முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
மும்பை பயங்கரம்: அம்பலமானது அரசியலர்களின் அற்பத்தனம்
மனோஜ்
சொல்லித் தேய்ந்த வார்த்தைகள், அழுதுத் தீராத துக்கம், கொட்டித் தீராத கோபம்...
மாயா
ஹேம்ந்த் கர்கரே : தேசத்து நாயகர்
அ.முத்துக்கிருஷ்ணன்
வி.பி.சிங் : சமூக மாற்றத்தின் பேருருவம்
அ.முத்துக்கிருஷ்ணன்
அப்பாக்களின் ஆட்டம்
அபிலாஷ்
வேறுவேறு உலகங்கள்
அ.ராமசாமி
நாடகச் சிந்தனைகள்
இந்திரா பார்த்தசாரதி
பாகப் பிரிவினையும் பங்காளிகளும்
செல்லமுத்து குப்புசாமி
நகிஸா ஒஸிமாவின் 'காளைச் சண்டை’
யமுனா ராஜேந்திரன்
அடி உதவுகிற மாதிரி
சுதேசமித்திரன்
வெளியிலிருந்து வருகிறவர்கள்: யாசிப்பவர்கள்
ந. முருகேசபாண்டியன்
தமிழுணர்வு பற்றிய மார்க்சிய நிலைபாடு
தமிழவன்
காத்திருத்தலும் ஒத்திப்போடுதலும்- சுந்தர ராமசாமியின் 'வருத்தம்'
பாவண்ணன்
கவிதை
சம்பவாமி யுகே யுகே
அனிதா சுனாமிகா
சிறகு வெளுத்தல்
நிஷாந்தன்
வனத்தின் தனிமரம்
குட்டி செல்வன்
கண்ணாடியில் ஓர் அந்நியன்
நிலாரசிகன்
அந்தரங்கம்
செல்வராஜ் ஜெகதீசன்
வர்ண டப்பா
இன்பாசுப்ரமணியன்
தன்வினை
காந்தி
இன்று
சரவணன்
பிசுபிசுப்பு
அனுஜன்யா
சிறுகதை
ஒற்றைச் சுவடு
எம்.ரிஷான் ஷெரீப்
பொது
காபி தெரியும் டீ தெரியும் காப்பர் டி தெரியாது
தமிழ்மகன்
நாட்டர் மாட்டு வாகடம் (எ) பசு வைத்தியம்
கழனியூரன்
புது நூல்
பயங்கரவாதம்
பாபுஜி
நடவடிக்கை
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஜேக் கெரவேக் கவிதைகள்
தமிழில்: ஆர்.அபிலாஷ்
பழமொழிகளும் சொலவடைகளும்
அன்புள்ள வாழ்வு; அலையற்ற நதி.
-
கடித இலக்கியம்
கி.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது.
-
சிற்றிதழ் பார்வை
குலவை
-
பதிவுகள்
தொகை இயல்
-
பழமொழிகளும் சொலவடைகளும்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கவிஞர்கள் போராட்டம்
-
உங்கள் கருத்துகள்
பாகப் பிரிவினையும் பங்காளிகளும்
செல்லமுத்து குப்புசாமி

இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களில் எதற்கு முதலிடம் என்று நினைக்கிறீர்கள்? சன் டி.வி டாப்-10 மூவீஸ் நிகழ்ச்சியில் ‘காதலில் விழுந்தேன்' படமே நம்பர் ஒன். அந்தப் படத்துக்கு இன்னமும் முதலிடமா என்று நண்பர்களிடம் கேட்டேன். ”கவலைப்படாதீங்க. தெனாவெட்டு ரிலீஸ் ஆகிருச்சுல்ல" எனப் பதில் சொல்கிறார்கள். அது சரி, கலைஞர் தொலைக்காட்சியில் ‘உளியின் ஓசை' முதலிடத்தில் இருக்கவில்லையா!


