முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
மைக்கேல் ஜாக்சனின் மரணம்: அஞ்சலிக் குறிப்பில் எதை எழுதுவது, அவர் யார் என்று எழுதுவது?
மாயா
மைக்கேல் ஜாக்சன் : ஆப்ரோ அமெரிக்க இசையின் கண்ணி
சுகுமாரன்
மலைமொழி : ஆதிவாசிமக்களின் தாண்டவம்
யமுனா ராஜேந்திரன்
இந்தியாவும் இனவெறியும்
செல்லமுத்து குப்புசாமி
யாகவா முனிவர் சுனாமியை அறிந்திருந்தாரா?
தமிழ் மகன்
‘கடவுள் இறக்கவில்லை'
இந்திரா பார்த்தசாரதி
என்ன செய்தி?
இந்திரஜித்
சாமான்யர்களின் சினிமாவும் சீமான்களின் சினிமாவும்
சுதேசமித்திரன்
ஒப்பனையில் ஒளிர்ந்திடும் கொட்டகைகள்
ந.முருகேசபாண்டியன்
பல கலியாணம் முடித்தல்
இளைய அப்துல்லாஹ்
குளோனிங்-மறு மனிதன்
நிஜந்தன்
க.நா.சு. உருவாக்கிய புரட்சி
தமிழவன்
ஓ. . .செகந்திராபாத்
சுப்ரபாரதிமணியன்
கலைந்துபோகும் கனவுச்சித்திரம்- ந.ஜயபாஸ்கரனின் ‘பித்தளை நாட்கள்’
பாவண்ணன்
நவீன தலித் மனதின் பிளவுக்களம்: நட.சிவகுமார் கவிதைகள்
ஆர்.அபிலாஷ்
கவிதை
உறக்கம் ஒரு தருணமாகிறது
கே.பாலமுருகன்
தொடர்வண்டிக் கவிதைகள்
ஆ, முத்துராமலிங்கம்
மாய உலகம்
சேரல்
ஆற்றில் வரைந்த கதை
றஞ்சினி
ஆட்களை இழந்த வெளி
தீபச்செல்வன்
ஒரு கண்ணில் ஆகாயம்
நேசமித்திரன்
ஆற்றைப் பார்த்தபடி
நந்தாகுமாரன்
இயங்குமுறை
அருண்.த
கொன்றை வேந்தன்
அனுஜன்யா
சிறுகதை
என்ன கொடுமை சார் இது?
வா.மணிகண்டன்
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
இந்த வார கருத்துப் படம்
நடவடிக்கை
பாபுஜி
மனிதக் காய்ச்சல்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில் ஆர்.அபிலாஷ்
சிற்றிதழ்ப் பார்வை
நாளை விடியும் (இரு திங்களிதழ்)
-
பொது
ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
-
பதிவுகள்
டோலோ பறவையின் ஞாபகங்களுடன்
பாண்டித்துரை
ஆற்றைப் பார்த்தபடி
நந்தாகுமாரன்


 
துள்ளித் துடிக்கும் உடல்
நிலவொளியைப் திருப்பிப் போடுகிறது
ஆழத்தின் அடிவாரத்தை நோக்கி
சோம்பேறித்தனமாக விழுகிறது
அறுபட்ட தலை
வானத்தைக் கூட்டிக் கொண்டு
நடக்கிறது ஆறு
ஆற்றைப் பார்த்தபடி
கிடக்கிறது வானம்.
 
புதிதாக
 
கருஞ்சிறகுக் கொம்பும்
செங்குருதிக் கன்னமும்
கொண்ட அந்தப் பறவை
இந்தப் பூமரக் கிளையில் அமர்ந்து
அவசரமாக மலங்கழித்துவிட்டுச்
சென்றதைப் போல
நம் காதல்
 
உன் குரலை மட்டும்
நீ எனக்குள் எறிந்துவிட்டுப் போய்விட்டாய்
அது இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறது
நீலக்கடல் அசையும் ஒலி
ஒலிகளுக்கிடையே எப்படியோ
தூங்கினேன்
மௌனத்திற்கிடையே எப்படியோ
விழித்தேன்
 
இரவு வானில் சிதறிக் கிடக்கும்
நட்சத்திரப் புள்ளிகளை
மனக்கோடுகளால் இணைத்து
உன் உருவத்தை வரைகிறேன்
ஒரு மனநோயாளியின்
ஓவியத்தைப் போல
 
வினோதமான வார்த்தைகளால்
உன்னைக் காதலிப்பதாகச் சொன்னேன்
விளங்கும்படியான மௌனத்தில்
என் மேல் காதலில்லை என்றாய்
என் கவிதைப் பட்டறையில்
காதலை வடிவமைக்கத் தொடங்கினேன்
புதிதாக

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com