முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
உயிரோசை நூறாவது இதழ்
மனுஷ்ய புத்திரன்
புதிய தொடர் : தமிழ் சினிமாவில் கலை: நம் சொல்லாடல்கள்
ஆனந்த் அண்ணாமலை
இட் ஸ் நீயூ எக்ஸ்பீரியன்ஸ் ( its new experience)
அப்துல்காதர் ஷாநவாஸ்
ரஜினியும் கமலும் நல்ல நண்பர்கள்
இந்திரஜித்
பயனற்றுப் போகும் வேளாண் திட்டங்கள்
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
பணத்தின் அடையாளம்
நிஜந்தன்
கால்பந்து: சில அற்ப சந்தேகங்கள்
அப்துல்காதர் ஷாநவாஸ்
காமிக்ஸ் கனவுகள்
என்.விநாயக முருகன்
பிரச்சினையும், போராட்டமும்
சந்தியா கிரிதர்
மின்புத்தகங்கள்: திருட்டு, இலவசம் மற்றும் வியாபார உத்தி
ஆர்.அபிலாஷ்
குருதியும் கண்ணீரும் தோய்ந்த இடப்பெயர்வுகள்
சந்திரசேகர ஆஸாத்
தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் குறைந்து வரும் இடைவெளி: நக்கீரன் கோபால் முதல் சவுக்கு சங்கர் வரை
மாயா
கவிதை
அது கவனிக்கப்படலாம் ...!
கலாசுரன்
பிரிவின் வாசம்..!
இளங்கோ
வன்புணர்ச்சிக்கு உத்தேசம்..
ஆறுமுகம் முருகேசன்..
பாண்டித்துரை கவிதைகள்
பாண்டித்துரை
மர்மத்தின் முடிச்சு
ப.மதியழகன்
சூறாவளியின் பாடல்
எம்.ரிஷான் ஷெரீப்,
சிறுகதை
வெள்ளைக்குடைக்குள்
கே.பாலமுருகன்
நானும் உன் பின்னால் அங்கே வர
லதாமகன்
ரங்க சேவை
லாவண்யா சுந்தரராஜன்
'அது'
அஷ்ரஃப் சிஹாப்தீன்
இந்தவாரக் கருத்துப்படம்
ஜெபம்
பாபுஜி
பாறை
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
இட் ஸ் நீயூ எக்ஸ்பீரியன்ஸ் ( its new experience)
அப்துல்காதர் ஷாநவாஸ்

 ஸத்து கோஸோம் ஸத்து துளொர் (ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்

 வானத்தில் சுற்றித் திரிந்திருந்தாலும் பறவையின் நினைவு தன் கூட்டின் மீதே இருப்பதைப் போல எவ்வளவு தொலைவு சென்றாலும் தம் கால்கள் பிணைக்கப்பட்டுள்ள மாயக் கயிற்றின் இன்னொரு முனை பரோட்டாக் கடையிலும் அது சார்ந்த விசயங்களிலும் சுற்றிச் சுண்டி இழுக்கிறது. விமானப் பயணங்கள் செல்லும் போதெல்லாம் சாப்பிடுவதற்கு பரோட்டா ஏன் கொடுப்பதில்லை என்ற கேள்வி என்னுள் எழுந்து கொண்டிருந்தது. உலகத் தரம் வாய்ந்த சிங்கப்பூர் விமான நிறுவனத்தில் பணிபுரியும் நபர் எங்கள் கடைக்கு வாடிக்கையாக வந்து போய்க் கொண்டிருந்தார். அவரிடம் இந்தக் கேள்வியைப் போட்டு வைத்தேன் விரிவான தகவல்களைக் கொண்டு வந்தார்.

