முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
காஷ்மீரில் நிகழும் கொடிய சித்ரவதைகள் பற்றிய விக்கிலீக்ஸ் அம்பலமும் மனிதாபிமான மதிப்பீடுகளில் தாழ்ச்சியடையும் இந்திய அரசும் அமெரிக்காவின் தந்திரமான முகமும்
மாயா
போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டது
அனலை நிதிஸ் ச. குமாரன்
அண்டை வீடு
சுப்ரபாரதிமணியன்
நான் கண்ட கூத்துகள்!
இந்திரஜித்
பொன் மயில்கள் நடனமிடும் சுரபி நதிக் கரையோரம்......
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
இலவசங்கள்
உஷாதீபன்
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 3
மனுஷ்ய புத்திரனின் கவிதைத் தொகுப்பு
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 4
உயிர்மையின் 12 நூல்கள்
உயிர்மை வெளியீட்டு அரங்கு: 5
எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல்
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 6
தமிழச்சி தங்கபாண்டியனின் நான்கு நூல்கள்
கவிதை
முகமூடி
ப.மதியழகன்
பின்னெப்போதிற்குமான வாழ்க்கைக்கென
லதாமகன்
வாழையடி வாழை
மழையோன்
வதைகளின் குரல்கள்..
இளங்கோ
இழவு விழுந்த வீடு
சந்தியா.
காத்திருப்பு
முரளி கண்ணன்
குழந்தைகளின் உலகங்கள்
வருணன்
நிழற்படம்
வேல் கண்ணன்
நானென்ற கம்பீரம்..
தேனம்மைலெக்ஷ்மணன்
சிறுகதை
அகிலா
சிரிஜா வெங்கடேஷ்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
மொழியாக்கம்: ஆர்.அபிலாஷ்
இந்தவாரக் கருத்துப்படம்
கணக்கு
பாபுஜி
Don't Disturb
பாபுஜி
நிழற்படம்
வேல் கண்ணன்

எல்லா தடங்களையும்
சேகரித்துக்கொண்டு செல்கிறது
காலம்.

மவுனங்கள்
மீதேறி கடக்க நினைக்கும் ஒவ்வொரு முறையும்
சறுக்கி சாய்ந்து விழுகிறது என் கணைகள்.
மரத்தின் உச்சியை வெறித்துக்கொண்டே
உட்கார்ந்திருக்கும்
அந்த பெரியவரை/அவரை பார்த்துக்கொண்டுயிருக்கும் என்னை
மேலதிகமாக என்ன நினைத்துவிட முடியும்
'பைத்தியம்'  என்பதை தவிர.

பின்மதிய வேளையின்
கடைவாய் எச்சில் ஒழுகும் உறக்கத்தை
திடுக்கிட்டு எழுப்பும் கனவுகளை
துரத்தியபடியே ஓடுகிறது பின்வரும் பொழுதுகள்.
மறக்க நினைத்த நிகழ்வுகளை
நினைவுப்படுத்தி செல்கிறது தூரத்திலிருந்து
கேட்கும் கனரக வாகனத்தின் உறுமல் சத்தம்.
கொஞ்சம் சிரிப்பும் நிறைய நிறைய வெளிச்சமுள்ள
அந்த நிழற்படம் இமை விட்டு விலகவேயில்லை
எழுதுவதற்கான வேகம்
தொடர்ந்து வரும் அடர் வெறுமை
தூக்கியெறிய சொல்கிறது
சீழ் பிடித்த நினைவுகள்
முதலானவைகளை.
(இசைபிரியாவிற்கு.... )

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com