தி.மு.க வின் செல்வாக்கினால் வளர்ந்த சன் டிவியை அந்தச் செல்வாக்கை வைத்து மட்டுமே அழிக்க முடியாமல் போகலாம். அதே நேரம் இன்னொரு டிவியை உருவாக்கி வளர்க்க முடியாதா என்ன? முடிந்து விட்டுப் போகட்டும். அதனால் மக்களுக்கு என்ன பயன்?


பரவலான பார்வையாளர்களைக் கொண்ட சன் டிவி மீதான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘பிரச்சாரச் சாளரம்' என்ற பிம்பம் மாறியிருக்கிறது. திடீர் ஞானோதயம் ஏற்பட்டது போல ஜனநாயகத்தின் கடமையான அனைத்துத் தரப்புக் கருத்துக்களையும் வெளியிடும் நிலைக்கு அது வந்திருக்கிறது. இல்லாவிட்டால் ஜெயலலிதாவையும், வைகோவையும் அந்த அலைவரிசையில் எப்போது கண்டிருக்கப் போகிறோம்.


இப்போதெல்லாம் கருணாநிதி மீதான முதல் விமர்சனம் அவரது அக்கா மகனின் மகன் நடத்தும் சேனலில் இருந்துதான் வருகிறது. இப்படி ஒரு நிலைமையை இரண்டு வருடத்திற்கு முன்னர் அவர் மட்டுமல்ல நாமும் கூட கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டோம்.


சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை முதலில் எழுப்பியது சன் டிவிதான். முதல்வரின் முழு ஆசியோடு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருக்கும் ராசா மீது குற்றச்சாட்டு, பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக. நியாயமாகப் பார்த்தால் இந்த ஊழலைச் செய்திருக்க வேண்டியது தயாநிதி மாறன். குற்றச்சாட்டைச் சுமத்த வேண்டியது ஜெயலலிதா, அதை மறுக்க வேண்டியது சன். ஆனால் எல்லாமே தலைகீழாக நடக்கிறது. வரிந்து கட்டிக்கொண்டு ஊழலை அம்பலப்படுத்துகிறது சன். ராசாவின் ஊழலால் நாட்டுக்கு எவ்வளவு இழப்பு என்பதை விட தமது இடத்தில் ராசா அந்தப் பொறுப்பில் இருந்ததால் தமக்கு ஏற்பட்ட இழப்பு என்பதாகவே மாறன் சகோதரர்கள் இந்தப் பிரச்சினையை அங்கலாய்ப்புடன் நோக்க வேண்டியிருக்கிறது.

"எந்த விசாரணையாக இருந்தாலும் சந்திக்கத் தயார்" என்று சவால் விடுத்த ராசா இப்போது அமைதி காக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டுக்கு 60,000 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட்டுகள் பகிரங்கமாகச் சாடுகிறார்கள்.


தற்போது நடைமுறையில் உள்ளது 2G எனப்படும் இரண்டாம் தலைமுறை தொலைத் தொடர்புத் தொழில் நுட்பம். அடுத்த கட்டமாக மூன்றாம் தலைமுறையை (3G) நோக்கி நாடு நகரப் போகிறது.


2G அலைவரிசை ஒதுக்கீடு இப்போதும் கூட தனியார் நிறுவனங்கள் சிலவற்றுக்கு விற்கப்பட்டது. ஆனால் விலை என்னவோ 2001 ஆம் ஆண்டு விலை. Swan Telecom என்ற கம்பெனி ரூ. 1,537 கோடிக்கு உரிமம் பெற்றது. அதன் பிறகு அதன் 45 சதவீதப் பங்குகள் 900 மில்லியன் டாலருக்கு கைமாறியது. அதாவது 1,537 கோடிக்கு வாங்கிய உரிமத்தின் சந்தை மதிப்பு 2 பில்லியன் டாலர் அல்லது ரூ. 10,000 கோடி.


