முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெருந்துயரம்
இந்திரஜித்
இந்திய அரசியலின் வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்குத் திமிரைக் கொடுக்கிறதா?
மாயா
விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு
தமிழ்நதி
மரணம் அல்ல; தற்கொலை
அ.ராமசாமி
தமிழ் உயர்பண்புகளும் இந்தியத் தேசியப் பொய்களும்
தமிழவன்
அவசர பூப்பெய்தலும், விவாகரத்தும்: வனத்திலிருந்து நாகரிகம் வரை
ஆர்.அபிலாஷ்
செகந்திராபத் நினைவுகள்
சுப்ரபாரதி மணியன்
பார்சலோனா
நாகரத்தினம் கிருஷ்ணா
தாதா, அமி பாஞ்ச்போ
சி. வி. பாலகிருஷ்ணன்
எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!
சுதேசமித்திரன்
ஆனந்தமும் அமைதியின்மையும்-ஆத்மாநாமின் ‘இன்னும்’
பாவண்ணன்
ராகுல் என்ற உணர்வு மையம்
நிஜந்தன்
கவிதை
வெறுமையின் நிழல்
ஆதவா
முன் செல்லும் காமத்தின் முகம்
நந்தா குமாரன்
விண்ணப்பம்
நரன்
ஈழத்து அகதியாய்...
றஞ்சினி
வெற்றிட நிரப்பி
கெளரிப்ரியா
இரவுகள் இன்னொரு நரகம்-
லதா மகன்
அவரைப் பார்க்க ஆசை
ச.முத்துவேல்
சிறுகதை
தண்டவாளங்களும் சில கூட்ஸ் வண்டிகளும்
ரெஜோ
பொது
ஊரும் பெயரும்
கழனியூரன்
என்றார் முல்லா
தமிழில்: சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்: சஃபி
இந்த வார கருத்துப் படம்
தீராத நோய்
-
முள் கீரிடம்
-
ஹைக்கூ வரிசை
பொது
சாப்பாட்டுப் புராணம்
-
சிறுகதை
மரபின் மைந்தன் மா.முத்தையா-தீப.ந’வுக்கு எழுதியது.
-
ஹைக்கூ
ஜீவஜோதியின் வெளிச்சம்
-
இரவுகள் இன்னொரு நரகம்-
லதா மகன்

 
இருள்வெட்டும் தெரு விளக்கிற்கும்
மௌனத்தை வெளித்தள்ளி
சாத்தப்பட்ட கதவுகளுக்கும் நடுவில் புகுந்து
மேல்விழுந்து தெறித்தோடுகிறது
தற்கொலை செய்துகொள்ளச் சொல்லும்
ஒரு மெல்லிய சாத்தானின் கூற்று
O

அமானுஷ்யங்களை அரைத்துப் பூசிய
இரவின் பொழுதில்
ஒருவருக்கொருவர் பயந்து கொள்கிறோம்
நான் மிதிப்பதாய் நாயும்
நாய் கடிப்பதாய் நானும்
O

எவருக்கும் தெரியாத இரவொன்றில்
காமப் பெருநிலையின்
களிச்சிரிப்பைக் கடந்த
கடும் இரவில் .
காதலின் கழிவிரக்கம் கற்றுக் கொண்டு
நான் கொன்று தீர்த்த
உலகம்
உங்கள் உலகத்தை விடப் பெரிது
O

மின்சாரமற்ற வேனில்
இரவுப் பொழுதுகளிலெல்லாம்
நிலவினை ரசிக்க
மிச்சம் வைக்கப்படுகின்றனர்
தூக்கமற்ற கனவான்கள்
O

செத்துப் போன குழந்தையைக் கொண்டிருந்தவர்களுக்கும்
செத்துப் போன மனைவியை ஆண்டிருந்தவர்களுக்கும்
செத்துப் போன காதலைக் காதலித்தவருக்கும்
மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறது
இரவுகள் இன்னொரு நரகம்!
O

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com