 

30000 அடி உயரத்தில் பறக்கும்போது சமைப்பது எளிதான காரியமில்லை எனவே 90% சமையல் வேலைகள் ஒப்பந்தக்காரர்களிடம் கொடுக்கப்பட்டு கீழிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. குறைந்த பாத்திரங்கள், இடப்பற்றாக்குறை மற்றும் சமதள அமைப்பிற்கு வசதிக் குறைவு இவைகளால் ஒரு குறிப்பிட்ட அளவே பயணிகளின் தேவைகளை நிறைவேற்ற இயலும் அத்தோடு Low humidity மற்றும் Dry-Air பயணிகளுடைய சுவை நரம்பைத் தன்ணுணர்வு இழக்கச் செய்துவிடும். பரோட்டா விமானங்களில் பரிமாறப்படாமலிருப்பதற்குக் காரணம் முதலில் சமைத்து Blast chiling process மூலம் உணவு ஆறியவுடன் 4’Cயிலிருந்து 5’Cக்கு உஷ்ண அளவைக் குறைத்து திரும்பவும் சூடாக்கும்போது அதன் மொறுமொறுப்புத் தன்மை முற்றாகக் குறைந்துவிடும்.

Crispy dishes, Sashimi, Warm souffles flamed bonnas போன்றவை விமானங்களில் பரிமாறப்படுவதில்லை. இறைச்சி, மீன் வகைகள் 46 மணி நேரத்திற்குள்ளும் காய்கறிகள் 24 மணி நேரத்திற்குள்ளும் உபயோகப்படுத்தப்பட வேண்டும். பெருமளவு உணவு சுகாதாரத்தின் தரம் விமான உணவுகளில் மேம்பட்டதாக இருக்கும். இதிலும் கூட உணவு நச்சு சம்பவம் 1992ல் அர்ஜென்டினா ஏர்வேஸில் நடந்திருக்கிறது. அதில் கடல் உணவில் நச்சு ஏற்பட்டு காலரா கிருமியினால் ஒருவர் இறந்துவிட்டார்.

2001ல் செப்டம்பர் தாக்குதலுக்குப் பிறகு எல்லா வகுப்பு பயணிகளுக்கும் உலோகக் கரண்டிகள் கொடுப்பது நிறுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அது தளர்ந்து வரும் வேலையில் 2003ல் சார்ஸ் நோய்த் தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் தடை. தொடர்ந்து இப்போது OK.

ஒரே நேரத்திலும் விமானச் சிப்பந்திகளைச் செயல் இழக்கச் செய்யும் உணவுகள் பயத்தால் பைலட் மற்றும் விமான சிப்பந்திகளுக்கு ஒரே இடத்திலிருந்து தயாராகும் அல்லது ஒரே மாதிரியான உணவுகளுக்கு இன்றும் தடை உள்ளது. சிங்கப்பூர் விமான நிறுவனத்தில் தினமும் சுமார் 5500 Meals தயார் செய்கிறார்கள் சுமார் 400 சமையல்காரர்கள் கையால் செய்யப்படக்கூடிய 10000 சாத்தே ஸ்டிக்குகள், 5000 ஆம்லெட் செய்கிறார்கள்.

சமீபத்தில் என் அம்மாவைப் பார்ப்பதற்கு இந்தியா சென்றிருந்தேன். விமானப் பயணத்தில் பக்கத்து இருக்கைப் பயணிக்கு நம் அலைவரிசை பொருந்திவிட்டால் அது மிக இன்பமான பயணமாக அமையும். அன்றைய பயணத்தில் என் பக்கத்தில் ஒரு தமிழர். ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார் முதலில் என்னைப் பற்றி விசாரித்தார். என்ன தொழில் செய்கிறீர்கள் என்றார் ''பரோட்டா மேன்'' என்றேன். அதற்கு அவர் நான் கடந்த 20 வருடங்களாக மாதம் 15 முறை விமானப் பயணம் செய்பவன். முதல் வகுப்பில் ஒரு பரோட்டா மேனாக நீங்கள் கிடைத்திருப்பது இதுதான் முதன்முறை என்று சொல்லிவிட்டு a new experience என்றார். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்த 3 மணிநேரத்தில் பல தடவை Well a new experience என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் ஒரு தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தில் (பிரான்ஸை த்தளமாகக் கொண்டது) பணிபுரிகிறார். சென்னையிலிருந்து மதுரை சென்று நோய்வாய்ப்பட்டிருக்கும் வாடிக்கையாளரைப் பாண்டிச்சேரி கூட்டிச் சென்று இரண்டுநாள் கழித்து ஆஸ்திரேலியா திரும்ப இருப்பதாகச் சொன்னார். என்னிடம் நீங்கள் பார்க்கும் ரொட்டித் தொழில் அதிகநேரம் நடக்காமல் நின்று கொண்டே பார்க்கும் வேலை வயது ஆக ஆக கால்கள்தான் பாதிக்கப்படும் ஏனெனில் இதயத்திலிருந்து வெகு தூரம் தள்ளியுள்ள அங்கமாகவும் மூளையிலிருந்து நரம்புகள் நெடும் பயணம் கண்டு வரவேண்டிய பகுதியாகவும் இருப்பதால் பாதிப்புகள் கீழிருந்து தொடங்குகின்றன. அதனால் நீங்கள் தினமும் நடை பயற்சியும் மருத்துவக் காப்பீடும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

