முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்
ஆர்.அபிலாஷ்
இலங்கையின் ராஜா மகிந்த ராஜபக்ச
இளைய அப்துல்லாஹ்
நானும் காந்தியும்
இந்திரஜித்
தளர் நடை போடும் சிங்க ராஜாக்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
சனிக்கிழமை இரவுகள்
M.ராஜா
அண்டைவீடு : பயணக்கட்டுரை
சுப்ரபாரதிமணியன்
கவிதை
பேரரசன் பார்த்திருக்கிறான்
மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)
பொம்மைகள் குவித்திருக்கும் அறை
நிலாரசிகன்
மொட்டு விரிதலென்பது
லதாமகன்
சிலந்தி
தேனம்மைலெக்ஷ்மணன்
இரண்டரை வயதும் கிண்டர் கார்டனும்
தனுஷ்
துயர்பறவையின் உடைந்த சிறகு..!
ஆறுமுகம் முருகேசன்
ஒற்றைக்கண்
கலாசுரன்
அர்த்தமற்ற ஓர் இரவின் அபத்தம்
இளங்கோ
பிம்பங்கள்
முரளி கண்ணன்
உன்னிடம் சொல்லிவிட வேண்டும்
வேல் கண்ணன்
சிறுகதை
புனிதர்
குருமூர்த்தி பழனிவேல்
மலை கோட்டையிலிருந்து மெரினாவுக்கு
அருள் பிரசாத்
வாழ்த்துக்கள்
ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
க.அம்சப்ரியா
நிலாரசிகனின் "வெயில் தின்ற மழை"
செல்வராஜ் ஜெகதீசன்
கோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..
ராமலக்ஷ்மி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
மொழியாக்கம் – ஆர்.அபிலாஷ்
இந்தவாரக் கருத்துப்படம்
நிலாரசிகனின் "வெயில் தின்ற மழை"
செல்வராஜ் ஜெகதீசன்

"தான் பிடித்த பட்டாம்பூச்சியை அதன் சந்தோசம் மாறாமல் இன்னொரு கைகளுக்கு மாற்ற முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்" - கல்யாண்ஜி.

சொல்லப் போனால், கவிதை என்றில்லை எந்தவொரு படைப்புமே, எதிர்ப்படும் நிகழ் கணங்களில் எழுத்தாளனை பாதித்த அல்லது சலனப்படுத்திய ஏதொன்றையும் அப்படியே இன்னொருவருக்கு கடத்தும் ஒரு முயற்சியே என்று தோன்றுகிறது. கதை, புதினம் போன்றவற்றை விட, கவிதைக்கென்று ஒரு சௌகர்யம் அதை உடனுக்குடன் பதிவு செய்வதன் சாத்தியம் அதிகம்.

 

நிலாரசிகனின் இந்த "வெயில் தின்ற மழை" தொகுப்பின் மொத்தக் கவிதைகளிலும் ஒரு மென்சோகம் தென்படுவதற்கு, இந்தக் கவிதைகள் எழுதிய காலகட்டத்தில் இருந்த நிலாரசிகனின் மனநிலை ஒரு காரணமாய் இருக்கலாம்.

 

வெகு நேர்த்தியான அச்சாக்கத்தில் உயிர்மை வெளியிட்டுள்ள இந்த தொகுப்பில் உள்ள அறுபது கவிதைகளில், ஏறத்தாழ 22 கவிதைகளில் "மரணம்'' ''செத்து'' ''மறித்து'' "இறந்து" போன்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. வாசிப்பின் சுவாரஸ்யத்தை இது சற்றே மட்டுப்படுத்துகின்றது. கவிதைகளின் முதல் வரியையே தலைப்புகளாக கொடுத்திருப்பதும், ஒரு அசுவாரசியத்தை கொடுப்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

இரவுத்தெரு (புதிய சொற்றொடர்!) என்று முடியும் ஒரு கவிதையில், நிலா சொல்லிச் செல்லும் இந்தக் காட்சிகளைப் பாருங்கள்:

 

"தெருநாய்களின் நகக்கீறல்களால்

கதறிக்கொண்டிருந்தது

தகர குப்பைத்தொட்டி..

நைந்த புடவையொன்றில்

குளிர்தவிர்க்க இயலாமல்

முனகிக் கொண்டிருந்தாள்

பிச்சைக்காரி ஒருத்தி..

மரக்கிளையில்

சிருங்கார சப்தம் எழுப்பி

புணரத் துடித்தன

தேன்சிட்டுக்கள்..

விதவிதமான சப்தங்களுடன்

மௌனத்தால் உரையாடியபடி

நீண்டு செல்கிறது இரவுத்தெரு."

 

தொகுப்பில் என்னைக் கவர்ந்த கவிதைகளில், இரண்டை, இங்கு தருகிறேன்.

1)

சிறுவனின் மணல்வீட்டை

அழித்துப்போனது அலை.

அவளது முதல் கோலத்தை

நனைத்துச் சிரித்தது மழை.

வேலியோர முள்ளில்

உடைபடுகிறது பலூன்காரனின்

வெண்ணிற பலூன்.

காரணம் அறியாமல்

அழுதுதீர்க்கிறார்கள் அவர்கள்.

2)

இந்தக் கவிதை

இப்பொழுதுதான் பிறந்திருக்கிறது.

தாலாட்ட யாருமற்ற பின்னிரவில்

பீறிட்டு எழும் அழுகை

ஏதுமின்றி வெகு இயல்பாய்

மலந்திருக்கிறது

கால்களை உதைத்துக்கொண்டு

கண்களை உருட்டியபடி

விழிக்கிறது

துணி விலக்கி பாலினம்

என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்

இக்கவிதை

சிரித்துக்கொண்டுதானிருக்கும்

"வாழ்க்கை வண்ணத்துப்பூச்சி மயமானது என்று யாரும் சொல்ல முடியாது. வண்ணத்துப் பூச்சியே அற்றது என்றும் யாரும் சொல்லிவிட முடியாது தானே".

கல்யாண்ஜியின் இந்த வரிகளையே நான் நிலாரசிகனுக்கு சொல்ல விழைகிறேன். நிலா தன் அடுத்த கவிதைத் தொகுப்பில், மகிழ்ச்சி நிறைந்த கவிதைகளையும் தர வேண்டும்.

(வெயில் தின்ற மழை - நிலாரசிகன் - உயிர்மை வெளியீடு, பக்கம் 72, விலை ரூ 50.)

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com