முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெருந்துயரம்
இந்திரஜித்
இந்திய அரசியலின் வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்குத் திமிரைக் கொடுக்கிறதா?
மாயா
விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு
தமிழ்நதி
மரணம் அல்ல; தற்கொலை
அ.ராமசாமி
தமிழ் உயர்பண்புகளும் இந்தியத் தேசியப் பொய்களும்
தமிழவன்
அவசர பூப்பெய்தலும், விவாகரத்தும்: வனத்திலிருந்து நாகரிகம் வரை
ஆர்.அபிலாஷ்
செகந்திராபத் நினைவுகள்
சுப்ரபாரதி மணியன்
பார்சலோனா
நாகரத்தினம் கிருஷ்ணா
தாதா, அமி பாஞ்ச்போ
சி. வி. பாலகிருஷ்ணன்
எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!
சுதேசமித்திரன்
ஆனந்தமும் அமைதியின்மையும்-ஆத்மாநாமின் ‘இன்னும்’
பாவண்ணன்
ராகுல் என்ற உணர்வு மையம்
நிஜந்தன்
கவிதை
வெறுமையின் நிழல்
ஆதவா
முன் செல்லும் காமத்தின் முகம்
நந்தா குமாரன்
விண்ணப்பம்
நரன்
ஈழத்து அகதியாய்...
றஞ்சினி
வெற்றிட நிரப்பி
கெளரிப்ரியா
இரவுகள் இன்னொரு நரகம்-
லதா மகன்
அவரைப் பார்க்க ஆசை
ச.முத்துவேல்
சிறுகதை
தண்டவாளங்களும் சில கூட்ஸ் வண்டிகளும்
ரெஜோ
பொது
ஊரும் பெயரும்
கழனியூரன்
என்றார் முல்லா
தமிழில்: சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்: சஃபி
இந்த வார கருத்துப் படம்
தீராத நோய்
-
முள் கீரிடம்
-
ஹைக்கூ வரிசை
பொது
சாப்பாட்டுப் புராணம்
-
சிறுகதை
மரபின் மைந்தன் மா.முத்தையா-தீப.ந’வுக்கு எழுதியது.
-
ஹைக்கூ
ஜீவஜோதியின் வெளிச்சம்
-
சூஃபி கதைகள்
தமிழில்: சஃபி


அணில்
மௌலானா பகாவுதீன், நிஷாப்பூரைச் சேர்ந்த அலாவுதீனுடன் பசுமை சூழ்ந்த ஆற்றுப் படுகையோரமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.
அப்போது, "நீங்கள் சூஃபி மார்க்கத்திலிருந்து , மக்கள் விரும்பி சந்தோஷமடையக் கூடிய பல விஷயங்களை ஏன் விலக்கிவிட்டீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். சூஃபி வழியில் புகுந்திருக்கும் பல சடங்குகள் அர்த்தமற்றவை என்பதை ஒத்துக் கொள்ளும் முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன். ஆனால், மக்களிடமிருந்து, அவர்களுக்கு சந்தோஷமளிக்கும் மூல விஷயத்தை நீக்கிவிட்ட பிறகு, அவர்களிடம் அதை இட்டு நிரப்ப எதுவும் நீங்கள் பதிலாகத் தருவதில்லை’’ என்று அலாவுதீன், மௌலானாவிடம் கேட்டார்.
"நமது கண்முன்னே இப்போது ஒரு காட்சி விரிகிறது. அதைக் கவனித்துப் பார்த்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும். அதைப் புரிந்து கொண்டால், நியாயமான இன்பத்தைக் கொண்டவராவீர்கள்’’ என்று மௌலானா பகாவுதீன் பதில் சொன்னார்.
பகாவுதீன், அலாவுதீன் போன வழியில் சிறுவர்கள் சிலர் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்கிடையில், தாங்கள் பிடித்திருந்த ஓர் அணிலை தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அணிலின் கால்களைச் சிறுவர்கள் கயிற்றால் கட்டியிருந்தனர். அப்படி விளையாடுவது சிறுவர்களுக்குக் கிளர்ச்சியூட்டி பெரிய குதூகலத்தைத் தந்துகொண்டிருந்தது. அவர்களின் முகம் மகிழ்ச்சியால் பூரித்திருந்தது.
சிறிது நேரம் போன பிறகு, ஓர் இளைஞன் சாலையோரமிருந்து, சிறுவர்கள் அப்படி விளையாடுவதைப் பார்த்து அவர்களை நோக்கிப் போனான். அவர்களிடமிருந்து அணிலைப் பிடுங்கி அதன் கால்களைப் பிணைத்திருந்த கயிற்றினை அவிழ்த்து அதனை விடுவித்தான் இளைஞன். தங்களது சந்தோஷம் தடைப்பட்டது கண்டு சிறுவர்கள்  கோபமடைந்தனர். இளைஞனைப் பார்த்து எல்லாவிதமான கெட்ட வார்த்தைகளையும் சொல்லத் தொடங்கினர் சிறுவர்கள்.
அதைப் பார்த்துவிட்டு அலாவுதீன் சொன்னார்:
"அந்த நிகழ்ச்சி எனக்கு சுட்டிக் காட்டப்படாமல் இருந்திருந்தால், நான் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சூழ்நிலைகளின் தன்மைகளையும், நியாயமான மகிழ்ச்சி என நாம் நினைத்துக் கொண்டிருப்பவைகளின் உண்மையான தன்மைகளையும் உறுதியாகப் புரிந்து கொள்ளாமலே போயிருப்பேன். அந்த சம்பவத்திலிருந்து, என் வாழ்க்கை முழுவதும், நான் விரும்பக் கூடியது என்பது , அதற்காகப் பிற விஷயங்களைப் பலியிட்டுப் பெறக்கூடியது என்பதைப் புரிந்து கொண்டேன்.
மக்களை சந்தோஷப்படுத்தும் விஷயம்  ‘நேர்மையான' மக்களைக்கூட  நமக்கு எளிதில் சந்தேகம் எழாதபடி, மனதின் பிறழ்வான, ஆசைகளைத் திருப்திப்படுத்தும் தேட்டமாகவே அமைந்துவிடுகிறது.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com