அவர் சமீபத்தில் புத்தகம் வாசிப்பதற்கு தனக்கு நிறைய நேரங்கள் கிடைப்பதாகச் சொன்னார். இன்னும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெறும் வயது வந்துவிட்டது. நிறுவனத்தில் மாதம் 5-தடவைதான் தற்போது பயணத் திட்டத்தைக் கொடுக்கிறார்கள் என்றும் சொன்னார். எஸ்.ராவின் தொடரை வாரம்தோறும் படித்து விடுவாராம், அவர் எழுத்துக்களின் எளிமையும் அவரவர்களுடைய வாழ்வு அனுபவங்களை நோக்கி அவை வாசகர்களை இழுத்துச் செல்வதையும் சொல்லிக் கொண்டே வந்தார். அப்படியே ஆமாம், ஒரு சின்ன நாடான சிங்கப்பூரில் இவ்வளவு தமிழ் அமைப்புகள் ஒரே அமைப்பின் கீழ்வந்தால் ஒரு பலமாக இருக்காதா? உங்களுக்கு என்ன ''லேபிள்'' என்றார்? நான் அவருக்கு எஸ்.ரா சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்தபோது இதை ஒட்டிய கேள்விச் பதிலாகச் சொன்னதையே திருப்பிச் சொன்னேன்.

அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப பாத்திகட்டுகிறார்கள், நீரைத் தேக்குகிறார்கள், பயிர் விளைவிக்கிறார்கள் வெறுமனே தரிசாகக் கிடப்பதை விட இது வரவேற்கக் கூடியது தானே என்றேன். மறுபடியும் a new experience என்று சொல்லிக் கொண்டு சிங்கப்பூரில் சில கோப்பிக் கடைகளில் சிரிக்கும் புத்தர் சிலை கையில் ஒரு துணிப்பையை வைத்துக் கொண்டு நிற்கிறதே அதற்கு ஏன் வயிறு பெரிதாக இருக்கிறது, உங்கள் ரொட்டி பரோட்டாவைச் சாப்பிட்டுத்தான் பெரிதாகிவிட்டதா என்றார்? அந்தச் சிரிக்கும் புத்தரைப் பற்றி அவருக்கு விளக்கினேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிரிக்கும் புத்தரைப் போலவே ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ''பூடேய்.'' அவர் லியோங் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த ''ச்சான் மிக்கு.'' மிகுந்த கருணையும், தயாள குணமும் கொண்டவர். இவரை ஜப்பானிய ஹிண்டோ மற்றும் தாவோ மதங்கள் ஏழு கடவுள்களில் ஒருவராகக் கருதுகின்றன. அவர் வயிறு பெரிதாக இருப்பதற்குக் காரணம், அதில் கொடுத்து தீராத செல்வம் இருக்கிறது என்றேன். அத்துடன் அவர், நான் சென்றுவந்துள்ள நாடுகளைக் கேட்டுவிட்டு அவர் சென்ற நாடுகளைப் பட்டியலிட்டார். ரஷ்யா தவிர அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறார். சிங்கப்பூரின் தனித்தன்மை உணவு என்ன என்ற கேள்வியை எழுப்பினார்.

