முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெருந்துயரம்
இந்திரஜித்
இந்திய அரசியலின் வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்குத் திமிரைக் கொடுக்கிறதா?
மாயா
விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு
தமிழ்நதி
மரணம் அல்ல; தற்கொலை
அ.ராமசாமி
தமிழ் உயர்பண்புகளும் இந்தியத் தேசியப் பொய்களும்
தமிழவன்
அவசர பூப்பெய்தலும், விவாகரத்தும்: வனத்திலிருந்து நாகரிகம் வரை
ஆர்.அபிலாஷ்
செகந்திராபத் நினைவுகள்
சுப்ரபாரதி மணியன்
பார்சலோனா
நாகரத்தினம் கிருஷ்ணா
தாதா, அமி பாஞ்ச்போ
சி. வி. பாலகிருஷ்ணன்
எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!
சுதேசமித்திரன்
ஆனந்தமும் அமைதியின்மையும்-ஆத்மாநாமின் ‘இன்னும்’
பாவண்ணன்
ராகுல் என்ற உணர்வு மையம்
நிஜந்தன்
கவிதை
வெறுமையின் நிழல்
ஆதவா
முன் செல்லும் காமத்தின் முகம்
நந்தா குமாரன்
விண்ணப்பம்
நரன்
ஈழத்து அகதியாய்...
றஞ்சினி
வெற்றிட நிரப்பி
கெளரிப்ரியா
இரவுகள் இன்னொரு நரகம்-
லதா மகன்
அவரைப் பார்க்க ஆசை
ச.முத்துவேல்
சிறுகதை
தண்டவாளங்களும் சில கூட்ஸ் வண்டிகளும்
ரெஜோ
பொது
ஊரும் பெயரும்
கழனியூரன்
என்றார் முல்லா
தமிழில்: சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்: சஃபி
இந்த வார கருத்துப் படம்
தீராத நோய்
-
முள் கீரிடம்
-
ஹைக்கூ வரிசை
பொது
சாப்பாட்டுப் புராணம்
-
சிறுகதை
மரபின் மைந்தன் மா.முத்தையா-தீப.ந’வுக்கு எழுதியது.
-
ஹைக்கூ
ஜீவஜோதியின் வெளிச்சம்
-
ராகுல் என்ற உணர்வு மையம்
நிஜந்தன்

முப்பரிமாணம்

மன்மோகன் சிங் தலை நிமிர்ந்து பதவியேற்றுக்கொண்டார்.

இனி பொம்மைப் பிரதமர்களுக்கு இடம் இருக்காது.

யார் தன் அமைச்சரவையில் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்றெல்லாம்கூட அவர் தீர்மானிக்கிறார்.

காங்கிரஸ் தந்த முதுகெலும்பு அவருடைய உண்மை முகத்தைக் காட்டத் துவங்கிவிட்டது.

திமுக போன்ற கட்சிகளுக்குக்கூட அவற்றின் நிதர்சனத்தை காங்கிரஸ் சுட்டிக்காட்டிவிட்டது.

ஒரே நாளில் நாட்டின் அரசியல் உணர்வுகள் மாறிவிட்டன.

காங்கிரஸ் பெற்ற பலம், மாநிலக் கட்சிகளின் தன்மானத்தைக் கேள்விக்குட்படுத்தும் நிலைக்குத் தள்ளிவிட்டது.

காங்கிரசிஸின் மீட்சிக்கு ராகுல் காந்தி காரணம்.

ராகுல் காந்தி வெளிநாட்டில் மேலாண்மை பயின்றவர். நிறுவனங்களின் லாபத்தின் பின்னணிகள் எப்படி இருக்கும் என்று ஆராய்ந்தவர்.

மக்களைப் பங்குதாரர்களாகத்தான் ராகுல் காந்தி பார்க்கிறார், உணர்ச்சிகளுக்கு அவரிடம் இடம் இல்லை என்று அவருடைய முன்னாள் கூட்டாளிகள் குற்றம் சுமத்துகிறார்கள்.

