முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 26
ராஜ்சிவா
நகரத்தின் கதை பாகம் - 36
சித்ரா ரமேஷ்
அயல் பசி - 29
அயல் பசி-29
எண்ணங்கள் - 29
நர்சிம்
மதிப்புரை
எஸ்.ரா.வின் "மழை மான்" (சுகமான வாசிப்பனுபவம்)
உஷாதீபன்
சிறுகதை
மனக்கணக்கு
ராம்ப்ரசாத்
கவிதை
வீழ்தலின் நிழல்
எம்.ரிஷான் ஷெரீப்
சுயத்தின் கொலைகள்
வளத்தூர் தி.ராஜேஷ்
சிலுவைகளின் மரணம்
கலாசுரன்
என் ஊரும் ஒரு நாளும்...
ஹேமா
ஐந்தில் வளையாதது
செல்வராஜ் ஜெகதீசன்
செந்தணலின் வெப்பம்
பாலகுரு முரளிதரன்
இன்றும் காணோம்
சின்னப்பயல்
துறவுரை
வி.பாலகுமார்
இந்த வார கருத்துப்படம்
எண்ணங்கள் - 29
நர்சிம்

, , , , . , , 66, , , , ஒள, .

போகிற போக்கைப் பார்த்தால் இணையத்தில் இப்படித்தான் எழுதவேண்டி இருக்கும் என்று தோன்றுகிறது. ‘ம்என்ற எழுத்தை எழுதலாமாவெனத் தெரியவில்லை.

**

அமைதியாய்த் தூங்கிக்கொண்டிருந்த ராட்சத மிருகம் ஒன்று, துயில் எழுந்து, வில்லாய் வளைந்து, உடலை சிலுப்பிக் கொண்டதுபோல் காட்சியளித்தது நீலம்புயலுக்கு மறுநாள் காலையின் சென்னை நகரம். சிலுப்பிக் கொண்டதில், சாலையோரங் களெல்லாம் இலைகள் உதிர்ந்து பச்சை பூத்திருந்ததென்னவோ அழகாய்த்தான் இருந்தது. ஆனால், புயலுக்குப் பணிந்து நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கிடந்த மரங்கள்தான் மனதைக் கலங்கச் செய்தன. போக்குவரத்தையும்.‘புயல்கரையைக் கடக்கிறதுஎன்ற வரிகளைக் கேள்விப்பட்டிருந்த எனக்கு, கடப்பதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது அல்லது ஏற்படுத்திக் கொண்டேன். 31ம்தேதி, மதியம் 2:30க்கு மெரினாவில் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. அழிவைப் பார்ப்பதில் என்றுமே பேரானந்தம்தான் மக்களுக்கு. தரை தட்டிய கப்பல் மங்கலாய்த் தெரிய, கடற்கரை முழுதும் நீர்குளம் போல் தேங்கி இருந்தது.காற்று, நீரையும் மண்ணையும் குலைத்து அடித்துக்கொண்டே இருந்தது. கடலும் வானும் ஒரே புள்ளியில் நீர்நிறை வானமாய் இருந்தது. கொஞ்சம்கொஞ்சமாக, பிரம்மாண்டமான ஒரு வெள்ளையுருவம் நடப்பதுபோன்ற தோற்றம் உருவாகியது. மொபைலும் கையுமாய் இருந்தவர்கள் அனைவரும் பல கோணங்களில் படம்பிடித்தவாறு இருந்தார்கள். சிலர், மற்றவர்களை அங்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்துக்கொண்டே (செம்மைய்யாஇருக்குமா!)இருந்தார்கள். காற்றின் வேகம் அதிகரிக்கும்பொழுதெல்லாம் ஓவென்ற உற்சாகச்சத்தம் கடலைப்பிளந்தது.

நேரம் போகப் போக கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது. ஈரமணல் காற்றில் பறக்க, ‘நீலம் புயல்நடந்து கொண்டிருந்தது மகாபலிபுரம் நோக்கி.

