
யுத்தம் முடிவுற்ற அறிவிப்பை..
யாரும் சொல்லாமலே..
கரும்புகை விலகிய வானில்..
சிறகசைத்து கடக்கிறது பறவையொன்று..
கானகத்தின் விளிம்பை நெருங்கும்
கந்தக நொடியில்..
மூர்ச்சை அயர்ந்து..சிறகு ஓய்வதை..
கிளையகற்றி..
கை விரித்து ஏந்துகின்றன..
பெயர் தெரியா மரங்கள்..