முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
விலைவாசியும் விருந்தோம்பலும்: குடும்ப நிதி நெருக்கடியால் நெருக்கடிக்கு உள்ளாகும் உறவுகள்
மாயா
தமிழ் சினிமாவில் கலை: ஆடும் கூத்து
ஆனந்த் அண்ணாமலை
அமீத் ஷாவை எதிர்கொள்ளல்
நிஜந்தன்
உருக்கி விட்டோம் வெள்ளிப் பனிமலையை
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
சுஜாதா
இந்திரஜித்
மலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை
கே.பாலமுருகன் - மலேசியா
முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிக்கப்பட்ட ஆதித் தீ
எம்.ரிஷான் ஷெரீப்
தவ்கே பெஸ்ஸா - (BIG BOSS)
அப்துல்காதர் ஷாநவாஸ்
கவிதை
காகம் திருவிருந்து கொள்கிறது
டெட் ஹ்யூஸ், தமிழில் ஆர்.அபிலாஷ்
நிலாவளர் காலம்!
ரசிகன்
நினைவுருகும் மெழுகு!
ஷம்மி முத்துவேல்
ஒன்றையொன்று
ராமலக்ஷ்மி
வெறுமை
ஸ்ருதி ரமணி
புன்னகை
ஜெய்
சந்தேகத்தின் பேரில் கைதாகுபவர்கள்...
ப்ரவீன் குமார்
சாவிக் கொத்து
கலாசுரன்
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்..
ஒதுங்கியும் பதுங்கியுமென்ன?
ம. ஜெயப்பிரகாஷ்வேல்
காற்றில் எழுந்தடங்கும் மரணத்தின் இசை..
இளங்கோ
ராணித் தேனீ
ப.மதியழகன்
சிறுகதை
சேகுவேராவின் சேற்று தேவதை
எம்.ரிஷான் ஷெரீப்,
பி.எம்.டபிள்யு. என்ஜின்
ராம்ப்ரசாத்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
சிறப்புப் பகுதி: தேர்தல் 2014
நகரத்துக்கு வெளியே ஒரு கூட்டம்
என்.விநாயக முருகன்
இந்தவாரக் கருத்துப்படம்
அமித் ஷா
பாபுஜி
தேர்தல் கணிப்பு
பாபுஜி
சாவிக் கொத்து
கலாசுரன்

இறுமாப்புகளின் சிறையிலிருந்து
மனதை மீட்டுவருவதாய்
ஒரு கற்பனை ...!

என் கற்பனைகளின்
உருவப் படிமங்களைப்
பார்ப்பதற்கான ஒளி
ஒரு ஆந்தையின் கண்களிலோ
ஒரு மின்மினியின் அடிவயிற்றிலோ
பத்திரமாக்கப்பட்டிருக்கும்...

அதன் வீச்சு
சிலநேரம்
கண்களின் காட்சியை
முற்றிலும் பறித்துவிடக்கூடும் ...

சிந்திப்பதற்கோ
பகிர்வதற்கோ
திறவாத கதவுகளின் சாவிக் கொத்து
மௌனத்திலேயே தொலைந்துவிட்டதாய் ...
அக்கதவுகள் மீண்டும்
திறவாமலேயே இருக்கும்

பேச்சிலும் சிந்தனைகளிலும்
செயல்பாட்டிலும்
நிரந்தரமாய் தங்கிவிட்ட
முரண்பாட்டை மறைக்க
இன்னும் அந்த மௌனித்த
முகமூடிகளுக்கு முடியாமல் போய்விடும்

கற்பனைகள்
கற்பனைகளாகவே இருக்கட்டும் ....!
இறுமாப்புகளின்
புதுச் சாவிக் கொத்திற்கான வளையம்
உருவாக்கப்பட்டுவிட்டது

இனி
ஒருபோதும் திறவாத
சில கதவுகளின் சாவிகளை
அதில் தொங்கவிடவேண்டும்....!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com