உண்மையில் யாரிடம் உணர்ச்சிகளுக்கு இடம் இருக்கிறது? உணர்ச்சிகளுக்கு இடம் இருந்திருந்தால் உலகில் பொய், புரட்டு, ஊழல், அதிகார மேலாண்மை போன்றவை நடக்குமா?

ராகுல் காந்தியிடம் உணர்ச்சிகளுக்கு இடம் இல்லாமல் இருந்தால்தான் என்ன.

வாக்குச் சதவீதத்தை உயர்த்திக் காட்டிய மக்கள் உணர்வின் நிலையையும் காட்டிவிட்டார்கள். ஆளும் அமைப்புடன் பரிமாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள அவர்களுக்கு இருந்த விருப்பத்தை அவர்கள் உணர்த்திவிட்டார்கள். தேசிய பொருளாதார உணர்வோட்டத்தில் பங்குபெற விரும்பும் தங்கள் ஆசையை அவர்கள் வெளிப்படுத்திவிட்டார்கள்.

ராகுல் காந்தி அரசியலை ஒரு நிறுவனம் போல பார்க்கிறார்.

மன்மோகன் சிங் ஆட்சியை ஒரு நிறுவனம் போல நடத்துகிறார்.

நாடு ஒரு நிறுவனம் போல நடக்கும் போல இருக்கிறது.

ஒரு பெரிய நிறுவனத்தில் சாதாரண மக்களுக்கு எங்கே இடம் இருக்கிறது? ஒவ்வொரு தனிமனிதனுக்கும் என்ன பங்கு இருக்கிறது? அவனுடைய முதலீடு என்ன? அவனுடைய லாபம் என்ன? இது எப்போது நிர்ணயம் ஆகும்?

இது நிர்ணயம் ஆக வேண்டுமா?

பணமும், அதிகாரமும் உணர்வோடு தொடர்புடையவையாக இருக்கும்போது, எதையும் எப்படி நிர்ணயம் செய்வது?

நீண்ட அரசியல் போக்கில் உணர்வின் பங்கு எப்போது நிர்ணயம் ஆகும்?

யாருடைய உணர்வின் பங்கு என்று எப்படித் தீர்மானிப்பது?

ஒரு தனிமனித உடலுக்கும், தனிமனித உணர்வுக்கும் சமூக, அரசியல் ஓட்டத்தில் கிடைக்கும் பங்குதான் என்ன?

ஒரு உடலாய் தவித்துக் கிடக்கும் உணர்வுகளுக்கு எது பாதுகாப்பு வழங்கப்போகிறது?

எதில் பங்கு கிடைத்தால் அவலம் நீங்கும்?

அரசியல் பொருளாதாரப் போக்கில் பங்குதாரர்களாக இருந்து மக்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?

ஒரு வேளை உணவும், ரயில் கட்டணக் குறைப்பும், இலவச தொலைக்காட்சி அலைவரிசைகளும் உணர்வுப்பூர்வ வாழ்வை உறுதிப்படுத்திவிடுமா?

ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் போட்டி போடுகின்றன. இது மக்கள் பெறும் பங்கு என்று உருவகம் பேசுகின்றன.

அமைச்சரவையில் பங்கு பெற வேண்டும் என்று ராகுல் காந்திக்கு பிரதமர் அழைப்பு விடுக்கிறார்.

அதிகாரம் ஒரு கையொப்பத்தில் மட்டும் தீர்மானம் ஆகிவிடுவதில்லை.

மன்மோகன் சிங்குகளை உருவாக்கும், இயக்கும் அதிகார மையத்தில் ராகுல் காந்தி இருக்கிறார். அவருக்கு அமைச்சர் போன்ற சாதாரண உருவகங்கள் எப்படிப் பொருந்தும்?

பிரதமர் பொறுப்புகூட ராகுல் காந்திக்குப் போதுமா?