அதே போல ரூ.1,651 கோடிக்கு உரிமம் பெற்ற Unitech-Talenor நிறுவனத்தின் 60 சதவீதம் பங்குகள் ரூ. 6,120 கோடிக்கு கைமாறியுள்ளன என்று கம்யூனிஸ்ட்டு கட்சி சொல்கிறது. இந்த இரண்டு கம்பெனிகள் விஷயத்திலேயே இப்படியென்றால் ஒட்டு மொத்தமாக CDMA உரிமத்தையும் சேர்த்து 60,000 கோடிக்கு தேச வருமானம் பறிபோயிருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது.


அப்படி ஒரு ஊழல் நடந்திருப்பது உண்மையென்றால், அது கருணாநிதிக்குத் தெரியாமலோ அவருக்கு அதில் பங்கு இல்லாமலோ போயிருக்காது. மாறன் சகோதரர்களுக்கும், கலைஞர் குடும்பத்திற்கும் விரிசல் ஏற்படாமல் இருந்திருக்குமானால் இன்றைக்கு ராசா செய்யும் அளவு ஊழலை தயாநிதி செய்யாமல் தவற விட்டிருக்க மாட்டார். குறைந்த பட்சம் அவருக்கு அந்த அனுமதியும், வாய்ப்பும் மறுக்கப்பட்டிருக்காது.


ஆனால் காட்சிகளும், பாத்திரங்களும் இடம் மாறி விட்டன. தயாநிதிக்கு அந்த வாய்ப்பு, மத்திய அமைச்சர் என்ற அங்கீகாரம், கட்சிக்குள் எல்லையில்லா அதிகாரம் எல்லாமே பறிபோயிருக்கிறது. திடீரென நேர்ந்த தன் தந்தையின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்தில் முளைத்த தயாநிதி மாறனுக்கு எப்போதுமே மீடியா வெளிச்சம் கிடைத்து வந்தது. அல்லது உருவாக்கப்பட்டது.


தொடக்கத்தில் தி.மு.க வின் முகமாக அவர் டெல்லியிலே முன்னிறுத்தப்பட்டார். முரசொலி மாறன் மரணத்தினால் உருவான வெற்றிடத்தை எல்லா மட்டத்திலும் தயாநிதி பாய்ந்து நிரப்பினார். ஆங்கில மீடியாவுக்கு அவரைப் பிடித்துப் போனது. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினித் துறையில் மாறுதல்களை உண்டாக்கியதாகக் கூட எழுதினார்கள். தமிழகத்தில் பல முதலீடுகளைக் கொண்டு வந்து தொழில்களை ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாக சன் தொலைக்காட்சி பார்த்தவர்கள் உணர்ந்திருக்கலாம்.


அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார். ஒவ்வொரு விஷயத்திலும் ‘மீடியா பிரியரான' தயாநிதி பெயரெடுப்பதும், அவரே எல்லாவற்றிற்கும் காரணம் என்ற பிம்பம் உருவானதும் ஜெயலலிதாவைக் கடுமையான சூடேற்றியிருக்க வேண்டும். முரசொலி மாறன் ‘டைடல் பார்க்' கொண்டு வந்தார். அவரது மகன் தயாநிதி அதை விட அதிகமான தொழில்களைக் கொண்டு வந்திருக்கிறார் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அதை மறுக்கவோ, ஏற்கவோ நான் தலைப்படவில்லை.


இந்தப் பின்னணியில்தான் நாம் குறைக்கடத்திகள் தயாரிப்பு நகர் Fab city முதலீடு கை நழுவிப் போனதைக் கருத வேண்டியிருக்கிறது. மத்திய அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து ஐந்து மாநிலங்களின் முதல்வர்களுக்கு ஃபேப் சிட்டி குறித்து தான் எழுதிய கடிதத்திற்கு அனைவருமே பதிலளித்த போதிலும் ஜெயலலிதாவிடமிருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லை என்று தயாநிதி மாறன் குற்றம் சுமத்தினார்.