செய்திகளில் பொதுமக்கள் அபிப்ராயம் சொல்பவர்கள் எங்கிருந்து உற்பத்தியாகிறார்கள் என்ற சந்தேகம் நெடுநாட்களாய் இருக்கிறது. எல்லாமே உயர்வுநவிற்சிதான். "பயங்கரமான காத்து சார்.அப்பிடியே பயங்கரமா அடிச்சது சார்" எனமைக்கின்முன்பேசிக்கொண்டேஇருந்தார்கள். பயங்கரமாக(!) இருந்தால்தான் புயல். தென்றலுக்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு தேவை இருக்காதே.

**

சென்ற வாரம் எண்ணங்கள்ஏன் வரவில்லை என்று லட்சக்கணக்கானோர் நினைத்திருந்தாலும் கேட்டது என்னவோ ஒரேஒருவர்தான். ‘வீடுஷிப்டிங்என்ற காரணத்தைச் சொன்னதும் அய்யய்யோஎன்று அலறினார். உண்மைதான், வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்று சொன்னவர், வீட்டை மாற்றியது இல்லைபோலும்.

முன்பெல்லாம் எதை எடுப்பது, எதை விடுப்பதுஎன்ற யோசனைகளிலேயே பல பொருட்கள் வரிசை கட்டி நிற்கும். நமக்குத் தேவையில்லை என்று தோன்றும் எல்லாப் பொருட்களும் மனைவிக்கு அதியத்தியாவசியப் பொருளாக இருப்பதன் காரணங்கள் புரியாமல் மொத்தமாக எல்லாவற்றையும் அள்ளி, அதையும் இதையும் தூக்கி முதுகுபிடித்து (ஹுக்கும்,இப்பிடிவாங்க) ஒருவழியாக செட்டாவதற்குள் நம் தொடர்பில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும், நாம் வீடுமாறி இருக்கும் விசயம்.

ஆனால், மூவர்ஸ் பேக்கர்ஸ் என்று ஒரு தனிஉலகம் இயங்குகிறது. மணிப்பூர், அஸாம் இளைஞர்கள். வாசலில் நின்றிருக்கும் நம்மை நெட்டித்தள்ளி உள்நுழையும் அவர்கள் வீட்டைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே. "அல்லாம்ஷிஃப்டிங்கா?"- இந்த இடத்தில் ஜாக்கிரதையாகப் பதில் சொல்லவேண்டும் எனத் தெரிந்துகொண்டேன்.அவசரப்பட்டு ஆமா எல்லாம்என்று சொல்லிவிட்டால், அவ்வளவுதான். சீப்பில் இருந்து எடுக்கப்பட்டாத தலைமுடியைச் சுருளைக் குப்பையில் போட மறந்து கண்ணாடிப் பக்கத்திலேயே வைப்பார்களே எல்லா வீட்டிலும், அப்படி நம் வீட்டிலும் வைக்கப்பட்ட அந்த முடிச்சுருளையும் ஒரு பேப்பரில் சுற்றி பேக்செய்து, புதுவீட்டில் கொண்டு வந்து அதே கண்ணாடி பக்கத்தில் வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். கொஞ்சம் அசையாமல் இருந்தால் நம்மீதும் ஒரு அட்டைப்பெட்டியை வைத்துக் கட்டிவிடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டது.

எவ்வளவு எளியதான செயலாக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டே இருக்கிறோம், பிறரைக் கடினப்படுத்தி.

**

ஏதேனும் ஒருபாடலைத் தினம் முழுக்க முணுமுணுத்துக்கொண்டே இருப்போம். காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.சில கவிதைகளும் அப்படித்தான். படிமமாக மனதில் படிந்துவிடும். அவ்வப்பொழுது அந்தப் படிமம் தோன்றிக்கொண்டே இருக்கும். எனக்கு இந்தக் கவிதை அப்படித்தான்.

"போன வருஷச்சாரலுக்கு

குற்றாலம் போய்

கைப்பேனா மறந்து

கால்செருப்பு தொலைந்து

வரும்வழியில்

கண்டெடுத்த

கல்வெள்ளிக் கொலுசு ஒண்ணு

கற்பனையில் வரைந்த

பொற்பாத சித்திரத்தை

கலைக்க முடியலியே இன்னும்"

-கவிஞர்.விக்கிரமாதித்யன்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com