மக்களின் பங்கு உணர்வால் அதிகாரம் பெற்றுவிட்ட ராகுல் காந்திக்கு ஒரு நாற்காலி தரும் அதிகாரக் கற்பனை ஏமாற்றம் அளிப்பதாக இருக்கும்.

நாட்டின் மொத்த உணர்வுகளும் இப்போது ராகுல் காந்தியிடம் மையமிட்டிருக்கின்றன.

மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, .சிதம்பரம் என்ற முகங்கள் அதிகாரப் பிரதிநிதிகளாக ஊடகப் பிம்பங்களில் பதிவு ஆனாலும், ராகுல் காந்தி என்ற முகம்தான் பின்னணியின் வேராக நங்கூரமிட்டிருக்கிறது.

நேரு குடும்பம் மீண்டும் ஒரு அரசியல் மீட்சியை நாட்டில் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதில் பல மாநிலக் கட்சிகளின் வரையறை மாறியிருக்கிறது.

எத்தனை அமைச்சரவை இடங்கள் என்று காங்கிரஸ் திடமாக இருந்ததில், திமுகவுக்குள் பலத்த விவாதம் நிகழ்ந்தது. குடும்பத்திற்கு எத்தனை அமைச்சர்கள், கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள் என்றெல்லாம் தன் உணர்வுகளை திமுக பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

1996க்குப் பிறகு மாநிலக் கட்சிகள் தீர்மானிக்காத மத்திய அரசு அமைந்திருக்கிறது. மாநிலக் கட்சிகளின் உணர்வுகள் மாநில எல்லையோடு இருக்கட்டும் என்று தேசிய வாக்காளர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.

அவரவர் உணர்வுகள் அவரவர் இடத்தில் இருந்தால் மட்டும் போதும். எல்லையைவிட்டு வந்தால் நிலை உணர்த்தப்படும் என்று தேசிய வாக்காளர்களின் உணர்வு காட்டிவிட்டது.

சோனியா, ராகுல் குடும்ப நிலைப்பாடு தேசிய அரசியல் பொருளாதார ஓட்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டது.

மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் முகங்களை கண்ணாடிகள் மாற்றிக் காட்டுவதை உணரத் துவங்கிவிட்டார்கள்.

ஒன்றுபட்ட இந்தியா என்பது வாக்களிக்கும் முறையில் இருக்கிறது என்று வாக்காளர்கள் காட்டிவிட்டார்கள்.

அந்தப் பாடத்தில் புதிய அரசின் முகம் புதிய பொருள் தருகிறது.

மூர்க்க பெரும்பான்மையுடன் வந்தபோதெல்லாம் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தொடுத்த உணர்வின் வடிவில் இனி இந்தியா இருக்க முடியாது. ஆட்சி எந்திரத்தின் ஓட்டத்தில் ஒவ்வொரு இந்தியனுக்கும் பங்கு இருக்கிறது என்று உணர்த்தும் அவசியம் ஏற்பட்டுவிட்டது. உணர்வின் ஜனநாயகம் மெதுவாக விரிவுபட்டுக்கொண்டிருக்கிறது என்பதை உணரும் அவசியம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற உணர்வின் அதிகாரத்தில் ராகுல் காந்தி இருக்க முடியாது. அவர் இருப்பது போலவும் தெரியவில்லை.

மக்களின் பங்குக்கு அவர் மதிப்பு கொடுப்பவராக இருக்கலாம். மக்களும் அவருடைய எதிர்பார்ப்புக்கு விடை கொடுப்பவர்களாக மாறியிருக்கலாம்.

இதனால்தான் மன்மோகன் சிங் பொம்மை பிம்பத்திலிருந்து மாற முடிந்தது.

சாவி ராகுல் காந்தியிடம் இருக்குமா என்பது தெரியவில்லை.

மக்களிடம் அதைக் கொடுத்துவிட்டால்தான் அரசியல் நிறுவனத்தில் உணர்வின் பங்கு சாத்தியம் ஆகும்.

**********

knijanthan@gmail.com

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com