|
Shaji
|
இசைத் துறையோடு நீண்டகாலமாக பணியாற்றிவரும் ஷாஜி, 1968 ஜூன் 6ஆம் தேதி கேரளாவில், தமிழ்நாட்டு எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில், கட்டப்பன என்ற ஊரில் பிறந்தார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதி வருகிறார். உலகப்புகழ் பெற்ற பல இசை நிறுவனங்களின் இசைப்பதிவு மேலாளர், ஆலோசகர், மற்றும் விற்பனை மேலாளராக பணியாற்றியுள்ள ஷாஜி, பல்வேறு பத்திரிகை களில் கட்டுரைகள் மற்றும் பத்திகள் எழுதியிருக்கிறார். விளம்பரத்துறையில் பனியாற்றுகிறார். புகழ்பெற்ற பல விளம்பரப்படங்களின் கதைக்கரு மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சலில் சௌதுரி ஃபவுண்டேஷன் ஆஃப் ம்யூசிக்கின் தென்னிந் திய காப்பாளரான ஷாஜி தற்போது சென்னையில் வசிக்கிறார். மனைவி ஜெஸி. மகள் கீதி சலிலா.
|