முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (20)
ராஜ்சிவா
எழுத்தாளன் டி.வி.யில் தோன்றலாமா?
ஆர்.அபிலாஷ்
எண்ணங்கள் 25
நர்சிம்
நகரத்தின் கதை-பாகம் 31
சித்ரா ரமேஷ்
நான்கு நண்பர்களும் சசிகுமாரும்
சின்னப்பயல்
கவிதை
வேட்டை நாயும் காவல் நாயும்
ஆர்.அபிலாஷ்
சினேகிதனொருவன்
இஸுரு சாமர சோமவீர,
கனவுகள் விற்பனைக்கு அல்ல
ஷம்மி முத்துவேல்
இளங்கோ கவிதைகள்
-
கொத்தித்துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்
செ.சுஜாதா
சின்னப்பயல் கவிதைகள்
-
ஒரு யுவதியை...
செல்வராஜ் ஜெகதீசன்
சிறுகதை
“பொங்கிவரும் பெரு நிலவு”
உஷாதீபன்
பொது
இந்த வார கருத்துப்படங்கள்
எண்ணங்கள் 25
நர்சிம்

 

சுந்தர பண்டியன்

 

 

ஒரு பெண்ணிற்காககூடவே இருக்கும் நட்பு முதுகில் குத்தும்.குத்தியவர்கள் நண்பர்கள்அதனால்  உண்மையைச்  ஊருக்குச் சொல்லாமல் ஒதுங்கி இருப்பதே நட்பு.

 

 

 

இந்த இரண்டு வரிகளே படத்தின் ஒருவரி. 

 

‘சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் சசிகுமார்பிள்ளைமார் அரசியலைப் பூடாகமாய்க் காட்சிப்படுத்தியதில்  துவங்கி,  இளைஞர்கள்  திசைமாறும்  அவலத்தை  அற்புதமான  இயக்கத்தோடு  வெளிப்படுத்தி  இருந்த  படம்  அது. ஒவ்வொரு  காட்சியும்  செதுக்கப்பட்டிருக்கும் முதல் மூன்று சீன்கள் தொடர்காட்சிகளாய் அந்தாதியாய்ப்  பின்னப்பட்டிருக்கும்அவர் வழிவந்த இயக்குநர் பிராபகரன்பூடகம் கீடகம் எல்லாம் இல்லாமல் நேரடியாய் ஒரு சமூகத்தைப் பற்றிய கதையாகவே எடுத்திருக்கிறார். அதில்  இருக்கும்  ஜாதியத்தைக்  காமெடி முலாம் பூசி மெழுகி.   நம்மையும்  அறியாமல்  இதழோரப்  புன்னகையுடனே படம் முழுக்கக்கடக்கிறோம்இயக்குநரின் வெற்றி.

 

 

 

ஆகச்சிறந்த படைப்பாளியாய் ‘சுப்ரமணியபுரத்தை ஆக்கிய சசியை அரவணைத்துக் காத்தோம்‘ஈசன் அழித்தான்.  நல்ல தயாரிப்பாளராய் நடிகராய்த் தன்னை முன்னிறுத்திக்கொண்டார்எங்கே, “எம் பேரு ஜெயபால் விட்டேன்னா ஃபுட்பால்” வசனங்களைப் பேசிவிடுவாரோ என்றபயம் இருந்து கொண்டே இருக்கிறதுமற்றபடிதாடிபேக்ரவுண்டில் வெளிப்படும் அந்தப் பளீர் சிரிப்பும் கிராமியக்  குரலும் வெல்கிறது.கேங்ஸ் ஆஃப் வசேர்பூர் படத்தில் பெண்கள் சமைத்துக்கொண்டே பேசும் காட்சிகள்  ‘சுப்ரமணியபுரத்தை நினைவுபடுத்தும்.  இயக்குநர் சசிகுமாரை இழந்து கொண்டிருக்கிறோம்.

 

 

 

இந்தப் படத்தின் ஆச்சர்யம் சூரிஅற்புதம்கதாநாயகிமுதல்பாதியை சூரியின் வசனங்களும் ரியாக்ஷன்களும் எளிதாய்க் கடக்கவைக்கிறதுபூட்டியிருக்கும் வீடுகளின் படிக்கட்டுகளில் கைலியை ஒதுக்கிவிட்டு அமர்ந்து பேசுவதாகட்டும்டீக்கடையில் கிளாஸைசுழற்றி ஆத்திக்குடிப்பதிலாகட்டும் பேருந்தில் கைய எடுத்து கம்பில வைய்டா எனப் பயத்தில் அலறுவதாகட்டும்அதகளம்.

 

 

 

ஹோமரின் எலியட் (Eliad) காப்பியத்தில் வரும் காட்சி :

 

 

 

நாயகி ஹெலனிற்காக இரு அண்டைநாடுகள் போரிடுகின்றனபோருக்கு முன்னர்வேடிக்கைப்  பார்க்கும் கிழவர்கள் இப்படிப் பேசிக்கொள்கிறார்கள்.

