன் அமர்ந்து ஒவ்வொரு கோப்புகளாகத் திறந்து தேவையானவைகளைத் தேட ஆரம்பித்தான் பாண்டியன்.

 

தன் அறையிலிருந்து சாரதாவின் இருக்கை இவனுக்கு நன்றாகத் தெரியும். அவளின் பார்வை அடிக்கடி இங்கே பதிந்திருப்பதை இவன் இங்கிருந்தே கவனித்துக் கொண்டுதான் இருந்தான். சமீபகாலமாகத் தான் அவள் மனதை மிகவும் சஞ்சலப்படுத்தி விட்டோமோ என்று  தோன்றியது இவனுக்கு. தன்னையறியாமல் அவள் மேல் ஒரு கவனம் தனக்கு விழுந்திருப்பதை உணர்ந்தான் இவன். அதுவே அலுவலகப் பணிகளில் அவனுக்கு ஒரு கவனச் சிதைவை ஏற்படுத்தியிருந்த்து. அதையும் உணர்ந்துதான் இருந்தான். இம்மாதிரி அவன் என்றுமே இருந்ததில்லை. ஆனாலும் மனதை ஒன்றுகூட்டி எதிலும் கவனத்தைச் செலுத்த முடிய வில்லை அவனால். சிதைந்த தன்னுடைய கனவுகளுக்கு முன்னால் நளினிதான் அடிக்கடி வந்து கைகொட்டிச் சிரிக்கிறாள். அவளை, அவளின் இருப்பினை இவனால் கட்டுப்படுத்த முடியாது போனது தன்னுடைய பெரிய பலவீனம் என்ற நினைப்பு இவனை வாட்டி எடுக்கிறது இன்று வரையிலும்.

 

ஒவ்வொருவர்  வாழ்க்கையிலும் ஒவ்வொரு கதையிருக்கிறது. அவரவர்களின் அனுபவங்கள் அவர்களை எங்கெங்கோ கொண்டு நிறுத்தி விடுகின்றன. யாரைச் சொல்லி என்ன பயன்? வாழ்க்கை சிறப்பாகத்தான் அமையும், சந்தோஷமாகத்தான் வாழ்வார்கள் என்று எதிர்பார்த்து, ஆசீர்வதித்து, அனுப்பி வைக்கிறார்கள் பெரியோர்கள். ஆனால் காலம் எப்படியெல்லாம் கைகொட்டிச் சிரிக்கிறது? யாருக்கு எது எப்படி அமையும் எப்படி நடக்கும் என்பதை எவராலுமே அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லையே? நளினியைப்பற்றி இப்பொழுது நினைக்க ஆரம்பித்தால், அந்தச் சிந்தனைக்குள் புகுந்தால் இன்று இங்கே செய்து முடிக்க வேண்டிய பணிகளைச் செவ்வனே முடிக்க முடியாது. ஆகையினால் அதைத் துhக்கி மூலையில் போடு என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் பாண்டியன். கணினியில் திறந்த ஒவ்வொரு அட்டவணைகளிலும், இன்றைய தேதியில் இருக்கும் பணி முன்னேற்றத்திற்கான எண்களைச் சேர்க்க ஆரம்பித்தான். அவற்றை முழுமையாக உறுதி செய்துகொள்ள அவன் அந்த அலவலகத்தின் ஒவ்வொரு பிhpவாகச் செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் இருந்தவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி தேவையானவைகளைப் பெற்றுக் கொண்டு, கடைசியாக அவன் சாரதாவின் இருக்கைக்கு வந்தான். அப்போது மதியச் சாப்பாட்டிற்கு உணவு அறைக்குப் போவதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சாரதா.

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com