முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
விருது பெற்ற மூத்த படைப்பாளிகள்!
இந்திரஜித்
ஆயிரத்தில் ஒருவன்: கையாலாகாத கைதி
ஆர்.அபிலாஷ்
ஆயிரத்தில் ஒருவன்- வரலாறு என்கிற புனைவின் மீதான கலை
கே.பாலமுருகன்
குப்பை தேசம் ------?
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
ஏலம் போகும் மனிதம்
நிஜந்தன்
வெள்ளி முளைத்தும் விடியாத சமூகத்தேக்கம்
கோ.புண்ணியவான், மலேசியா
கவிதை
வரையறைகள்
தரங்கினி
நேற்று இன்று நாளை..
நவீன்
ஒரு சிணுங்கலுக்குப்பின்...
ஜனா கே
கவிதை எழுதுவோர் கதை
லதாமகன்
கிளையகற்றி.. கை விரித்து..
இளங்கோ
போர்களுக்கு முந்தைய விருந்துகள்
மதன்
சிறுகதை
கிருஷ்ணி...
கார்த்திகாவாசுதேவன்
இந்த வாரக் கருத்துப் படம்
சொந்தங்களின் பார்ட்டி
/
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
ஒரு சிணுங்கலுக்குப்பின்...
ஜனா கே


 ஒளியற்ற கனவுகளில்
 மினுங்கி மினுங்கி
 சிணுங்குகின்றன
 சில ஞாபகங்கள்
 பனிக்காலத்து நட்சத்திரங்களாய்.
 
 
ஒரு மினுங்கலில் தெரிகிறது
 மேஜையில் ஒற்றை
 மெழுகுவர்த்தி.
 விழிகளில் எரியும்
 இரட்டை மெழுகுவர்த்திகளில்
 இருந்து வழிந்தோடுகிறது சுடுநீர்.
 
 
ஒரு சிணுங்கலில் தெரிகிறது
ஒரு சயனஅறை.
மார்பகங்களின் சிறு பிறைகுறியீடுகளில்
உறைந்திருக்கிறது குருதி.
தேம்பல்களில் அடர்த்தியாகிறது இரவு.
 
 
ஒரு மினுங்கலில் தெரிகிறது
ஒரு வெள்ளைப்புறா.
வெல்வெட் துணியிலிருந்து விழுகின்றன
ஈரமான சிவப்பு ரோஜா இதழ்கள்
வெளியெங்கும் நிறைகிறது
அன்பின் நறுமணம்
 
 
ஒரு சிணுங்கலில் தெரிகிறது
பாதி  நிலவும் பாதி சூரியனும்.
விரியும் புன்னகையில்
முழுமையடைகின்றன நிலவும் சூரியனும்
மற்றும் ஒரு மூச்சுத்திணறும் முத்தமும்.
 
 
ஒளிநிரப்பும் காலையில்
புதிதாய் பூத்திருந்தது
பனிதாங்கிய
சிவப்பு மலரொன்று
 
 
 
நினைவுகளின் ரணசிகிச்சை
 
மலைச்சிகரத்தின் உச்சியில் நடைபெறுகிறது
நினைவுகளின் ரணசிகிச்சை
நினைவுகளிலிருந்து கசியும் கசப்பின் ரத்தம்
நஞ்சாகி காற்றில் கரைகிறது
 
நச்சுக்காற்றின் அழுத்தத்தில்
கால்பிடித்து இழுக்கப்படுகின்றன
நினைவுகள்
கால்களை கட்டிப்பிடித்து கதறிக் கதறி
அழுதுகொண்டிருக்கிறது காதல்
 
பள்ளத்தாக்கின் ஆழத்திற்குள்
சத்தமின்றி சிதறிப்போகின்றன
நினைவுகள்
 
மலைமுகட்டின் மேல் மிதந்துகொண்டிருக்கிறது
அழுகை தீர்ந்த காதல்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com