முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிட்டியும் பாபாவும்
அப்துல்காதர் ஷாநவாஸ்
குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஐ.நா
அனலை நிதிஸ் ச. குமாரன்
Pundits from Pakistan
ஆர்.அபிலாஷ்
‘கல்கி’யின் சுண்டு: சுருங்குகிறதா விரிகிறதா உலகம்?
ஆர்.அபிலாஷ்
மந்திரப் புன்னகை: மாறுபட்ட முயற்சி
செல்லமுத்து குப்புசாமி
உறுபசி – நகரில் அலையும் பசித்த புலி
லதாமகன்
ஜாம்பவான்கள் கொல்லப்படுகிறார்கள்....?
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
வாழ்வின் சில வழிகள்
கிருஷ்ணன் நாயர், தமிழில்: ஸ்ரீபதி பத்மனாபா
கவிதை
பூனைக்குட்டிகள்.. அம்மா.. மற்றும் தாய் பூனை
சசிதரன் தேவேந்திரன்
கடவுள் நேர்முகத்தேர்வில் இருப்பதாகச் சந்தேகிக்கிறார்கள்..!
ஆறுமுகம் முருகேசன்
என்னொருவனைத் தவிர
இளங்கோ
ஒரு காட்சிப் படிமத்தின் வரைபடங்கள்
கலாசுரன்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
செல்வராஜ் ஜெகதீசன்
விட்டுப் போனவை
தேனம்மைலெக்ஷ்மணன்
கார்மேக ஊர்வலம்
ப.மதியழகன்
சிறுகதை
வன்முறை
சூர்யா
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர் அபிலாஷ்
இந்தவாரக் கருத்துப்படம்
வெற்றி
பாபுஜி
தொடரும் நிழல்
பாபுஜி
ஒரு காட்சிப் படிமத்தின் வரைபடங்கள்
கலாசுரன்

ஒரு நாள் முழுதுமாய்
பாதி மறையக்கூடும்
ஒரு காட்சிப் படிமத்தின்
வரைபடங்கள் ....

அதில்
பறக்கும்
ஒரு பறவையின்
ஒரு இறக்கையை மட்டும்
அழித்துவிடுவதில்
சில ஓவியங்கள்
முழுமையற்றதாக
காட்சிப்படுத்திவிட்டு

பாத்திரங்கள்
கதையறியாது
கூத்தாடுகையில்

இருபத்து ஒன்றாவது
விரலெழுந்து
சுட்டிக் காட்டும் குறிகளை
ஒருபோதும்
மறைக்க முயலுவதில்லை
ஒரு கதையின் கருப்பொருள்

அக்கதையில்
சிலநேரம்
இரவு வானில்
முட்களால் சூழப்பட்ட
அந்த நிலவின் மார்பில்
வைகறையின் மஞ்சள் பூசிப்
புறப்படும் ஒரு தென்றலுக்கு
சலனமற்ற ஓவியங்களில்
புகுந்து மடியும் வரையில்
தான் ஒரு தென்றலே அல்ல
என்பதுபோல்
நடித்துக்கொண்டிருக்கவேண்டியிருக்கும் ...

ஒரு நாள் முழுதுமாய்
முற்றிலும் மறையக்கூடும்
அந்தக் கதையிலான
ஏதேனும் ஒரு
காட்சிப் படிமத்தின்
வரைபடங்கள்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com