முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
பொங்குமா கடல் வளமும்......வண்டி சேர் சகதியும்.....கொள்ளையர் வசம்....?
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
ஒபாமா வந்தார்
நிஜந்தன்
மாட் ரெம்பிட்
கோ.புண்ணியவான்,
சிங்கம் கங்காரு மற்றும் வகார் யூனிஸ்: உருமாற்றங்களின் கதை
ஆர்.அபிலாஷ்
வித்தக நளன்கள்
அப்துல்காதர் ஷாநவாஸ்
குழந்தைகள் கடத்தலும் வர்க்கப் பார்வையும்
சஞ்சித்
'பொடா' சட்டத்திற்கு இணையான 'பிச்சை தடுப்புச் சட்டம்' குறித்துக் கிளம்பும் விவாதம்
மாயா
சென்னை-சில குறிப்புகள் 2: இப்படியும் ஒரு அரசு ஊழியர்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
சிங்கப்பூரின் புதிய பத்திரிகை
இந்திரஜித்
விமர்சகனின் குரல்
கிருஷ்ணன் நாயர், தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா
கவிதை
மரித்தோரின் திருநாளில்
மூலம் - ஜயந்த களுபஹன, தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
பெருங்கனவு
சசிதரன் தேவேந்திரன்
சின்னஞ்சிறிய ஊற்றுக் கண்
இளங்கோ
படிதல்
ஆறுமுகம் முருகேசன்
தீ அணைத்த மரம்
மழையோன்
தேற்ற ஒரு விதி
ஹேமா
நொடியில் விழுந்து மடியும் காலம் ...!
கலாசுரன்
ஆழி
ப.மதியழகன்
சிறுகதை
புள்ளயார்
சின்னப்பயல்
துன்பம் நேர்கையில்
தமிழ்மகன்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
இந்தவாரக் கருத்துப்படம்
திரிசங்கு
பாபுஜி
ஏலம்
பாபுஜி
நொடியில் விழுந்து மடியும் காலம் ...!
கலாசுரன்

கண்ணாடிச் சுவருள்
சிறையடைக்கப்பட்ட
கால முள் ஒன்றின் சலனம்
சொல்ல வந்ததைக்
காட்சிப் படுத்தும்
ஒரு இருள் இரவும்
மனதின் ஒருமையற்ற
தனிமையும் ..

அந்த முள்
இடைப்பட்ட
சலனமற்ற தருணத்தில்
சப்தங்களை
உடைத்து மௌனிக்க

நீட்சியற்ற
காலத்திற்கு மட்டும்
மரணிப்பதும்
மீண்டும் எழத் துடிப்பதுமாய்
நொடிகள் விழுந்து
மடிகின்றன

இப்பொழுது
பகலில் பயணித்த
அந்தப் பாதைகள்
இருளில் குளித்துக்கொண்டிருக்கும் ...

அப்பாதையோரங்களில்
சிலரின் வியர்வையோ
கண்ணீரோ
நட்சத்திரங்களாகும்
காட்சியை சிதைத்து

இன்னொரு
நசுக்கப்பட்ட எதிர்பார்ப்பின்
முகம்
நிலவெனவும்
அங்கு
பதிந்திருப்பதுண்டு

இவை அனைத்தும்
பார்க்க ஆவலாய்
ஓடிக்கொண்டிருக்கும்
கற்பனைகளின்
கால்களை
ஒடித்துப்போடக்கூடும்
ஒரு விழித்தலுக்கான
அழைப்பின்
ஓசை

அந்தக் கணத்தின்
ஒவ்வொரு
நொடியிலும் விழுந்து
காலமுட்களில்
மோதி உடையும்
நீர்க்குமிழி போன்றது
காலம் ....!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com