நான் சீன உணவு, மலாய்-இந்தோனேஷியா உணவு, இந்திய உணவு இம்மூன்றும்தான் சரியான பகுப்பாய்வாக இருக்கமுடியும். ஒன்றோடு ஒன்று கலந்து உருவான உணவு வகைகள் மற்றும் தனித்தன்மையான உணவு வகைகள் என்று நாம் பிரித்துப் பார்க்கலாம். இந்திய உணவுகளில் பிரியாணி, அச்சார், அப்பம், கறி, புட்டு மாயம், முர்த்தபாக்.

மற்ற கலாச்சாரத்துடன் கலந்து உருவான உணவு வகைகள் மீன் தலைக்கறி (சீன + தென்னிந்தியக் கலவை)

மீ கோரிங் (சீன + தமிழ் முஸ்ஸிம்கள் கலவை)

லக்ஷா (Laksha) (மலாய் + சீன உணவு)

சாத்தே மீகூன் தவ்வு கோரேங் (சீன + இந்தோனேஷிய கலப்பு)

கரிலக்ஷா ஆயம் (Icariy Laksha Ayam) பிரணாக்கன் கலவை

இத்துடன் சுவாரஸ்யமான ஒன்று, சிங்கப்பூரில் கிடைக்காத உணவு வகைகள் பல்வேறு நாடுகளில் சிங்கப்பூர் உணவு என்று அடையாளத்துடன் விற்கப்படுகின்றன.

 

ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் மஞ்சள் சேமியாவுடன் சில கறிப்பவுடரைக் கலந்து சிங்கப்பூர் நூடுல்ஸ் என்று விற்கப்படுகிறது. அதேபோல் இனிப்பு சாஸ் மற்றும் மீ கலந்து கனடா மற்றும் அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ளது சிங்கப்பூர் ப்ரைடு குவெதியோ. அதில் சிலவற்றை அவர் அந்த நாடுகளில் Try பண்ணியிருப்பதாகச் சொன்னார். நான் அவரிடம் பரோட்டா பெருமைகளை விடாமல் சொல்லிக் கொண்டே வந்தேன். முத்தாய்ப்பாக அவரிடம் கேட்டேன். உலகில் ஒரு மாற்றுக் கலாச்சார உணவை அதிகம் சாப்பிடும் இனம் உங்களுக்குத் தெரியுமா என்றேன்? யோசித்தார், சிங்கப்பூர் சீனர்கள்தான் என்றேன். அதுவும் ரொட்டி பரோட்டா என்றவுடன் oh it is new experience என்று மீண்டும் சொல்லிக்கொண்டார் இருவரும். மதுரை செல்ல உள்நாட்டு முனையத்திற்குச் சென்று மதுரை விமானம் புறப்பட அரைமணி நேரமே இருப்பதால் செக்யூரிட்டி கவுண்டரில் நின்று கொண்டிருந்தோம் அவர் அடிக்கடி பயணம் செய்பவர் முன்னெச்சரிக்கையாகத் தன்னிடமிருந்த தண்ணீர் பாட்டில்கள் அனைத்தையும் சீல் செய்து லக்கேஜில் போட்டுவிட்டார் உள்ளே நுழைந்தவுடன் விமானம் இன்னும் 2 மணிநேரம் தாமதம் என்று அறிவிப்புப் பலகை காட்டியது. இருவரும் கோப்பி ஆர்டர் செய்தோம். ஒரு தூணுக்கு ஓரமாக இருந்த கோப்பையில் சக்கரையைக் கொட்டி வைத்திருந்தார்கள். சக்கரையை முழுவதும் மறைத்துக் கொண்டு ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. கோப்பி குடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு மினரல் வாட்டர் பாட்டில் கேட்டேன், கடைக்காரர் 100ரூபாய் நோட்டைப் பார்த்தவுடன் சாரி’, சார் சில்லறை இல்லை. என்றார். அவரிடமும் முழு நோட்டாகத்தான் இருந்தது. கடையிலிருந்த நபர் தனக்கும் கடைக்கும் வியாபாரத்திற்கும் சம்பந்தமில்லாதது போல் வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்.

ஆஸ்திரேலிய நண்பர் ‘Mr.ஷாநவாஸ் இட்ஸ் நாட் நியூ எக்ஸ்பீரியன்ஸ் டு மீ என்றார்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com