 

ஓர் பெண்ணிற்காக இரண்டு தேசங்கள் போர் செய்வது அறிவீனமாகும்ஒரு பெண்ணிற்காக  எத்தனையோ பேர் சாகப் போகிறார்களோ?”

 

இப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுதுஅந்த இடத்திற்குநாயகி ஹெலன் வருகிறாள்அவளைப்  பார்த்த அந்தக் கிழவர்கள்,

 

இவ்வளவு அழகான பெண்ணிற்காக இரண்டு தேசங்கள் போர் புரிவது ஆச்சர்யமல்ல” என்று  முணுமுணுக்கிறார்கள்.

 

 

 

அப்படித்தான்இந்தப் படத்தில் நடக்கும் களேபர கத்திகுத்துகளைப் பார்க்கும் பொழுதுஒரு பெண்ணிற்காகவா இவ்வளவும் என்ற எண்ணம் எழவேயில்லைநாயகி அப்படிஅற்புதத்தேர்வு.

 

நாயகியின் தோழி இளமதியாக (நல்ல பெயர்வந்த பெண்ணின் நடிப்பும் நன்றாகவே இருந்தது..

 

 

 

அப்புக்குட்டியின் அலட்டலை ஏன் இவ்வளவு பெரிதுபடுத்திக் காட்டுகிறார்கள்அதுவும் பேருந்தே பயப்படும் சு.பா.வின் ஆள் என்றுதெரிந்தும் இப்படி வம்பிழுப்பதாகக் காட்டுகிறார்களே என  நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதேகியர் மாறும் இடம் அதுதான் எனப் புரியவைக்கிறார்கள்பஞ்சாயத்து ‘மாட்லாடல்களில் நுட்பம் இருக்கிறது.

 

 

 

செஸ் விளையாடும்பொழுதுவலதுபக்கம் இருக்கும் எதிராளியின் ஒரு காயை வெட்டப்போகிறோம்  எனில்அந்தப் பக்கமே பார்க்காமல்இடதுபுறமாகவே பார்ப்பது போல் பாவ்லா பண்ணுவோமேஅப்படித்தான் இருந்தது இடைவேளைக்குப் பிறகான டிவிஸ்ட்டுகள்.

 

 

 

இத்தனை ஆண்டுகளாகபணக்கார அப்பாக்களையும்வேற்று சாதிமத அப்பாக்களையும் எதிர்த்து  தங்கள் காதலை நிலைநாட்டப் பாடுபட்டுக் கொண்டிருந்த  காதலர்கள்  பிரச்சினையை  மாற்றிஒரே சாதிஅதுவும் உட்பிரிவு தலைக்கட்டும் அதாகவே இருந்தால் உசிதம்என்ற அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தி இருக்கிறார்கள்கட்டம் கீழே இருக்கிறதுஎந்தையும் நுந்தையும் உட்பிரிவு சாதிமுறை கேளிர்!

 

 

 

மற்றபடிபெண்நட்புதுரோகம்,  என அனைத்தும் இடம்பெற்றிருக்கும் பேருந்து சரேலனப் பயணித்துக் கடக்கிறது.

 

&&

 

 

 

நல்ல ஓட்டுநர் இருந்தால் பரிந்துரைக்கச் சொன்னார் நண்பர்ஓட்டுநரைப் பரிந்துரைக்கலாம். ‘நல்ல’ என்பதில்தான் பிரச்சினையே.  மிகஅற்புதமாக ஓட்டுபவர்கள் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடியில் பின்னிப் பெடல் எடுத்து விடுவார்கள்அதாவதுகுடிப்பதுநேரத்திற்கு வராமல்  இழுத்தடிப்பது,  மொபைலை சிங்கிள் ரிங்கிளேயே வைத்திருப்பது இத்தியாதிகளில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள்மாறாகஅவ்வளவு பதவிசாகஅதிர்ந்து கூட பேசாத டிரைவர்கள்  ஸ்டியரிங்கையைப் பிடிக்கும் கையோடு நம் உயிரைக் கையில் பிடிக்க வைத்துவிடுவார்கள்.

 

 

 

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் மிகுந்த கோபத்தோடு பேசினார். “முடியலப்பாஎன்னத்தச் சொல்லடிரைவர கட்டி மேய்க்கிறதுக்கு நடந்தே போய்ட்டு வந்துறலாம்போல.  அநியாயம் பண்றானுங்கப்பாரைட் டர்ன் பண்ணச் சொன்னா ரைட்ல பண்றான்” என்றார்சொல்பேச்சுக் கேட்கும் டிரைவர்கள் மிகவும் அரிதான இந்தக் காலத்தில் இப்படிச் சரியாகச் செய்த ஒருவனைத் திட்டும் இவரிடம் எவர் வேலை பார்க்க முடியும் என்று தோன்றியதுஅமைதியாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்மெதுவாகச் சொன்னார்அதாவது மொபைலில் பேசிக்கொண்டே ரைட் டர்ன் என்றிருக்கிறார்உடனே ரைட்டில் ஒடித்து திருப்பி இருக்கிறார் திருவாள டிரைவர்.  சுவர்தான் இருந்திருக்கிறதுவலதுபுறம் ரோடு இல்லை என்பதைச் சொன்ன பிறகு என்னால் அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லைவெளியே வரும்பொழுது பம்பரைப் பதவிசாகத் துடைத்துக் கொண்டிருந்தார் அந்த ஓட்டுநர்மும்முரமாக.

