முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெருந்துயரம்
இந்திரஜித்
இந்திய அரசியலின் வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்குத் திமிரைக் கொடுக்கிறதா?
மாயா
விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு
தமிழ்நதி
மரணம் அல்ல; தற்கொலை
அ.ராமசாமி
தமிழ் உயர்பண்புகளும் இந்தியத் தேசியப் பொய்களும்
தமிழவன்
அவசர பூப்பெய்தலும், விவாகரத்தும்: வனத்திலிருந்து நாகரிகம் வரை
ஆர்.அபிலாஷ்
செகந்திராபத் நினைவுகள்
சுப்ரபாரதி மணியன்
பார்சலோனா
நாகரத்தினம் கிருஷ்ணா
தாதா, அமி பாஞ்ச்போ
சி. வி. பாலகிருஷ்ணன்
எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!
சுதேசமித்திரன்
ஆனந்தமும் அமைதியின்மையும்-ஆத்மாநாமின் ‘இன்னும்’
பாவண்ணன்
ராகுல் என்ற உணர்வு மையம்
நிஜந்தன்
கவிதை
வெறுமையின் நிழல்
ஆதவா
முன் செல்லும் காமத்தின் முகம்
நந்தா குமாரன்
விண்ணப்பம்
நரன்
ஈழத்து அகதியாய்...
றஞ்சினி
வெற்றிட நிரப்பி
கெளரிப்ரியா
இரவுகள் இன்னொரு நரகம்-
லதா மகன்
அவரைப் பார்க்க ஆசை
ச.முத்துவேல்
சிறுகதை
தண்டவாளங்களும் சில கூட்ஸ் வண்டிகளும்
ரெஜோ
பொது
ஊரும் பெயரும்
கழனியூரன்
என்றார் முல்லா
தமிழில்: சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்: சஃபி
இந்த வார கருத்துப் படம்
தீராத நோய்
-
முள் கீரிடம்
-
ஹைக்கூ வரிசை
பொது
சாப்பாட்டுப் புராணம்
-
சிறுகதை
மரபின் மைந்தன் மா.முத்தையா-தீப.ந’வுக்கு எழுதியது.
-
ஹைக்கூ
ஜீவஜோதியின் வெளிச்சம்
-
மரபின் மைந்தன் மா.முத்தையா-தீப.ந’வுக்கு எழுதியது.
-

05-10-2006
பேரன்புடையீர். . .
வணக்கம். கடிதமும் முகவரிகளும் பெற்றேன். அவர்களுக்கெல்லாம் இதழ் தயாரானதும் அனுப்பிவைக்கிறேன். ரசிகமணி விழா எடுப்பது எங்கள் கடமையல்லவா! இத்தனை விழிப்புணர்வோடு நீங்களெல்லாம் இயங்கும்போது எங்களால் இயன்றதைச் செய்யவேண்டுமல்லவா!
திரு.ரவீந்திரன் வேறு யாரிடமும் நிதியுதவி பெற வேண்டாமென்று சொல்லி அவரே மனமுவந்து எல்லாவற்றையும் ஏற்றுள்ளார். பெரிய விஷயம். பெரிய உள்ளம். ‘பேசும் கடிதங்கள்’ தொகுப்பில் உங்கள் கடிதங்களைப் படித்து வெகுவாக அனுபவித்தேன்.
எனக்கென்னவோ கவிதை-கட்டுரை அளவுக்குக் கடித இலக்கியம் கைவரவில்லை. கணக்குப்பிள்ளை கடுதாசி போலத்தான் எழுத வருகிறது. ரசிகமணி கடிதங்களையும் கல்யாண்ஜி கடிதங்களையும் ஓயாமல் படித்துக்கூட இதே லட்சணம்தான்.
நிறைய நேரங்களில் என் கடிதங்கள் ரசீதுபோலத்தான் இருக்கும். உங்களுக்கு அழகாக, ஆழமாக, காட்சி விவரிப்போடு எழுத வருகிறது. பஞ்சவடியிலல்லவா இருக்கிறீர்கள்!
வீட்டில் அனைவரையும் மிகவும் விசாரித்ததாகச் சொல்லவேண்டும். குறிப்பாகக் குழந்தைகளை. முன்பெல்லாம் தென்காசி-குற்றாலம் என்றதும் ரசிகமணி, அருவி, மகராஜபிள்ளை என்றுதான் நினைவுக்கு வரும். இப்போதெல்லாம் சௌமியா, திவ்யா, சுருதி ஆகியோர் முகங்கள்தான் முந்திக்கொண்டு நினைவுக்கு வருகின்றன. ரசிகமணியென்ன, நீங்களென்ன. . . எல்லோரும் அப்புறம்தான். கவிஞர் வைரமுத்து பிறந்தநாள்க் கவியரங்கில் ஓரிரண்டாண்டுகள் முன்பு தலைமை வகித்துப் பாடினேன். அப்போது, அவரது உணவுப்பழக்கத்தைப் பற்றி சொன்னேன்.
‘ஊட்டம் கொடுக்கும் அசைவ உணவைத்
தேர்வு செய்வதே தனிவிதம்தான்
நாட்டுக்கோழி இலையில் விழுந்தால்
நோபல் பரிசெல்லாம் அப்புறம்தான்’
என்று. உணவுக்கே இத்தனை ஈர்ப்பு இருக்கும்போது குழந்தைகளைப் பற்றிக் கேட்கவா வேண்டும். இயல்பாகவே நான் குழந்தைகளின் கைப் பொம்மைதான். அவர்களின் கரடிப் பொம்மையாய், காராய், கலர் பென்சிலாய், இன்னபிறவாய் இருப்பது என் விருப்பம்.
உங்களுக்கு எழுதுவதாலோ என்னவோ எனக்கும் கடிதம் எழுத வருகிறது பாருங்கள். பிற பின்.
அன்புடன்
முத்தையா

கடிதச் சேகரம்: கழனியூரன்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com