முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெருந்துயரம்
இந்திரஜித்
இந்திய அரசியலின் வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்குத் திமிரைக் கொடுக்கிறதா?
மாயா
விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு
தமிழ்நதி
மரணம் அல்ல; தற்கொலை
அ.ராமசாமி
தமிழ் உயர்பண்புகளும் இந்தியத் தேசியப் பொய்களும்
தமிழவன்
அவசர பூப்பெய்தலும், விவாகரத்தும்: வனத்திலிருந்து நாகரிகம் வரை
ஆர்.அபிலாஷ்
செகந்திராபத் நினைவுகள்
சுப்ரபாரதி மணியன்
பார்சலோனா
நாகரத்தினம் கிருஷ்ணா
தாதா, அமி பாஞ்ச்போ
சி. வி. பாலகிருஷ்ணன்
எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!
சுதேசமித்திரன்
ஆனந்தமும் அமைதியின்மையும்-ஆத்மாநாமின் ‘இன்னும்’
பாவண்ணன்
ராகுல் என்ற உணர்வு மையம்
நிஜந்தன்
கவிதை
வெறுமையின் நிழல்
ஆதவா
முன் செல்லும் காமத்தின் முகம்
நந்தா குமாரன்
விண்ணப்பம்
நரன்
ஈழத்து அகதியாய்...
றஞ்சினி
வெற்றிட நிரப்பி
கெளரிப்ரியா
இரவுகள் இன்னொரு நரகம்-
லதா மகன்
அவரைப் பார்க்க ஆசை
ச.முத்துவேல்
சிறுகதை
தண்டவாளங்களும் சில கூட்ஸ் வண்டிகளும்
ரெஜோ
பொது
ஊரும் பெயரும்
கழனியூரன்
என்றார் முல்லா
தமிழில்: சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்: சஃபி
இந்த வார கருத்துப் படம்
தீராத நோய்
-
முள் கீரிடம்
-
ஹைக்கூ வரிசை
பொது
சாப்பாட்டுப் புராணம்
-
சிறுகதை
மரபின் மைந்தன் மா.முத்தையா-தீப.ந’வுக்கு எழுதியது.
-
ஹைக்கூ
ஜீவஜோதியின் வெளிச்சம்
-
சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெருந்துயரம்
இந்திரஜித்

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று தமிழ் நாட்டில் ஒரு பழைய பாட்டு உண்டு. அந்தப் பாலத்தைக் கட்டிவிட்டார்களா என்பது அங்கு போய்ப் பார்த்தால்தான் தெரியும். ஆனால் பாலங்கள் கட்டுவது அவ்வளவு சுளுவான வேலை அல்ல.

இலங்கையில் இரண்டு விதமான மக்கள் உண்டு. சிங்களம், தமிழ். இது பாட்டு எழுதியவர்களுக்கு எல்லாம்கூடத் தெரியும். நான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது சிங்கள மக்கள் ஒருவார விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதை நான் நேரில் பார்க்கவில்லை. தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளில் ஒரு காட்சியை மீண்டும் மீண்டும் காட்டினார்கள். முதிர்ச்சி பெற்ற சிங்களப் பெண்கள் கூடிநின்று ஒரு பெரிய மேளத்தைப் போட்டு கொட்டோ கொட்டென்று கொட்டுகின்றனர். சுற்றிச் சுற்றி நின்று மேளம் போடும் அவர்களைப் பார்த்தால் ஒருவிதமான வருத்தம் தெரிகிறது.

உண்மையிலேயே அவர்கள் கொண்டாட்டத்தில் மேளம் போட்டார்களா அல்லது அது சாவுமேளமா என்பதெல்லாம் தொலைக்காட்சியில் தெரியவில்லை.

தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணைய ஏடுகள் என்று எங்கும் பலவிதமான செய்திகள் வந்து குவிகின்றன. எதை நம்புவது என்று புரியவில்லை.

என்னுடைய அனுதாபம் எல்லாம் சிங்கள மக்களுக்குத்தான். அவர்களுக்கு நேர்ந்துள்ள துன்பமே பெரிய துன்பம்.

நினைத்துப் பாருங்கள். உங்கள் நாட்டில் உங்கள் மக்களை உங்கள் ராணுவமே அடித்துக் கொல்கிறது. அந்தக் கொலையோடு எந்தத் தொடர்பும் இல்லாத உங்களையும் உலகம் கொலையாளி போலவே பார்க்கிறது.