வாய்ப்பு ஆந்திராவுக்குச் சென்றது. தெளிவாகச் சொன்னால் அதிகாரச் சண்டையில் தமிழகம் தவற விட்ட அந்த வாய்ப்பை ராஜசேகர ரெட்டி அரசு கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி என்ற அனுகூலம் ஆந்திராவிற்கு இருந்தாலும் கூட, ஆளும் மத்தியக் கூட்டணியில் செல்வாக்கு மிகுந்த கருணாநிதி இருந்தும், அந்தத் துறையில் அமைச்சராக தயாநிதியே இருந்தும் அந்த வாய்ப்பை தமிழகம் தவற விட்டது மிகப் பெரிய பிழை.


தெலுங்கானா மேட்டுப் பகுதியில் இதற்கு இடம் ஒதுக்கியிருந்தாலும் கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தரப் போகிறார்களாம். ஹைதராபாத்க்கு அருகில் சர்வதேச விமான நிலையம் வரவிருக்கும் ஷாம்ஷாபாதீது க்குப் பக்கத்தில் 1,200 ஏக்கர் பரப்பளவில் உருவாகிறது ஃபேப் சிட்டி. 2015 க்குள் பதினைந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாகக் கணிக்கிறார்கள்.


மத்தியில் ஒரு ஆட்சியும், மாநிலத்தில் ஒரு ஆட்சியும் நடந்தால் குறிப்பிட்ட அந்த மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மந்தப்படும் என்ற கூற்று எந்த அளவுக்கு ஏற்புடையதெனத் தெரியவில்லை. அது உண்மையானால் 2006 இல் தமிழகத்தில் தி.மு.க அதிகாரத்துக்கு வந்த பிறகு எந்தச் சிக்கலும் இருந்திருக்காது.


ஒரு லட்ச ரூபாய் கார் தொழிற்சாலை மேற்கு வங்காளத்தில் மூடப்படும் நிலை உருவான போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வேறு இடம் பார்த்தது. மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் என எல்லா மாநிலங்களும் டாடாவுக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் தமிழகத்தில் நாம் மூச்சு விட வில்லையே! ‘இந்தியாவின் டெட்ராய்ட் ' ஆக சென்னை மாறும் என்று மன்மோகன் சிங்கே ஒரு முறை குறிப்பிட்டார். அப்படி இருக்கும் போது உலகிலேயே முக்கியமான மலிவு கார் முயற்சியாகக் கருதப்படும் ‘நானோ' சென்னையிலோ தமிழகத்திலோ தயாரிக்கப்படுவதற்கு நாம் முயற்சி எடுக்கவில்லையே!


நான் ஹைதராபாத் நகரில் சில ஆண்டுகள் வசித்திருக்கிறேன். ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட பகுதியாகக் காட்சியளித்த அந்த நகரம் இந்தியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றாக உருவெடுப்பதைக் கவனித்திருக்கிறேன். முழுக்க முழுக்க மாநில அரசின் முயற்சியால் மட்டுமே அது நடந்தது.


ஆனால் தமிழகத்தில் முன்னேற்றம் அல்லது வளர்ச்சி என்பது திருப்பூர் மற்றும் கோவையைப் போல தொழிலதிபர்களின் முயற்சியாலும், உழைப்பாலும் மட்டுமே நிகழ்ந்தாக வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ என்னவோ!


ஃபேப் சிட்டியால் உருவாகிற வேலை வாய்ப்புகளையும், நானோ கார் தொழிற்சாலையினால் ஏற்படும் தொழில் வளர்ச்சியையும் எப்பாடுபட்டாவது தமிழகத்திற்குக் கொண்டு வந்திருக்க வேண்டுமோ என்னவோ! அதைப் பெரிது படுத்தாமல் நாமெல்லாம் வாளாயிருந்து விட்டோமோ என்னவோ!


ஒரு வேளை தயாநிதி மாறன் இன்னமும் கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்து, மத்திய அமைச்சராகத் தொடர்ந்திருந்தால் நிறையத் தொழிற்சாலைகளும், முதலீடுகளும் தமிழகத்திற்கு வந்திருக்குமோ என்னவோ!


ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ் கூறும் நல்லுலகுக்கு கலைஞர் தொலைக்காட்சியும், 'மானாட மயிலாட' கலைப் பொக்கிஷமும் கிடைக்காமல் போயிருக்கும்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com