முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெருந்துயரம்
இந்திரஜித்
இந்திய அரசியலின் வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்குத் திமிரைக் கொடுக்கிறதா?
மாயா
விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு
தமிழ்நதி
மரணம் அல்ல; தற்கொலை
அ.ராமசாமி
தமிழ் உயர்பண்புகளும் இந்தியத் தேசியப் பொய்களும்
தமிழவன்
அவசர பூப்பெய்தலும், விவாகரத்தும்: வனத்திலிருந்து நாகரிகம் வரை
ஆர்.அபிலாஷ்
செகந்திராபத் நினைவுகள்
சுப்ரபாரதி மணியன்
பார்சலோனா
நாகரத்தினம் கிருஷ்ணா
தாதா, அமி பாஞ்ச்போ
சி. வி. பாலகிருஷ்ணன்
எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!
சுதேசமித்திரன்
ஆனந்தமும் அமைதியின்மையும்-ஆத்மாநாமின் ‘இன்னும்’
பாவண்ணன்
ராகுல் என்ற உணர்வு மையம்
நிஜந்தன்
கவிதை
வெறுமையின் நிழல்
ஆதவா
முன் செல்லும் காமத்தின் முகம்
நந்தா குமாரன்
விண்ணப்பம்
நரன்
ஈழத்து அகதியாய்...
றஞ்சினி
வெற்றிட நிரப்பி
கெளரிப்ரியா
இரவுகள் இன்னொரு நரகம்-
லதா மகன்
அவரைப் பார்க்க ஆசை
ச.முத்துவேல்
சிறுகதை
தண்டவாளங்களும் சில கூட்ஸ் வண்டிகளும்
ரெஜோ
பொது
ஊரும் பெயரும்
கழனியூரன்
என்றார் முல்லா
தமிழில்: சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்: சஃபி
இந்த வார கருத்துப் படம்
தீராத நோய்
-
முள் கீரிடம்
-
ஹைக்கூ வரிசை
பொது
சாப்பாட்டுப் புராணம்
-
சிறுகதை
மரபின் மைந்தன் மா.முத்தையா-தீப.ந’வுக்கு எழுதியது.
-
ஹைக்கூ
ஜீவஜோதியின் வெளிச்சம்
-
ஜீவஜோதியின் வெளிச்சம்
-

ஜீவஜோதியின் வெளிச்சம்

விலை  : ரூ.5

ஆசிரியர் :      வே.சூசைராஜ்
முகவரி  : ஜீவஜோதி,
எண்: 58, சின்னக்குழந்தை முதன்மைத் தெரு,
மடுமாநகர்,
பெரம்பூர்,
சென்னை-600 011.
தொலைபேசி : 044-25591290

அண்ணல் அம்பேத்கரின் கொள்கையான ஒடுக்கப்பட்டோருக்கு உரிமைவாழ்வு என்பதுதான் ஜீவஜோதியின் கனவும் நம்பிக்கையுமாகும் என்ற பிரகடனத்துடன் வெளிவரும் இதழ் இது. (எடிட்டோரியல் பகுதியை ‘ஏடு இட்டோர் இயல்’ என்று தமிழ்ப்படுத்தியிருப்பது நன்றாக உள்ளது).

மக்கள் மத்தியில் நடக்கும் போராட்டங்களையும், பயிற்சிகளையும், விழாக்களையும், மாநாடுகளையும் பதிவு செய்யவே ‘வெளிச்சம்’ வெளிவந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு உடல் உழைப்போர் நல முன்னேற்றச் சங்கத்தின் (TNUNMS) முதல் மாநில மாநாடு- 2009 பிப்ரவரி 28 இல் செங்குன்றம் மண்டபத்தில் ஒரு நாள் முழுவதும் நடைபெற்றதை விரிவான கட்டுரையொன்று விவரிக்கிறது.
 
அண்ணல் அம்பேத்கரின் அறைகூவல் என்றொரு பகுதி-இந்தியாவில் சமூகத் தத்துவம் என்பது ‘பிறப்பின் அடிப்படையில் சமூகத்தைக் கூறுபோட்டு, உழைப்பவரைத் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கி, அவர்களை என்றென்றும் தாழ்ந்த சாதிகளாக்கி, அவர்களின் உழைப்பைச்சுரண்டிக் கொழுத்து வாழ்கின்றவர்களே உயர்ந்த சாதிகள்’ என்பதை மய்யமாகக் கொண்டுள்ளது. ‘பெண்களின் வீழ்ச்சிக்குப் பொறுப்பு மனுதான்’ என்றெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறிய அம்பேத்கர், மத்தியில் சட்ட அமைச்சராகப் பதவியேற்று இந்தச் சட்டத் தொகுப்பு மசோதாவை அறிமுகம் செய்து, அதில் பல்வேறு உரிமைகளைப் பெண்களுக்கு வழங்கினார் - என்ற விவரங்களுடன் மேலும் பல செய்திகளைச் சொல்கிறது.

இந்தியாவின் சாதனைகளும், வேதனைகளும் என்ற தொகுப்பு, பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள விரும்புவோர் அவசியம் படித்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டிய பகுதி. 

டெல்லியிலுள்ள வணிகத்தில் சாதனைசெய்த ‘கான்சாசா’வைப் பார்த்து, தங்களது வெற்றிக்குக் காரணம் என்ன? என்று கேட்டபோது ‘நான் தோல்வியடையும்போதெல்லாம் இன்னும் கூடுதலாக வேலை செய்வேன்’ என்றாராம்.

குடும்ப வன்முறை - பெண்கள் பாதுகாப்புச் சட்டம் பற்றி ஒரு விரிவான அலசல் பல விவரங்களைத் தெரிவிக்கிறது.

யாரைத்தான் நம்புவதோ. . .? என்ற பகுதி, தேர்தல், அரசியல்வாதிகள், அள்ளிவீசப்படும் வாக்குதிகள் என்று மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை வழங்குகிறது.

பாண்டியன்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com