சிங்கள மக்கள் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்கள்? இரண்டு இனங்களுக்கு இடையே பகைமையை உருவாக்குவது அரசியல்வாதிகள்தான். அரசியல் நடத்தவும், பத்திரிகை விற்கவும், பெரிய அளவில் பணம் சம்பாதிக்கவும் உள்ள வழிகளில் ஒன்று இனத்தை முன்நிறுத்துவது. அப்படிச் சிலர் எல்லா நாடுகளிலும் செய்யத்தான் செய்வார்கள். அப்படித்தான் இலங்கையிலும் நடந்தது. அதற்கு லட்சக் கணக்கில் சிங்கள மக்கள் பலியாகிவிட்டார்கள்.

எவ்வளவு பெரிய கொடூரம்.

தமிழர்களுக்குப் பரவாயில்லை. ஒரு சில ஆயிரம் தமிழர்கள் இறந்தார்கள்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தோல்வியைத் தழுவினார்கள்.

தமிழர்களுக்கு தோல்வியை நன்றாகத் தெரியும். தோல்வியும் தமிழனும் போல என்று ஒரு பழமொழிகூடச் சொல்லலாம்.

தமிழனைப் பார்த்ததும் தோல்வி ஏதோ ஒரு பழைய நண்பனைப் பார்த்துவிட்டது போல் வந்து கட்டித் தழுவிக் கொள்கிறது. முதலில் இந்தத் தோல்வியைச் செருப்பால் அடித்து விரட்ட வேண்டும்.

பலர் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட தோல்வியை தமிழர்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று நினைக்கின்றனர். என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்புக்குக் கிடைத்த தோல்வி எப்படி உலகெங்கும் உள்ள ஒட்டு மொத்தத் தமிழர்களின் தோல்வியாக இருக்க முடியும்?

தமிழர்கள்தான் முட்டாள்தனமாக அப்படி நினைக்கிறார்கள் என்றால் மற்றவர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். தமிழர்களுக்குக் கிடைத்துவிட்ட ஒரு தோல்வியாகவே விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த தோல்வியை அவர்கள் கொண்டாடுகிறார்கள். சிரிக்கிறார்கள். எப்படி அது?

மறுபடி மறுபடி என்னுடைய வருத்தம் எல்லாம் சிங்கள மக்களை நினைத்துத்தான். கொழும்பில் முதல்நாள் வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கியபோது அங்குள்ள ஒரு நண்பர் சொன்னார். `சிங்கள மக்களுக்கு அடியோடு மனிதாபிமானம் தொலைந்துவிட்டது என்று சொல்வது சரியல்ல. இந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் அவர்களின் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் மனிதாபிமானம் இருந்து கொண்டுதான் இருக்கிறது`.

மனிதாபிமானம் என்ன அவ்வளவு பெரிய திருடனா? அவன் ஏன் ஒளிந்து கொண்டு எட்டி எட்டிப் பார்க்க வேண்டும்?

கூச்சம்.

இப்போது தமிழர்களுக்கு ஒரு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. அதைவிட மோசமாக சிங்கள மக்கள் இனித் தலைநிமிரவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

நல்ல வேளையாக தமிழனாகப் பிறந்தோம் என்று நாம் ஆறுதல் அடையலாம். சில சமயங்களில் சும்மா கிடைத்த வெற்றியைக் கொண்டாடுவதைவிட விலைகொடுத்து வாங்கும் தோல்வியை அனுபவிப்பது மேல்.

ஈழத்தமிழர்களுக்குப் பெருந்தீங்கு நடந்துவிட்டது. வன்னியில் இப்போது நடந்துவிட்டது இனி உயிரினம் உள்ளவரை நம் மரபணுவில் இருக்கும்.

அது தமிழர்களுக்கு நடந்தது என்பது பெரிதல்ல. யாருக்கு நடந்திருந்தாலும் அது நியாயம் அல்ல.

மனிதர்களை அப்படி நடத்தக் கூடாது. அதற்கு யார் பொறுப்பாக இருந்தாலும், நாங்கள் அதற்குப் பொறுப்பல்ல என்று முதலில் கையைத் தூக்கிச் சொல்லிவிடுவார்கள்.

யுத்தத்தில் மனிதன் நசுக்கப்படுகிறான்.

வன்னி வலியின் விளைவாக உலகின் மிக உயர்ந்த இனங்களில் ஒன்றாக ஈழத் தமிழ் இனம் உருவெடுக்கப் போவது நிச்சயம்.

அப்போது நாமெல்லாம் நாங்களும் தமிழர்கள்தான் என்று சொல்லிக் கொள்ளப் போட்டிபோடுவோம்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com