 

 

 

இதுவாவது பரவாயில்லை.  நெருங்கிய நண்பனின் பாஸ் வடக்கில் இருந்து வந்திருக்கிறார்.  இதுதான் தருணம் ஆளை அமுக்க எனத் தன் காரைத் தாரைவார்த்திருக்கிறான் நண்பன்டிரைவரோடுஇரவு பத்துமணி வாக்கில் பாஸிடம் இருந்து போன் வந்திருக்கிறதுவிசாரித்தால்,அண்ணாசாலையின் நடுவில் வண்டியை நிறுத்தி நீங்கள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது என அடம் பிடிக்கிறார் ஓட்டுநர் என பாஸ் கடுப்பில் எகிறடிரைவரிடம் பேசினானாம் நண்பன்.

 

நண்பன் : “என்னப்பா ஆச்சு?”

 

டிரைவர் : “சார் டீசல் குடிப்பேன்னு சொல்லுஒத்துக்குறேன்ஆனா எடெம் தெர்லன்னு மட்டும் சொல்லாத சார் நம்மளபதினாலு வயசுல ஸ்டியரிங் பிடிச்ச கையிது.

 

நண்பன் : “போன சார் கிட்டக் குடுப்பா.”

 

பாஸ் :  “See, I told him to take me to citycentre, and he stopped somewhere middle of the road. Too much..”

 

டிரைவர்நண்பனிடம் :  “சார் எந்த சர்வேயர வேணா வச்சு சென்னைய அளந்துபாருநான் இப்ப நிக்கிற இந்த எடந்தான் சிட்டியோட நடுசென்டரு

 

அன்று ஐநாக்ஸில் அவர் படம் பார்க்க முடியாமல் போனதற்கான விளைவை இன்றுவரை அனுபவிக்கிறானாம் நண்பன்.

 

 இப்படி நிறைய கதைகள் என்றாலும் சென்ற வருடம் ஏற்பட்ட ஒரு சிறுவிபத்தால் சில காலம் வாகனம் ஏதும் ஓட்ட முடியாத சூழல்.மிகுந்த தேடலுக்குப் பிறகு ஓர் ஓட்டுநர் அமைந்தார்.  விருட்டென முதல்கியரைக் கையாண்டதில் தாவியது வாகனம். “அடி சக்க,குதிரமாதிரிபோலயே சார் நம்ம வண்டிசும்மா தாவுதே” என்றவர் அடுத்து வந்த ஸ்பீட் ப்ரேக்கரில் தடதடவென விட்டுஅரசாங்கத்தையும் ரோடு காண்ட்ராக்டர்களையும் கண்டபடி திட்டித் தீர்த்தார். “நடு ரோட்லயா ஸ்பீட்ப்ரேக்கரப் போடுறதுஇவனுக அப்பன் வீட்டு ரோடுமாதிரி”.  சரி, சமாளித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே அந்த மேடான இடம் வந்ததுடக்கென வண்டியை நிறுத்தி,சார் இந்த மேட்ல மட்டும் நீங்க எடுத்து கொடுத்துட்டீங்கன்னா அந்தப் பக்கம் நான் ஓட்டிருவேன்மேட்டுல ஓட்டும்போது ஃபிரிவீல் பிடிக்காது நமக்கு” என்றார்கையெடுத்துக் கும்பிட்டேன்.

 

&&

 

 

 

கூடங்குளம்,. இடிந்தகரைடீசல் விலை போன்ற விசயங்களில் முதல்வரும் பிரதமரும் மேற்கூறிய  ஓட்டுநர்கள் போல்நடந்துகொள்கிறார்கள் என்பதாக நினைத்து மீண்டும் ஒரு முறை படிக்கத் துவங்காதீர்கள்அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.

 

&&

 

 

 

காலோவியம்.

 

 

 

சிறிது மூடியிருந்த

 

கதவின் இடையில்

 

தெரிந்த

 

உன் பாதங்களுக்கேற்ற

 

முகத்தை

 

நான் மனதில்

 

வரைந்துவிட்டேன்.

 

 

 

வரைந்த அது

 

சிதையப் போகிறது

 

தயவுசெய்து

 

என் கண்படாமல் போ நீ!.

 

 -பத்மஜா நாராயணன்

 

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்’ தொகுப்பில் இருந்து.

 

பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்.

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com